விசு அவர்கள் நல்லது செய்ய வேண்டும் என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்தவர்; பல்துறை வேந்தருக்கு எனது இதய அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன். - பொன். இராதாகிருஷ்ணன்
தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும், நடிகரும், திரைக்கதை வசனகர்த்தாவும் பல்துறை வல்லுநரும், சிறந்த தேசபக்தரும், பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்ட அன்பு தலைவருமான திரு. விசு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய பிரிவால் வாடுகின்ற குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இறைவன் மன ஆறுதலை அளிக்க வேண்டுமென பிரார்த்திப்பதுடன், அவரது ஆன்மா நற்கதி அடையவும் பிரார்த்திக்கின்றேன்.
திரு. விசு அவர்களோடு எனக்கு நேரடி பழக்கம் ஏற்பட்ட பின்பு அவரது அறிவுக்கூர்மை, அசைக்கமுடியாத தேசபக்தி போன்ற இயல்புகளை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

