E.R.ஈஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
E.R.ஈஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்



நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும்.

 மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்

 வரலாறு காணாத அளவிற்கு சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நூல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி இருக்கிறது. துணி தயாரிப்பு தொழிலிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 25% முதல் 40% வரை நூல் விலை ஏறி இருக்கிறது. துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள் புதிய விலையில் நூலை வாங்கி தங்கள் ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

வியாழன், 1 ஜூலை, 2021

ஜெய்ஹிந்த் என்ற உணர்வு முழக்கம் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது.- E.R.ஈஸ்வரன் MLA


 தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆட்சிகளில் நிகழ்த்திய ஆளுநர் உரையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி முந்தைய அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய கட்டுப்பாட்டில் இருந்ததையும், இப்போதைய அரசு யாருக்கும் கட்டுப்படாத தலைநிமிர்ந்த அரசாகவும் செயல்படுவதை குறிப்பிட்டிருந்தேன். ஒன்றிய அரசோடு உறவுக்கு கை கொடுப்பது வேறு. தன்னை காப்பாற்றிக் கொள்ள தலைகுனிவது வேறு. ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தலைகுனிந்து இருந்த தமிழக அரசு மே 2-ஆம் தேதிக்கு பிறகு தலைநிமிர்ந்து இருக்கிறது என்று பலராலும் சொல்லப்பட்ட உண்மைதான் நான் குறிப்பிட்டேன். 

சனி, 19 ஜூன், 2021

தமிழக முதலமைச்சர் அவர்கள் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை ஈரோடு பெருந்துறைக்கு பரிசீலிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது.- E.R.ஈஸ்வரன்


 எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வேண்டுமென்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கேட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொங்குநாட்டு மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றி. - E.R.ஈஸ்வரன்

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் அவர்கள் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களிடம் வலியுறுத்தி உள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

24 மணிநேரமும் பணியாற்றுகின்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு குறை வைக்காமல் தேவையானவற்றை செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் காலத்தின் தேவை.- E.R.ஈஸ்வரன்


முதல் கொரோனா அலையில் ஆர்வம் காட்டியது போல மருத்துவர்களும், செவிலியர்களும் இரண்டாவது அலையில் காட்டவில்லை.

முதல் கொரோனா அலை கடந்த வருடம் பரவிய போது மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் காக்கும் கடவுள்களாக போற்றப்பட்டார்கள், வணங்கப்பட்டார்கள். பலரும் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து மரியாதை செய்தார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் அவர்களுக்காக நாட்டு மக்கள் அனைவரையுமே பாராட்டி கைதட்ட சொன்னார். மாநில அரசுகளும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள். சிறப்பு ஊதியமும், காப்பீட்டு திட்டங்களும்  அறிவிக்கப்பட்டன. ஆனால் கொரோனா முதல் பரவல் குறைய ஆரம்பித்த உடன் மருத்துவத்துறைக்கான வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது. - E.R.ஈஸ்வரன்


2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் 5 இலட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா.

புதன், 6 ஜனவரி, 2021

பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.-E.R.ஈஸ்வரன்


 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பாலியல் குற்றத்தின் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இன்னும் இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர் பொறுப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியே தெரிந்த போதே இதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டு பலராலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதிமுகவும், தமிழக அரசும்  உண்மையை வெளியுலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கவே முயற்சித்தது.

புதன், 30 டிசம்பர், 2020

கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்

 



கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி தலைவர் கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று தலைவர் கோவை செழியன் அவர்களின் 90-வது பிறந்தநாளை கொண்டாட கொங்கு மண்டலம் முழுவதும் ஆங்காங்கே அவருடைய உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் செய்யப்பட்டது. கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று இராசிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவை செழியன் அவர்களுக்கு மரியாதை செலுத்த செய்யப்பட்ட ஏற்பாடுகளை அதிமுகவினர் அராஜக போக்கில் தடுத்து அகற்றியதை வன்மையாக கண்டிக்கின்றோம். 

