ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 மே, 2023

வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்


 குப்பையில் கொட்டப்படும் கத்தரி, தக்காளி, வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்! 

- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை உழவர்கள் சாலையோரங்களிலும், குப்பைமேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்காத போது அவை குப்பையில் கொட்டப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அச்சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாதது வேதனையளிக்கிறது.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்! - DR.S.ராமதாஸ்

 போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்!  - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

புதன், 20 ஜூலை, 2022

52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க

முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது.

செவ்வாய், 19 ஜூலை, 2022

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் புதிய தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.- DR.S.ராமதாஸ்


 இலங்கைக்கு உதவி: இனச் சிக்கலைத்

தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்தும், அந்த நாட்டிற்கு உதவுவது குறித்தும் தீர்மானிப்பதற்காக  தில்லியில் நாளை நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் நிபந்தனைகள் இல்லாமல் செய்யப்படும் உதவிகள் அங்கு நிலவும் இனப்பாகுபாட்டை அதிகரிக்கவே வகை செய்யும் என்பதால், அதை உணர்ந்து மத்திய அரசு உத்திகளை வகுக்க வேண்டும்.

வியாழன், 7 ஜூலை, 2022

மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து ஓபிசி தொகுப்பு முறை உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 ஓபிசி உள்ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய

அறிக்கை பெறுவதில் தாமதம் கூடாது! - DR.S.ராமதாஸ்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக  அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 13-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் 3 மாத பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்ட ஆணையம், நான்கரை  ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

வெள்ளி, 1 ஜூலை, 2022

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் புதிய மாவட்டங்கள், வட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - DR.S.ராமதாஸ்

 புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை

அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

திங்கள், 20 ஜூன், 2022

மாறாத அவலம்: வட தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம் தேவை! - DR.S.ராமதாஸ்


மாறாத அவலம்: வட தமிழ்நாடு கல்வி

மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம் தேவை! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

வியாழன், 16 ஜூன், 2022

கருத்துக்கணிப்புகளுக்குத் தடை: தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 கருத்துக்கணிப்புகளுக்குத் தடை: தேர்தல்

சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

பொதுத்தேர்தல்களில் ஒருவர் ஒரு தொகுதிக்கும் கூடுதலாக போட்டியிடக் கூடாது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம்  வலியுறுத்தியுள்ளது. சமவாய்ப்புடன் தேர்தலை நடத்துவதற்கான இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

திங்கள், 13 ஜூன், 2022

வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்துகொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம்

தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றி வரும் 219 ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. 

செவ்வாய், 7 ஜூன், 2022

சென்னை ஐ.ஐ.டி.யில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும்.- DR.S.ராமதாஸ்



 சென்னை ஐஐடி: பின்னடைவு பணியிடங்களை

நிரப்புவதிலும் சமூகநீதியை மறுப்பதா? - DR.S.ராமதாஸ்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 49 உதவிப் பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஆள்தேர்விலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எத்தனை முறை எச்சரித்தாலும் கூட இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

செவ்வாய், 24 மே, 2022

விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்



விலை உயர்வை தாங்க முடியாது: சமையல்
எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான் என்றும், அதை மீண்டும்  வழங்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ள கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்படாவிட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி விடும்.

சனி, 21 மே, 2022

விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

 விலை உயர்வை தாங்க முடியாது: சமையல்

எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான் என்றும், அதை மீண்டும்  வழங்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ள கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்படாவிட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி விடும்.

திங்கள், 9 மே, 2022

வாழ்வுரிமையை காக்க தீக்குளித்து இறந்த கண்ணையாவுக்கு வீரவணக்கம்: அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக! - DR.S.ராமதாஸ்

 வாழ்வுரிமையை காக்க தீக்குளித்து இறந்த கண்ணையாவுக்கு வீரவணக்கம்: அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக!

  - DR.S.ராமதாஸ்

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து தீக்குளித்த பா.ம.க.  மாவட்ட துணை செயலாளர் கண்ணையா மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள்  மற்றும் பா.ம.க.வினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 6 மே, 2022

மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக் கொலை: மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? - DR.S.ராமதாஸ்



மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக் கொலை: மிரட்டிப் பணம் பறிக்கும்
கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? - DR.S.ராமதாஸ்

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் மாமூல் தருவதற்கு மறுத்த மருந்தக உரிமையாளரை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சில கும்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாகராஜன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சனி, 23 ஏப்ரல், 2022

வீட்டு வசதி வாரிய வீடுகள்: தனியாருடன் சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காது! - DR.S.ராமதாஸ்

 வீட்டு வசதி வாரிய வீடுகள்: தனியாருடன்

சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் இனி தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் கட்டப்படும்; கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின்படி வீட்டு வசதி வாரியத்திற்கு கிடைக்கும் வீடுகளைக் கூட தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் விற்பனை செய்ய விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்திருக்கிறார். இந்தத்  திட்டம் செயல் வடிவம் பெற்றால் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும்.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர்,‘‘வீட்டு வசதி வாரிய நிலங்களை தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் கொடுத்து கூட்டு முயற்சியில் வீடுகள் கட்டப்படும். அதற்காக தனியார் நிறுவனங்களுக்கு பணம் தரத் தேவையில்லை. மாறாக தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான வீடுகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள வீடுகளைத் தருவார்கள். அதை விற்று பணமாக்கினால் போதுமானது’’ என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் முன்மொழிந்துள்ள திட்டம் வீட்டு வசதி வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை விட  மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அமைச்சர் தெரிவித்துள்ள திட்டத்தை செயல்படுத்தினால் வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் எளிமையாகும்; வீட்டு வசதி வாரியத்திற்கு லாபம் கிடைக்கும்; ஆனால், வீட்டு வசதி வாரியம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அது நிறைவேறாது; மாறாக வீட்டு வசதி வாரியமும் ஒரு வீட்டு வணிக நிறுவனமாக மாறி விடும். இது தேவையில்லை.

