கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

அடித்தட்டு மக்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். சாமானிய மக்களுடைய தேவைகளை, கூக்குரலை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.- E.R ஈஸ்வரன்


 அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை.

மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஒரு திரைப்படம் பார்க்கும் போது இடைவேளைக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் நிறைவு என்று போட்டு முடித்தது போல இந்தியா முழுவதும் எதிர்பார்ப்புகளோடு அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சியோடு ஏமார்ந்து போய் இருக்கிறார்கள். 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான ஆக்கபூர்வமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் ஏற்றுமதி மிக குறைவாக இருக்கின்ற சூழ்நிலையில் அதை அதிகப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உடைய இரத்தத்தை உறிஞ்சி தான் தனியார் பெரு தொழில் நிறுவனங்கள் லாபத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 

சனி, 20 நவம்பர், 2021

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்



நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும்.

 மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்

 வரலாறு காணாத அளவிற்கு சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நூல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி இருக்கிறது. துணி தயாரிப்பு தொழிலிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 25% முதல் 40% வரை நூல் விலை ஏறி இருக்கிறது. துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள் புதிய விலையில் நூலை வாங்கி தங்கள் ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

வியாழன், 1 ஜூலை, 2021

ஜெய்ஹிந்த் என்ற உணர்வு முழக்கம் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது.- E.R.ஈஸ்வரன் MLA


 தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆட்சிகளில் நிகழ்த்திய ஆளுநர் உரையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி முந்தைய அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய கட்டுப்பாட்டில் இருந்ததையும், இப்போதைய அரசு யாருக்கும் கட்டுப்படாத தலைநிமிர்ந்த அரசாகவும் செயல்படுவதை குறிப்பிட்டிருந்தேன். ஒன்றிய அரசோடு உறவுக்கு கை கொடுப்பது வேறு. தன்னை காப்பாற்றிக் கொள்ள தலைகுனிவது வேறு. ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தலைகுனிந்து இருந்த தமிழக அரசு மே 2-ஆம் தேதிக்கு பிறகு தலைநிமிர்ந்து இருக்கிறது என்று பலராலும் சொல்லப்பட்ட உண்மைதான் நான் குறிப்பிட்டேன். 

செவ்வாய், 29 ஜூன், 2021

நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.- E.R ஈஸ்வரன்



தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. தமிழக மக்களின்  பல்வேறு தரப்பட்ட கருத்துகளை இக்குழு ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று இக்குழு தலைவர் கூறியிருந்தார். ஆனால் தமிழக பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய குழு அமைத்து  தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.  

சனி, 19 ஜூன், 2021

தமிழக முதலமைச்சர் அவர்கள் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை ஈரோடு பெருந்துறைக்கு பரிசீலிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது.- E.R.ஈஸ்வரன்


 எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வேண்டுமென்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கேட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொங்குநாட்டு மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றி. - E.R.ஈஸ்வரன்

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் அவர்கள் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களிடம் வலியுறுத்தி உள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஞாயிறு, 13 ஜூன், 2021

டாஸ்மாக் கடைகள் திறக்காத மாவட்டத்திலிருந்து திறந்த மாவட்டங்களுக்கு மதுபிரியர்கள் படையெடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வேண்டும்.- E.R ஈஸ்வரன்


 டாஸ்மாக் கடைகள் திறக்காத மாவட்டத்திலிருந்து திறந்த மாவட்டங்களுக்கு மதுபிரியர்கள் படையெடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருந்த நேரத்தில்  பதவியேற்று தமிழக  முதலமைச்சர் அவர்களின் சாமர்த்தியமான செயல்பாடுகளாலும், துரிதமான நடவடிக்கைகளாலும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படாமலும், மீதமுள்ள 27 மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள்  திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

 

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

24 மணிநேரமும் பணியாற்றுகின்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு குறை வைக்காமல் தேவையானவற்றை செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் காலத்தின் தேவை.- E.R.ஈஸ்வரன்


முதல் கொரோனா அலையில் ஆர்வம் காட்டியது போல மருத்துவர்களும், செவிலியர்களும் இரண்டாவது அலையில் காட்டவில்லை.

முதல் கொரோனா அலை கடந்த வருடம் பரவிய போது மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் காக்கும் கடவுள்களாக போற்றப்பட்டார்கள், வணங்கப்பட்டார்கள். பலரும் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து மரியாதை செய்தார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் அவர்களுக்காக நாட்டு மக்கள் அனைவரையுமே பாராட்டி கைதட்ட சொன்னார். மாநில அரசுகளும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள். சிறப்பு ஊதியமும், காப்பீட்டு திட்டங்களும்  அறிவிக்கப்பட்டன. ஆனால் கொரோனா முதல் பரவல் குறைய ஆரம்பித்த உடன் மருத்துவத்துறைக்கான வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. 

திங்கள், 12 ஏப்ரல், 2021

உரம் விலை உயர்வை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

 உரம் விலை உயர்வை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

உரம் விலை வரலாறு காணாத அளவில் கட்டுப்பாடின்றி உயர்ந்திருப்பது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடி கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மென்மேலும் துயரத்தை கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குகிறோம் என்று சொல்லிவிட்டு விவசாயிகளை கடனாளியாக்கும் நடவடிக்கைகளை தொடர்வது ஏற்புடையதல்ல. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது. - E.R.ஈஸ்வரன்


2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் 5 இலட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா.

