திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூலை, 2022

திட்டமிட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிய பின்னணி என்ன? பொதுச்சொத்துகளை நாசம் செய்தவர்களை ஊக்குவிப்பது நாகரிகமான அரசியலா? -கி.வீரமணி

 சின்னசேலம் கனியாமூர் பள்ளி தொடர்பான கலவரங்கள்!

திட்டமிட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிய பின்னணி என்ன? பொதுச்சொத்துகளை நாசம் செய்தவர்களை ஊக்குவிப்பது நாகரிகமான அரசியலா?

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விரைந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் நமது முதலமைச்சர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்புவோர் ஏமாந்து போவார்கள்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும்! குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும் உறுதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் டூ மாணவி சிறீமதி 13.7.2022 அன்று ‘மர்மமான’ முறையில்  இறந்துள்ளார்; அவர் 3 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படும் நிலையில், இறந்த மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வு - மறு உடற்கூறு ஆய்வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்து, நேற்று (19.7.2022) அது முடிந்தது. இதனை எதிர்த்து மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் இதற்குத் தடை கேட்ட வழக்கில், அது உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்ததையொட்டி ஏற்பட்ட வன்முறை வெடித்த கலவரம் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்விகள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கேள்விகள் - அரசியலுக்கு அப்பாற்பட்டு.

செவ்வாய், 19 ஜூலை, 2022

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை! - கி.வீரமணி


 

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை!

முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கவேண்டும்!

‘திராவிட மாடல்’ என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுகிறோம்!

கடந்த ஓராண்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியில், செயற்கரிய செய்யும் அதன் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் சாதனைகளை பிற மாநிலங்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வியந்தும், விரும்பியும் பார்க்கின்ற நிலையில், அதன் தனித்தன்மையே மதச்சார்பின்மை என்னும் சிறப்புடையதாகும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சரது தலைமையில் கடந்த 8 ஆண்டுகளாகவே - பதவிக்கு வருமுன்னரே அக்கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட்டு, தற்போதும் அவ்வாறே நடைபெற்று வருகிறது என்பது எடுத்துக்காட்டானதாகும்.

இந்த நிலையில், இதற்கு எதிராக சில அரசு நிகழ்வுகளை - பழைய (அ.தி.மு.க.) ஆட்சியின் தொடர்ச்சிபோல, நடத்துவது எவ்வகையிலும் விரும்பத்தக்கது அல்ல.

மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ என்ற சடங்கு, அதற்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வந்து, வடமொழி மந்திரம் ஓதச் சொல்வது, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அதற்கு வழிபாடு நடத்துவதுபோன்ற தோற்றம் - இவையெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் ‘செக்யூலர்’ (Secular) என்ற மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!

அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில், தி.மு.க. ஆட்சியில் இப்படி ஏதும் நடக்க அவர்கள் அனுமதித்தது கிடையாது.

‘மதச்சார்பற்ற’ என்றால், ‘‘அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுதல்’’ என்ற ஒரு தவறான வியாக்கியானம் நமது அரசியல்வாதிகளிடையே புழக்கத்திற்கு விடப்பட்டதே - அடிப்படையில் அது நியாயமல்ல - திரிபுவாத விளக்கம் ஆகும்!

தருமபுரி டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்.பி.,  அவர்களின் கேள்வி நியாயமானதே!

இதன்படி பார்த்தால்கூட, அரசு அடிக்கல் நாட்டுவிழாவில், அனைத்து மதத்தினர், மற்றவர் அனைவரையும்தானே அழைத்திருக்கவேண்டும்; வெறும் ஒரு மத (ஹிந்து சனாதன)ச் சடங்கு - அதுவும் நடத்தப்படவேண்டிய அவசியம் என்ன என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் கேள்வி எழுப்பியது மிகவும் சரியானது மட்டுமல்ல; நியாயமும், தேவையானதும் சட்டப்படியானதுமாகும்.

காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அதனடிப்படையே ‘‘மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயகக் குடியரசு’’ என்பதாலும், அதனைக் காப்பாற்றுவதற்கே அப்பதவி என்பதுதானே உறுதிமொழியின் தத்துவம்?

அதுமட்டுமா?

அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு வலியுத்துவது என்ன?

நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துவதில் ‘‘அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்டுச் சிந்திக்கும் ஆற்றல், சீர்திருத்தம், மனிதாபிமானம் - இவற்றைப் பரப்புதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை’’ என்று வலியுறுத்துகிறது.

எனவே, அவர் எழுப்பிய கேள்வி நியாயமானது - தேவையானதும்கூட.

தி.மு.க. ஒரு தனித்தன்மையான அரசியல் கட்சி - அதன் சட்ட திட்டங்களில் முதன்மையாக பகுத்தறிவைப் பரப்புவது என்பதற்காக உள்ள அரசியல் கட்சி என்பது விளக்கமாகும்!

காங்கிரஸ் எம்.பி., ஒருவர், ‘‘அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; கார் வாங்கினால்கூட எலுமிச்சம் பழத்தை கார் டயருக்கடியில் வைத்து, புது காரை எடுப்பார்கள்’’ என்று கூறியிருப்பது பொருத்தமற்ற வாதம் ஆகும்.

தனிப்பட்ட நபர்களின் விருப்பு, நம்பிக்கைக்கு எதிரானதல்ல இந்தக் கோரிக்கை.

அரசு சார்பான பொது நிகழ்ச்சியை, மதச்சார்பின்மை என்ற கொள்கை உடைய ஆட்சியில் இப்படி நடத்தலாமா என்பதுதான் கேள்வி.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், உடனடியாக அரசு அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான கடவுள் படங்களும், அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பியதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

முதலமைச்சருக்கு  ஓர் அன்பான வேண்டுகோள்

நமது முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:

அருள்கூர்ந்து அரசு சார்பான நிகழ்ச்சியில், இதுபோன்ற மதச் சடங்குகள், புரோகிதர்கள் வடமொழி மந்திரம் ஓதி நடத்தப்படுவது தவிர்க்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கை

காரணம், அரசு அனைவருக்கும் உரியது; அனைத்து மதம், மதம் சாராதவர்கள் அனைவருக்கும் உரியது. அத்துணை பேரையும் அழைக்கும் முறையும்கூட நடைமுறை சாத்தியம் அல்ல; பொது நிகழ்ச்சிகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர்ப்பது, சனாதனத்திற்கு விடை கொடுத்து, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கையாகவே இருக்கும்.

மதவெறியை, மதக் கலவரங்களை திருவிழாக்களில் அதிகம் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஆபத்தான அமைப்புகள் அதில் கொடிகட்டி ஊடுருவுவதும் வேகமாக நடைபெறும் நிலையில், அரசு நிகழ்வுகளில் மதச்சடங்குகளைத் தவிர்ப்பது இன்றியமையாததாகும்.

இதுகுறித்து துணிவுடனும், கொள்கைத் தெளிவுடனும் ‘திராவிட மாடல்’ என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுவதுடன், அவரது உணர்வுகள் தனிப்பட்ட உணர்வல்ல - தி.மு.க.வில்  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த உணர்வுக்கான அடையாளமே!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்!

அவர்கள் வழியிலும் பிறழாத நமது முதலமைச்சர் அவர்கள், இதிலும் முன்வந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கக் கேட்டுக் கொள்கிறோம் - உரிமையுடன்!

வியாழன், 7 ஜூலை, 2022

பங்காளி யார்? பகையாளி யார்? என்று புரிந்துகொள்ளாமல் பகையாளியிடம் அடமானம் போகலாமா அ.தி.மு.க.? - கி.வீரமணி

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்புப்பற்றி கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் என்னென்ன?

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுகளை (கூவத்தூர்) பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற தி.மு.க. தலைவர் முயற்சிக்காதது அவரின் கண்ணியமான அரசியல் அணுகுமுறை

பங்காளி யார்? பகையாளி யார்? என்று புரிந்துகொள்ளாமல் பகையாளியிடம் அடமானம் போகலாமா அ.தி.மு.க.?

எந்தத் தந்திரம் செய்தாலும் தி.மு.க. என்ற எஃகு கோட்டையை பி.ஜே.பி. அசைத்துப் பார்க்க முடியாது என்பது நினைவிருக்கட்டும்!

தி.மு.க.வின் பாசறைக் கூட்டம் பயனுள்ளது - தொடரட்டும்!