புதன், 9 டிசம்பர், 2020

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்ததன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள். தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விலை நிர்ணயம் அதிகாரம் சென்றால் என்ன விளைவை மக்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதற்கான உதாரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை வரலாறு காண அளவில் குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்பதை நாம் அறிவோம். கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய் இலாபமடைய வேண்டுமென்று மத்திய அரசு திட்டமிட்டு அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

புதன், 2 டிசம்பர், 2020

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி இருக்கிறார் தமிழக முதல்வர். பாமகவை வன்முறை கட்சியாக காட்டுவதில் வெற்றி அடைந்திருக்கிறார்.- E.R.ஈஸ்வரன்


 பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தரப்பில் இடமாற்றம் செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதாக திரு.அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். அரசாங்கத் தரப்பில் அனுமதி அளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்துவதற்கு இடத்தை ஒதுக்கி தந்துவிட்டு பல மாவட்டங்களில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னை நோக்கி வந்த பின்னால் தடுத்து நிறுத்தியது ஏன் எனத் தெரியவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளி, 6 நவம்பர், 2020

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்


 நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாக தொழிற்சாலைகள் தரப்பிலும், தொழில் சார்ந்த பல அமைப்புகள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான தேவையை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்சாலைகள் 120  ஏக்கர் வரை வைத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன் 60 ஏக்கர் வைத்து  கொள்ளலாம் என்று இருந்ததை இரண்டு மடங்கு ஏற்றி 120 ஏக்கராக மாற்றியிருப்பது தொழிற்சாலைகளின் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

புதன், 4 நவம்பர், 2020

இன்றைய சூழலில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது.- E.R.ஈஸ்வரன்

 


இன்றைய சூழலில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது.- E.R.ஈஸ்வரன்

கொரோனா நோய் பரவல் இன்னும் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது நாளுக்கு நாள் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளித்தாலும் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்குமா என்ற அச்ச உணர்வு அனைவரது மனதிலும் இருக்கிறது. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் தமிழக அரசின் உத்தரவுகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. 

திங்கள், 2 நவம்பர், 2020

மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியில் ஆய்வுக்கு வர தயாரா ? - E.R.ஈஸ்வரன்


நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் இடிந்ததற்கு தரம் குறைவே காரணம்.

நாமக்கல் மாவட்டத்தில் தரம் குறைவாக நடக்கின்ற கட்டுமான பணிகளை இல்லையென்று மறுக்கின்ற மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியில் ஆய்வுக்கு வர தயாரா ?.

நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் தருவாயிலேயே இடிந்து விழுந்திருப்பது அரசு கட்டிடங்கள் கட்டப்படும் தரத்தை எடுத்துரைக்கிறது. மக்கள் உயிர்காக்கும் மருத்துவமனையினுடைய கட்டிடமே இடிந்து விழுந்து பல பேருக்கு காயத்தை ஏற்படுத்தி இருப்பது வேதனையளிக்கிறது. இந்த உண்மையை மறைத்து மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் தரம் குறைவாக இருந்ததால் நாங்களே இடித்துவிட்டோம் என்று  சொல்லியிருப்பதை நாமக்கல் மக்கள் நகைச்சுவை கலந்த வேடிக்கையாக பார்க்கிறார்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்.- E.R.ஈஸ்வரன்

 

மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்.- E.R.ஈஸ்வரன்

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில்  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. 

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.- E.R.ஈஸ்வரன்


 பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களும், டீஸரும் ஆபாசம் நிறைந்ததாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதுப்போன்ற படங்கள் வெளிவந்தால் இளைய சமுதாயம் முற்றிலும் சீர்கெடும். தமிழகம் கலாச்சாரமும், பண்பாடும் நிறைந்த மண். இம்மண்ணில் கலாச்சார சீரழிவை உருவாக்குவதற்காக ஒரு சிலர் ஆபாசமான படங்கள் எடுத்து அண்மைக்காலமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

திரைப்பட தணிக்கை குழுவும் இதுப்போன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதால் தொடர்ந்து எந்தவொரு தடையுமின்றி திரைக்கு வருகிறது. இது மாதிரியான படங்கள் வெளிவருவதை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரட்டை வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்த இரண்டாம் குத்து படம் திரைக்கு வந்தால் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க கூடியதாக அமையும். பள்ளி பருவ மாணவர்கள் மனதில் தவறான தாக்கத்தை உருவாக்கும். 

