சனி, 20 மே, 2023

2047-ம் ஆண்டுக்கான புதிய இந்தியாவின் செயல்திட்டத்தை மாணவர்கள் வகுக்க வேண்டும். - குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்


 தேசம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் 2047ல், அயராது உழைக்கவும், வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், புதிய இந்தியாவுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். என்று  மாணவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு  ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். சவால்களில் இருந்து வாய்ப்புகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்த அவர், "உங்கள் மனதில் ஒரு அற்புதமான யோசனையை நிறுத்துவதை விட ஆபத்தானது எதுவுமில்லை. உங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து உங்கள் திறனைப் பயன்படுத்திக் கொண்டு யோசனைகளைச் செயல்படுத்துங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 70வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு  துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். விழாவின் போது, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான குடியரசு  துணைத்தலைவர், பிரபல கல்வியாளர் டாக்டர் சுதா என். மூர்த்தி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரஞ்சன் கோகோய் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

புதன், 3 மே, 2023

மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவு காலப்போக்கில் மேலும் வலுவடையும்.- திரு ராஜ்நாத் சிங்


 3 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் இரண்டாவது நாளில்,  2023 மே 2-ம் தேதியன்று மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளிடம் (MNDF) ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் தாக்குதல் கப்பலை ஒப்படைத்தார். மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா அகமது தீதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திங்கள், 1 மே, 2023

பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம். - வைகோ

 தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க

மே நாளில் உறுதி ஏற்போம்.- வைகோ அறிக்கை

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’   வேலை செய்ய தொழிலாளர்கள்  நிர்பந்திக்கப்பட்டு பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என கசக்கிப் பிழியப்பட்டனர்.

1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.

வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்


 குப்பையில் கொட்டப்படும் கத்தரி, தக்காளி, வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்! 

- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை உழவர்கள் சாலையோரங்களிலும், குப்பைமேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்காத போது அவை குப்பையில் கொட்டப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அச்சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாதது வேதனையளிக்கிறது.