திராவிட இயக்க வரலாற்றுப் பூர்வமான அறிக்கை

அ.தி.மு.க. அதன் பொன்விழாவைக் கொண்டாடி மகிழவேண்டிய தருணத்தில், ‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையிலும்‘, பச்சையான நிர்வாணத் தன்மையில் பளிச்சிடும் தலைமைப் பதவி வெறிக்காக ‘சர்வபரித் தியாகத்தை’ நடத்தி, கொள்கைகளைக் காவு கொடுத்தும், டில்லி சரணம் பாடி, அடகு வைத்த பொருள்பற்றிக் கவலைப்படாமல், அந்தப் பொருளை யாரோ ஒருவர் எடுத்துக்கொள்வதாக ஒரு பொய்யழுகை அழுவதும், போலித்தனத்தின் போக்கிடமாவதும் எவ்வகையிலும் பொது நிலையாளர்களால், அக்கட்சியின் கொள்கை உள்ளத்தோடு மிஞ்சியுள்ள ஒரு சில  உண்மைத் தொண்டர்களான சகோதரர்கள், ‘ரத்தத்தின் ரத்தங்களால்’ ஒருபோதும் ஜீரணிக்க  முடியாத ஒன்றாகும்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

வளர்ச்சி என்பதற்கு வரி தேவை. அது ‘கடிதோச்சி மெல் எறிக’ என்பதாக அமைய தமிழ்நாடு அரசும் கவனமாக இருப்பது அவசியம்! - கி.வீரமணி

15 ஆம் நிதிக் குழு தமிழ்நாட்டுக்கு நிதி தரவேண்டும் என்றால் - 
சொத்து வரியை உயர்த்தவேண்டியது அவசியம்!

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் எதிர்க்கட்சிகள் ஆட்டுவதா?

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக தி.மு.க. ஆட்சி, அதன் சீரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கட்டான பொருளாதார நெருக்கடி உண்டாகும் வண்ணம் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், மக்கள் வரிப் பணத்தை எப்படி பயனுறு வகையில் செலவழிப்பது, அதற்கேற்ப எப்படி திட்டமிட்டு வருவாயைப் பெருக்குவது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாது கடனுக்கு மேல் கடன் வாங்கியது (வட்டிக் கட்டக் கூட புதுக்கடன் வாங்கிக் கட்டும் தவறான நிதி மேலாண்மையை நடத்திய நிலையில்). புதிய தி.மு.க. அரசு அனுபவம்மிக்க பொருளாதார மேதைகளையும், நிதி நிர்வாக அறிஞர்களையும் கொண்ட நிதி ஆலோசனைக் குழுவை - உலக அளவில் புகழடைந்தவர்களைக் கொண்டு அமைத்து அவர்களது ஆலோசனைப்படியே, கடும் நிதிப் பற்றாக்குறை, நெருக்கடியை சமாளித்திட ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையிலும், நடுத்தர மக்கள் ஓரளவு தாங்கும் வண்ணமும் புதிய வருவாய்  பெருக்கலை, நிதி ஆலோசகர்கள் கருத்துப்படி ஆராய்ந்தே முடிவெடுத்துள்ளனர்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

‘யோகா’ பயிற்சி என்ற போர்வையில் - ‘சாக்கில்’ ஆர்.எஸ்.எஸின் ஷாகா பயிற்சி மதக்கலவரம், வெறுப்புப் பிரச்சார விதை ஊன்ற அனுமதிக்கலாமா? - கி.வீரமணி

 தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...!

‘யோகா’ பயிற்சி என்ற போர்வையில் - ‘சாக்கில்’ ஆர்.எஸ்.எஸின் ஷாகா பயிற்சி

மதக்கலவரம், வெறுப்புப் பிரச்சார விதை ஊன்ற அனுமதிக்கலாமா?

பள்ளி மைதானங்களிலும், பொது இடங்களிலும் 

நடத்துவது தடை செய்யப்படவேண்டும்! - கி.வீரமணி

2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டு என்பதை மய்யப்படுத்தி தமிழ்நாடு போன்ற ஆர்.எஸ்.எஸ். வலுவாகக் காலூன்ற முடியாத மாநிலங்களில் திட்டங்களைத் தீட்டி செயல்பட உள்ளது. அதில் ஒன்றுதான் இளைஞர்களுக்கு ‘யோகா’ பயிற்சி என்ற பெயரில் ‘ஷாகா’ பயிற்சி அளிப்பதாகும்.

