விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூன், 2022

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்! - தொல்.திருமாவளவன்

 


குடியரசுத் தலைவர் தேர்தல்: சனாதனப் பயங்கரவாதிகளின் அடையாள அரசியல் எனும் சதித்திட்டத்தை முறியடிப்போம்! 

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்! 

ஆந்திரா மற்றும் ஒடிசா முதல்வர்கள் இருவரும் தங்களின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! 

உலக வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமானவை ஹிட்லரின் நாசிக் கொள்கையும், முசோலினியின் பாசிசக் கொள்கையும் என்பதை உலகம் அறியும். அத்தகைய இனவாதக் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு வரையறுக்கப்பட்டதுதான் சங்பரிவார்களின் "ஒரேதேசம் - ஒரே கலாச்சாரம் " என்னும் மதவாத - சனாதனப் பயங்கரவாதக் கருத்தியலாகும். அதாவது சனாதனவாதிகள் இங்கே கட்டமைக்க விரும்பும் இந்து ராஷ்டிரம் ஒரே தேசம் என்பது என்பது ஹிட்லரின் ஜெர்மனியையும் முசோலினியின் இத்தாலியையும் தம்முடைய ஆதர்சமாகக் கொண்டதே ஆகும்.  ஹிட்லரின் இனவெறி ஆட்சியில் எப்படி யூதர்கள் மட்டுமின்றி ஜெர்மானியர்களும் கொடூர வதைகளுக்கு ஆளானார்களோ அதுபோலவே இந்து ராஷ்டிரம் என்பதும் இங்கே  சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் பேராபத்தாகவே முடியும். அத்தகைய இந்து ராஷ்டிரத்தை அமைத்திட  அனைத்துத் தளங்களிலும் தமக்கு ஆதரவானவர்களை ஆங்காங்கே சனாதனிகள் தேடித்தேடி முதன்மையான அதிகார மையங்களில் அமர்த்தி வருகின்றனர். 

திங்கள், 20 ஜூன், 2022

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.- தொல். திருமாவளவன்

 மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் :

தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை வரவேற்று  வழிமொழிகிறோம்!  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமரை வலியுறுத்தியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று வழிமொழிகிறோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக சார்பில் இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்.

வியாழன், 16 ஜூன், 2022

சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.- தொல். திருமாவளவன்


 பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும்,  சமூக வலைத்தளத்திலும் நபிகள்  நாயகமான முகமது நபி அவர்களை  அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன்,  அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

செவ்வாய், 14 ஜூன், 2022

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை' நிறுத்த வேண்டும்! விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!


 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை'  நிறுத்த வேண்டும்! விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! 

எதிர்வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறித்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

செவ்வாய், 8 மார்ச், 2022

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு 1000 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாட்டின் உரிமை காக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்! - தொல்.திருமாவளவன்

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு 1000 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டின் உரிமை காக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்! 

தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு காவிரியின் குறுக்கே மேகெதத்துவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோதப் போக்குக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இங்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்! 

ஞாயிறு, 6 மார்ச், 2022

கோகுல்ராஜ் படுகொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! - தொல்.திருமாவளவன்


கோகுல்ராஜ் படுகொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!  தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! 

கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நம்புகிறோம். அத்துடன், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். 

ஞாயிறு, 7 நவம்பர், 2021

திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது பாஜக'வினரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!- தொல்.திருமாவளவன்


 திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது பாஜக'வினரால்  நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது கொடூர வன்முறை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வன்முறையை தடுப்பதற்கு அங்குள்ள பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குகளைப் பதிவுசெய்து அடக்குமுறை செய்கிறது.

வியாழன், 7 அக்டோபர், 2021

ஜமீன் தேவர்குளம் வெற்றிமாறன் தீக்குளித்து மரணம், ஜமீன் தேவர்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கவேண்டும்!.- தொல்.திருமாவளவன்


தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

ஜமீன் தேவர்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தல் முடிவை நிறுத்திவைக்கவேண்டும்! 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 

உள்ளாட்சி அமைப்புகளில்  ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த வெற்றிமாறனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

செவ்வாய், 5 அக்டோபர், 2021

உ.பியில் பாஜக வன்முறை: இந்திய உள்துறை இணை அமைச்சர் மகனின் கார் மோதியதில் விவசாயிகள் பலர் பலி! முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்!.- தொல்.திருமாவளவன்


 உ.பியில் பாஜக வன்முறை:  இந்திய உள்துறை இணை அமைச்சர் மகனின் கார் மோதியதில் விவசாயிகள் பலர் பலி! முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3.10.2021 இந்திய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ,       அஷிஸ்  மிஸ்ரா, துணைமுதல்வர் கேசவ் மரியா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றபோது அப்பகுதியைச் விவசாயிகள் அவர் வரும் வழியில் கறுப்புக்கொடி காட்டும் அறப்போரில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கே திரண்டிருந்த விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்க முயற்சிக்காமல், பொறுப்புடன் அவர்களை எதிர்கொள்ள இயலாமல், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியால் காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் மீது தனது காரை மோதச்செய்ததில் அவ்விடத்திலேயே நான்கு விவசாயிகள் நசுங்கிச் செத்துள்ளனர். அதனையொட்டி வெடித்த வன்முறையில் மேலும் ஐந்துபேர் பலியாகியுள்ளனர். இந்தக்கொடூரம் இந்திய நாட்டையே  உலுக்கியுள்ளது.