புதன், 6 ஜனவரி, 2021

பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.-E.R.ஈஸ்வரன்


 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பாலியல் குற்றத்தின் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இன்னும் இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர் பொறுப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியே தெரிந்த போதே இதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டு பலராலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதிமுகவும், தமிழக அரசும்  உண்மையை வெளியுலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கவே முயற்சித்தது.

புதன், 30 டிசம்பர், 2020

கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்

 



கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி தலைவர் கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று தலைவர் கோவை செழியன் அவர்களின் 90-வது பிறந்தநாளை கொண்டாட கொங்கு மண்டலம் முழுவதும் ஆங்காங்கே அவருடைய உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் செய்யப்பட்டது. கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று இராசிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவை செழியன் அவர்களுக்கு மரியாதை செலுத்த செய்யப்பட்ட ஏற்பாடுகளை அதிமுகவினர் அராஜக போக்கில் தடுத்து அகற்றியதை வன்மையாக கண்டிக்கின்றோம். 

புதன், 9 டிசம்பர், 2020

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்ததன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள். தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விலை நிர்ணயம் அதிகாரம் சென்றால் என்ன விளைவை மக்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதற்கான உதாரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை வரலாறு காண அளவில் குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்பதை நாம் அறிவோம். கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய் இலாபமடைய வேண்டுமென்று மத்திய அரசு திட்டமிட்டு அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

புதன், 2 டிசம்பர், 2020

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி இருக்கிறார் தமிழக முதல்வர். பாமகவை வன்முறை கட்சியாக காட்டுவதில் வெற்றி அடைந்திருக்கிறார்.- E.R.ஈஸ்வரன்


 பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தரப்பில் இடமாற்றம் செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதாக திரு.அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். அரசாங்கத் தரப்பில் அனுமதி அளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்துவதற்கு இடத்தை ஒதுக்கி தந்துவிட்டு பல மாவட்டங்களில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னை நோக்கி வந்த பின்னால் தடுத்து நிறுத்தியது ஏன் எனத் தெரியவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

சனி, 28 நவம்பர், 2020

டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். - E.R ஈஸ்வரன்


 டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். - E.R ஈஸ்வரன்

விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு வகையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுக்களை வாங்கி மத்தியிலே ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 6 ஆண்டுகளாகியும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திங்கள், 23 நவம்பர், 2020

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய போராட்டத்தை மனிதாபிமானத்தோடு அணுகி கிலோவுக்கு 15 ரூபாய் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய போராட்டத்தை மனிதாபிமானத்தோடு அணுகி கிலோவுக்கு  15 ரூபாய் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் வளர்ப்பு தொகை உயர்வுக்கான போராட்டத்தை தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. 2013-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களுக்கும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கறிக்கோழி வளர்ப்பு தொகை கிலோ ஒன்றுக்கு ரூ.3 லிருந்து ரூ.3.50 க்கு உயர்த்தியும், வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டு இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகாலமாக கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து உயர்த்தி வழங்க வேண்டிய 20 சதவீத தொகையை கொடுக்கவே இல்லை. 

வெள்ளி, 6 நவம்பர், 2020

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்


 நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாக தொழிற்சாலைகள் தரப்பிலும், தொழில் சார்ந்த பல அமைப்புகள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான தேவையை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்சாலைகள் 120  ஏக்கர் வரை வைத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன் 60 ஏக்கர் வைத்து  கொள்ளலாம் என்று இருந்ததை இரண்டு மடங்கு ஏற்றி 120 ஏக்கராக மாற்றியிருப்பது தொழிற்சாலைகளின் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

புதன், 4 நவம்பர், 2020

இன்றைய சூழலில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது.- E.R.ஈஸ்வரன்

 


இன்றைய சூழலில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது.- E.R.ஈஸ்வரன்

கொரோனா நோய் பரவல் இன்னும் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது நாளுக்கு நாள் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளித்தாலும் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்குமா என்ற அச்ச உணர்வு அனைவரது மனதிலும் இருக்கிறது. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் தமிழக அரசின் உத்தரவுகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. 

திங்கள், 2 நவம்பர், 2020

மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியில் ஆய்வுக்கு வர தயாரா ? - E.R.ஈஸ்வரன்


நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் இடிந்ததற்கு தரம் குறைவே காரணம்.

நாமக்கல் மாவட்டத்தில் தரம் குறைவாக நடக்கின்ற கட்டுமான பணிகளை இல்லையென்று மறுக்கின்ற மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியில் ஆய்வுக்கு வர தயாரா ?.

நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் தருவாயிலேயே இடிந்து விழுந்திருப்பது அரசு கட்டிடங்கள் கட்டப்படும் தரத்தை எடுத்துரைக்கிறது. மக்கள் உயிர்காக்கும் மருத்துவமனையினுடைய கட்டிடமே இடிந்து விழுந்து பல பேருக்கு காயத்தை ஏற்படுத்தி இருப்பது வேதனையளிக்கிறது. இந்த உண்மையை மறைத்து மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் தரம் குறைவாக இருந்ததால் நாங்களே இடித்துவிட்டோம் என்று  சொல்லியிருப்பதை நாமக்கல் மக்கள் நகைச்சுவை கலந்த வேடிக்கையாக பார்க்கிறார்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்.- E.R.ஈஸ்வரன்

 

மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்.- E.R.ஈஸ்வரன்

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில்  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. 

வியாழன், 15 அக்டோபர், 2020

திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.- E.R ஈஸ்வரன்


 திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.

திமுக தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு வலுவான கூட்டணியாக இருக்கின்றது. கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதை புரிந்து இருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.