புதன், 30 மார்ச், 2022

‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது! - கி.வீரமணி

 ‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது!

‘நீட்’  தேர்வு தோல்விபற்றி எதையும் கற்பனையாகக் கூறவில்லை - ஆங்கில  ஏடுகளில் வெளிவந்துள்ள ஆதாரத்தைப் பாரீர்! பாரீர்!!

வெளிநாட்டினருக்கு (என்.ஆர்.அய்.) என்ற பெயரால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடங்கள்! - கி.வீரமணி

‘நீட்’ தேர்வு என்ற ‘கண்ணிவெடியை’ அகற்றவேண்டாமா?

ஏப்.3 முதல் ஏப்.25 ஆம் தேதிவரை மாநிலம் தழுவிய

எனது நீண்ட நெடிய பயணம் - தோழர்களே!

‘நீட்’ (Neet) மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு, முதல்  குரல் கொடுத்து, அனைத்திந்தியாவிற்கே, வழமைபோல் வழிகாட்டி வருகிறது.

‘நீட்’  தேர்வு, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையாலும், அதன்கீழ் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பின் ‘ஊழல்’ மன்னனாகத் திகழ்ந்தவர்மீது அமலாக்கத் துறை பாய்ந்து, அதன்பிறகு அவர்மீதான நடவடிக்கைகள் காணாமற்போய், மீண்டும் ‘‘ஹீரோவாகி’’விட்ட குஜராத்தின் கேதன் தேசாய் வழிகாட்டுதலில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்

இந்தத் திணிப்புத் தேர்வின்மூலம் ஏழை, எளிய, கிராமாந்திர, ஒடுக்கப்பட்ட சமூகங்களான எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டதோடு, இந்தக் கொடுமையினால் 12 ஆம் வகுப்பில் மிக அதிகமான மதிப்பெண் வாங்கியவர்கள்கூட இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலையே நீடிக்கிறது!  பரவலான அச்சத்தின் காரணமாக செல்வி அனிதா தொடங்கி, சுமார் 20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம்

‘‘1. ‘நீட்’  தேர்வினால் மருத்துவர்களின் திறமை உயரும்

2. மருத்துவக் கல்வி எளிய முறையில் கிடைக்கும்

3. ஊழல் நடைபெறாமல் தடுக்கப்படும்.’’

- இவ்வாறெல்லாம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் ‘‘அவாள்’’ மூலம் பரப்பப்பட்டு வருகிறது!

ஆனால், இப்பொழுது உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டதே!

‘உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்‘ என்று பட்டுக்கோட்டையார் பாடியது போன்று, யதார்த்தம் வெளிச்சம் போடுகிறது.

அரசமைப்புச் சட்ட விரோத, எதிர் நடவடிக்கை

கடந்த சில நாள்களாக, ஆங்கில நாளேடுகளில் வெளிவந்துள்ள செய்திகளை அறியும் எவரும் ‘நீட்’  தேர்வு எப்படி முழுத் தோல்வியில் முடிந்த மூர்க்கத்தனம்மிக்கது என்பதையும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மாநிலங்களிடமிருந்தும், பல்கலைக் கழகங்களிடமிருந்து பறிக்கும் அரசமைப்புச் சட்ட விரோத, எதிர் நடவடிக்கை கொண்டதே என்பதையும் எவரும் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ ‘நீட்’  தேர்வு தோல்விபற்றி எதையும் கற்பனையாகக் கூறவில்லை என்பதற்கு அனுபவங்களைப் பேசவிட்ட ஊடகங்களின் கருத்துகளை - அதே ஆங்கில  வாசகங்களை தமிழிலும் புரிந்துகொள்ளத் தந்துள்ளோம்.

அக்கிரகார தலைமைக் கட்சியின் வாதங்கள் எப்படிப்பட்ட புரட்டு என்பது புரியவில்லையா?

பா.ஜ.க. என்ற பார்ப்பனீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். என்ற அக்கிரகார தலைமைக் கட்சியின் வாதங்கள் எப்படிப்பட்ட புரட்டு என்பது இதன்மூலம் புரியவில்லையா?