இந்தியா விடுதலை அடைந்த ஆண்டிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்டு விட்டது. வீட்டு வசதி வாரியத்தின் இணையதளத்தில், அதன் நோக்கமாக, ‘‘வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ‘அனைவருக்கும் வீடு’ என்ற சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவு (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG), மத்திய வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு (HIG) வீடுகள் வழங்கிட சிறந்த நோக்கத்துடன் செயல்படுகின்றது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற இலக்கை இதுவரை எட்ட முடியவில்லை என்றாலும் கூட, அந்த இலக்கை நோக்கி வீட்டு வசதி வாரியம் பயணிக்கிறது என்பதை மறுக்க முடியாது. வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏழைகளாலும் வீடுகள் வாங்க முடிகிறது. எடுத்துக்காட்டாக சென்னையின் பல பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர அடி ரூ.15,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டால், வீட்டு வசதி வாரிய வீடுகள் ரூ.7,000 முதல் ரூ.8,000 என்ற அளவில், பாதி விலையில் விற்கப்படுகின்றன. வீட்டு வசதி வாரிய வீடுகளில் வாகன நிறுத்தம் போதிய அளவில் இல்லாமை உள்ளிட்ட சில வசதிகள் குறைவாக இருந்தாலும் கூட கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை நிறைவேற்றுகிறது.

 கூட்டு முயற்சியில் தனியாருடன் இணைந்து கட்டப்பட்டால் வீடுகளில் சில வசதிகள் கூடுதலாக இருக்கலாம். ஆனால், அந்த வீடுகளின் விலைகள் ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொடும் உயரத்தில் இருக்கும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனியார் நிறுவனங்களின் வீடுகளை  உயர்வகுப்பினரால் மட்டுமே வாங்க முடியும். கூட்டு முயற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏழைகளின் வீட்டுக் கனவு கலைந்து விடும். அதிலும் குறிப்பாக, நிலம் கொடுத்ததற்கு ஈடாக வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கப்படும் வீடுகளையும் கட்டுமான நிறுவனத்திடமே வாரியம் விற்கும் விதி செயல்படுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்னை போன்ற மாநகரங்களில் வீடு வாங்குவதை மறந்து விடலாம்.

தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வீடுகளை கட்டுவதற்காக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ள காரணத்தை ஏற்க முடியாது. வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமாக கட்ட முடியவில்லை என்பதால் தான், கூட்டு முயற்சியில் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தலைசிறந்த பொறியாளர்கள் வீட்டு வசதி வாரியத்தில் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு தனியாருக்கு இணையான தரத்துடன் வீடுகளை கட்ட முடியவில்லை என்று கூறுவது நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவதாகும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்.

எனவே, தனியார்துறை கூட்டு முயற்சியில் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வீட்டு வசதி வாரியமே அதன் மேற்பார்வையில் தரமான வீடுகளைக் கட்டி, ஏழை & நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


திங்கள், 18 ஏப்ரல், 2022

மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.- DR.S.ராமதாஸ்

 ஜி.எஸ்.டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள்

பாதிக்கப்படுவர்: தொழில் வீழ்ச்சியடையும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

வியாழன், 7 ஏப்ரல், 2022

எம்.பி.பி.எஸ்: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! - DR.S.ராமதாஸ்


எம்.பி.பி.எஸ்: அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. மாணவர் நலன் காக்கும் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டில் 6033 அரசு பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.- DR.S.ராமதாஸ்

 மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது:

பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 6033 அரசு பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. மாணவர்களின்  பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வலியுறுத்த எழுவர் குழு! - DR.S.ராமதாஸ்


பாட்டாளி மக்கள் கட்சி அவசர செயற்குழுக் கூட்டம்  -   தீர்மானம் 

வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம்: 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து வலியுறுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் எழுவர் குழு!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். கையெழுத்திடத் தெரியாத மக்களும், பள்ளிப்படிப்பை முடிக்காத இளைஞர்களும் இந்த சமுதாயத்தில் தான் அதிகம். கல்வியறிவு பெற முடியாததால் வாழ்க்கையில் முன்னேற முடியாதது ஒருபுறமிருக்க, தங்களின் நிலங்களை ஏமாற்றுக்காரர்களிடம் மிக அதிக அளவில் இழந்த வரலாறும் இந்த சமுதாயத்திற்கு தான் உண்டு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் தான் இந்த சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்று கருதிய மருத்துவர் அய்யா அவர்கள், 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 43 ஆண்டுகளாக நடத்தி வரும் சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவே வன்னிய சமுதாயத்து மக்கள் ஓரளவாவது கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கின்றனர்.

ஞாயிறு, 27 மார்ச், 2022

9,19,400-ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா? - DR.S.ராமதாஸ்

 9,19,400-ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா? - DR.S.ராமதாஸ்

நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு  தமிழ்நாட்டிலும், 9,17,875 ஆவது இடத்தைப் பிடித்தவருக்கு  இராஜஸ்தானிலும், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித்  தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்ற வினா எழுகிறது.