சனி, 17 ஜூலை, 2021

உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குக! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! - தொல்.திருமாவளவன்

உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குக! 

தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை வழங்கவேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை மேலும் காலந்தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

திங்கள், 5 ஜூலை, 2021

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.- தொல்.திருமாவளவன்


 பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! - தொல்.திருமாவளவன்

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.   இதை கொரோனா மரணமாகக்  கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வெள்ளி, 2 ஜூலை, 2021

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்! - தொல்.திருமாவளவன்.

 பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை! உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி!

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை!  

- தொல்.திருமாவளவன்.

மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிர மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. 

திங்கள், 28 ஜூன், 2021

பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் ! - தொல்.திருமாவளவன்

 பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக 

ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் ! 

சனநாயக சக்திகள் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு! 

பாஜக ஆட்சி கடைபிடித்துவரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுரண்டும் விதமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தி வருகிறது. பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவதென்று முடிவு செய்து உள்ளோம். அதனடிப்படையில் எதிர்வரும் 28,29 ,30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் சனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்று இந்திய ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முன்வரவேண்டுமென அழைக்கிறோம். 

திங்கள், 21 ஜூன், 2021

வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் என்ற அறிவிப்பு பாராட்டத் தக்கதாகும். உழவர்களோடு உழவுத் தொழிலாளர்களும் இதனால் பயனடைவார்கள். - தொல். திருமாவளவன்

 அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை! 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு! - தொல். திருமாவளவன்

திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சட்டமன்றத்தில் ஆளுநர் நிகழ்த்திய உரை இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. 

திங்கள், 14 ஜூன், 2021

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி-எஸ்டி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாபெரும் அநீதி ! - தொல்.திருமாவளவன்



உயர் கல்வித்துறை ஆண்டறிக்கை: பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி-எஸ்டி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாபெரும் அநீதி ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த ஆண்டறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2019 -20 க்கான ஆண்டறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. 

அதில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சனி, 5 ஜூன், 2021

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை ‘மாநில உரிமைகள் நாள்’ என அறிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும்.- தொல். திருமாவளவன்

 ‘சமத்துவப் பெரியார்’ கலைஞர் அவர்களின் பிறந்தநாளை மாநில உரிமைகள் நாள் என அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும்! 

தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களது 98 ஆவது பிறந்த நாளில் அவர் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளைப் பெருமையோடு நினைவு கூர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு இந்நாளில் எமது வணக்கத்தைச் செலுத்துகிறோம். 

செவ்வாய், 1 ஜூன், 2021

பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுதமிழர்களையும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப்போற்றும் வகையில், அவரது பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.- தொல்.திருமாவளவன்


நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்! தமிழக முதல்வருக்கு விசிக வேண்டுகோள்!

ஜூன் 03 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள். இன்று அவர் நம்மிடையே இல்லையெனினும், அவரது கொள்கை வாரிசாகவும் தமிழக முதல்வராகவும் இருந்து திமுகவையும் தமிழக அரசையும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.  அரசியல் பகைவரும் அகம் நெகி்ழ்ந்து பாராட்டும் வகையில், அவர் இன்று ஆட்சிநிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மிகவும் சிறப்பாக, திறம்பட செயல்பட்டு வருகிறார்.

திங்கள், 31 மே, 2021

குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.- தொல். திருமாவளவன்

பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

 தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திங்கள், 24 மே, 2021

பேராசிரியர் ஜவாஹிருல்லா, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்.-தொல்.திருமாவளவன்

 பேராசிரியர் ஜவாஹிருல்லா, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள்மீது அவதூறாகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை அவமதித்தும் பேசியுள்ள எச் .ராஜா அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

வியாழன், 20 மே, 2021

ஆசிரியர்களின் குரலுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் திமுக அரசு, இப்போதும் அந்த மரபைப் பின்பற்றி மீண்டும் இயக்குநர் பதவியை முன்பு இருந்தது போலவே உருவாக்கிடவேண்டும்.-தொல். திருமாவளவன்

 பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் !

தமிழக அரசுக்கு  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு அதற்குப்பதிலாக ஆணையராக  ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது.  பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழகக் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.