நம் மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது; வாக்களித்து, மக்களாட்சியில் ஆட்சியாளர்களை அமர்த்துபவர்களில் பெரிதும் ஒடுக்கப்பட்ட கிராமங்களில் வாழும் ஏழை, எளிய, விவசாயத் தொழிலாளர்களே, பெண்களே - இவர்களின் பிள்ளைகள் டாக்டர்களாக ஆவதைத் தடுக்கும் இந்த ‘நீட்’  தேர்வு என்ற ‘‘கண்ணிவெடியை’’ அகற்றவேண்டாமா? அதற்குத்தான் தோழர்களே, எனது மாநிலம் தழுவிய தொடர் நெடிய பயணம் 25 நாள்களுக்கு.

‘நீட்’ தேர்வில் கடைசி இடம்பெற்ற மாணவனுக்கு- வெளிநாடுவாழ் இந்தியருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்!

இதோ ஏடுகள் தரும் உண்மைகள்:

'டைம்ஸ் ஆப் இந்தியா', 27.3.2022

1. NEET tail-enders jump queue, grab med seats

1.  நீட் தேர்வில் வரிசையில் கடைசியாக இருக்கும் மாணவர்கள் மருத்துவ இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

2.At Pravara Institute of Medical Sciences, Loni (Maharashtra), the last management seat was filled by rank 83,817 while the last NRI seat went to rank 8,72,911. At Sri Devaraj Urs Medical College, Kolar, the last management seat was allotted to rank 86,416 and its last NRI seat to rank 8,76,357.

2. மகாராஷ்டிரா லோனி நகரில் உள்ள பிரவாரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், மருத்துவக் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீடு, நீட் தேர்வில் கடைசி ரேங்க் அதாவது 83,817 ரேங்க் பெற்ற மாணவருக்கு கிடைத்தது. இதே கல்லூரியில், வெளி நாடு வாழ் இந்தியருக்கான (என்.ஆர்.அய். கோட்டா) இடம், 8,72,911 ரேங்க் பெற்ற மாணவருக்கு தரப்பட்டுள்ளது.

கோலாரில் உள்ள சிறீ தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீடு 86,416 ஆவது இடத்திற்கும், என்.ஆர்.அய். கோட்டா 8,76,357 ஆவது இடத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

3.This scenario has played out in medical institutes across the country.

 3. இதே முறையில்தான் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் நடைபெற்றுள்ளது.

4.“College agents have candidates on standby to beat the system. Those with low scores but high paying power could get seats,” Rued parents’ representative Sudha Shenoy.

4.குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் அதிக பணம் தருபவர்களுக்கு இடம் பெற்றுத் தர ஏஜெண்டுகள் நாடு முழுவதும் வேதனைக்குள்ளான பெற்றோர்களின் பிரதிநிதியாக சுதா ஷெனாய் கூறினார்.

'இண்டியன் எக்ஸ்பிரஸ்', 17.10.2021

NEET hasn’t created the equality of opportunity it had promised It is biased towards CBSE curriculum and gives unfair advantage to students from privileged backgrounds. Written by Sunny Jose, Satyam Sunkari

How can NEET promote parity of participation when aspiring first-generation students from marginalised and poor households participate from a highly unequal position in the first place?

நீட் தேர்வு குறித்து வாக்குறுதியளித்தபடி சமத்துவ வாய்ப்பை உருவாக்கவில்லை. இது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு ஒரு சார்புடையது மற்றும் வசதி படைத்த பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு நியாயமற்ற நன்மைகளை அளிக்கிறது. சன்னி ஜோஸ், சத்யம் சுங்கரி எழுதியது!

தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் முதலில் சமமற்ற நிலையில் இருந்து பங்கேற்கும்போது, நீட் எவ்வாறு சமநிலையை ஊக்குவிக்கும்?

'தி இந்து', 6.2.2022

ஆங்கில ‘இந்து’ பத்திரிக்கையில் (6.2.2022) அன்று வந்துள்ள நீட் தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2இல் 1137 மார்க் பெற்ற நட்சத்திரப்ரியா, 2017இல் நீட் எழுதத் தொடங்கி, 3 ஆண்டு கால முயற்சிக்குப் பின், 7.5% ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. 3 ஆண்டு காலம் வீண்.

'இண்டியா டுடே', 16, 2018

NEET: Zero marks in physics, chemistry could still get you a MBBS seat

Over 400 students with marks either in single digit or zero and negative in physics and chemistry were able to get admission into MBBS colleges in 2017.