தமிழக முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களால் பெற்றோர்கள் அனைவரும் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக திரையுலகம் படைப்பு என்ற பெயரில் மிக மோசமான போக்கை கடைப்பிடிப்பது ஏற்புடையதல்ல. தமிழ் சமூகத்திற்கு ஏற்றவாறு நல்ல படங்களை எடுக்க வேண்டும். பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தமிழகம் முழுவதும் எந்தவொரு தியேட்டரிலும் திரையிட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து தவறான காட்சிகளை நீக்க வேண்டும்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும். - E.R.ஈஸ்வரன்



புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும். - E.R.ஈஸ்வரன்

விவசாய விளைபொருட்கள் மூலம் பெரிய வியாபாரிகள் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. கீழ்கண்ட சட்டங்கள்தான் அந்த மூன்றும்.

1. விளைவிப்பதற்கு உண்டான சட்டம்.

2. கொள்முதல் செய்வதற்கான சட்டம்.

3. கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பதற்கான சட்டம்.

புதன், 16 செப்டம்பர், 2020

விவசாய மின் இணைப்புகள் நடைமுறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.- E.R.ஈஸ்வரன்,



விவசாய மின் இணைப்புகள் நடைமுறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெற வேண்டுமென்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நடைமுறை தான் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வந்தது. அதேபோல இலவச மின் இணைப்புக்கான சட்டத்திட்டங்களும், நடைமுறை சிக்கல்களும் ஏராளம். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று ஏங்காத விவசாயிகள் கிடையாது. இப்போது அதற்கெல்லாம் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. 

வியாழன், 3 செப்டம்பர், 2020

அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


 

அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு  இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.

இன்றிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்ற மாநில அரசு மாவட்டங்களுக்குள்ளே பொது போக்குவரத்தை அனுமதித்திருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

சாமானியர்கள் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்புள்ள கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததை கண்டிக்கிறோம். - E.R.ஈஸ்வரன்


சாமானியர்கள் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்புள்ள கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததை கண்டிக்கிறோம். - E.R.ஈஸ்வரன்

ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடக்கும் போது தான் கிராமத்தில் என்ன பணிகள் நடக்கிறது என்றும், ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சாமானிய கிராம மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஊராட்சிகளில் நடக்கின்ற தரமில்லாத பணிகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கவும் வாய்ப்பாக அமையும். கடந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை மக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கிராம மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த கிராமசபை கூட்டங்களை தனிமனித இடைவெளியுடன் நடத்துவதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசினுடைய துரித நடவடிக்கை மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றும். - E.R.ஈஸ்வரன்


நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றில் அஸ்கா சர்க்கரை கலப்படத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டு சர்க்கரையாக மாற்றப்படுகின்ற அஸ்காவுக்கு அதிக விலை கொடுத்து பொதுமக்கள் ஏமாறுகிறார்கள்.

பெரிய சர்க்கரை ஆலைகளில் ரசாயனம் உபயோகித்து வெள்ளை சர்க்கரையாக தயாரிக்கப்படுகின்ற அஸ்கா சர்க்கரையை பயன்படுத்தி வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு சர்க்கரைக்கோ,  வெல்லத்திற்கோ மாறி வருகிறார்கள். அஸ்கா தயாரிக்கின்ற ஆலைகளில் சர்க்கரையை வெள்ளை நிறமாக்குவதற்கு பயன்படுத்துகின்ற ரசாயனம் உடம்புக்கு கெடுதல் என்று சுகாதாரம் கருதி வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

வெள்ளி, 31 ஜூலை, 2020

வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தேவையான இ-பாஸ் முறையை கைவிட வேண்டும். - E.R.ஈஸ்வரன்


வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தேவையான இ-பாஸ் முறையை கைவிட வேண்டும். - E.R.ஈஸ்வரன்

தமிழக அரசு ஊரடங்கில் எவ்வளவு தளர்வுகள் அறிவித்தாலும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதால் தொழில்துறை இயங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுமே இ-பாஸ் பெற்று பயணிப்பது என்பது இயலாத ஒரு காரியம். மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக உண்மைநிலை சொல்லி அரசு கேட்கும் தகவல்கள் அனைத்தையும் கொடுத்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு செல்பவர்கள் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை பெற முடிவதில்லை.