டாக்டர் சுனில் சாண்டி, தலைமை மருத்துவ அதிகாரி, அய்டிசி சுகாதார நலம் பராமரிப்புத்துறை

(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 29.3.2022இல் எழுதிய கட்டுரையில் இருந்து)

1.Has NEET served the purpose of its creation?

The Central government, the bureaucracy and the MCI proposed in 2012 what was considered to be the panacea to rid medical education of all its ills.

1.   நீட் அதன் உருவாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றியதா?

ஒன்றிய அரசு, அதிகார வர்க்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் ஆகியவை 2012 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வியை அதன் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பதற்கான ‘சஞ்சீவி' என்று முன்மொழிந்தன.

2.Tamil Nadu has taken the step of rejecting what it feels is a self-defeating formula as far as career opportunities of state aspirants are concerned. There is much truth in this assumption, confirmed also by the trends of manpower deficits in other parts of the nation.

2. மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு தொடர்ந்து நீட் தேர்வை நிராகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் அனுமானத்தில்  நிறைய உண்மை உள்ளது, இது நாட்டின் பிற பகுதிகளில் மனிதவள பற்றாக்குறையின் போக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3.What is more worrying and unfathomable for the health ministry is that NEET has tilted the results of medical education away from the public health needs of the country. In that regard, NEET has been self-defeating.

3.சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் கவலையான மற்றும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்னவென்றால், மருத்துவக் கல்வியின் பயன்களை நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளிலிருந்து  நீட் தேர்வு சாய்த்து விட்டது. அந்த வகையில் நீட் தேர்வு தன்னைத்தானே தோற்கடித்துள்ளது.

மருத்துவத் துறைக்கு தகுதி எது?

4.That a student with 99% marks in an entrance examination without a reason-to-be is not necessarily suitable for medicine, but a rural student with 55% with a mission and motivation may be, is a fact that needs greater recognition.

4. எந்தக் காரணமும் இல்லாமல் நுழைவுத் தேர்வில் 99% மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மருத்துவத்துக்குத் தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் 55% மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர் இலக்கும் ஊக்கமும் கொண்டவராக இருந்தால், மருத்துவத்துறைக்கு தகுதியானவராக முடியும் என்பது அதிக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

5.The hypothesis that merit determined by marks alone will produce the best doctors is erroneous. While a few may be, most eminent doctors in India today are not necessarily toppers

5. மதிப்பெண்களால் நிர்ணயிக்கப்படும் தகுதி மட்டுமே சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்ற கருதுகோள் தவறானது. ஒரு சிலர் இருக்கலாம் என்றாலும், இன்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான புகழ்பெற்ற மருத்துவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இல்லை.

‘நீட்’: மறுஆய்வு தேவை

6.It is time to review NEET and its outcomes from the viewpoint of India’s primary health needs.

6. இந்தியாவின் முதன்மை சுகாதாரத் தேவைகளின் பார்வையில் இருந்து  நீட் மற்றும் அதன் விளைவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது.

7.Tamil Nadu has taken the step of rejecting what it feels is a self-defeating formula as far as career opportunities of state aspirants are concerned. There is much truth in this assumption, confirmed also by the trends of manpower deficits in other parts of the nation.

7. மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்தே தமிழ் நாடு தொடர்ந்து நீட் தேர்வை நிராகரித்து வருகிறது. தமிழ் நாட்டின் அனுமானத்தில்  நிறைய உண்மை உள்ளது, இது நாட்டின் பிற பகுதிகளில் மனிதவள பற்றாக்குறையின் போக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'தி டெலிகிராப்', 14.3.2022

1. நீட் தேர்வு தனியார் கல்லூர்களில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்கும் எனும் மாயை

Blame on Modi govt for high fees at private medical colleges

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்ததற்கு மோடி அரசு தான் காரணம்.

2. Experts have also cited a change the Modi government has made to regulations for educational institutions that now allow profit-making entities to set up medical colleges that may be attached to profit-making hospitals.

இப்போது லாபம் ஈட்டும் நிறுவனங்களை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளுடன் இணைக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் மோடி அரசாங்கம் அனுமதி செய்துள்ளதையும் நிபுணர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.  

2. நீட் தேர்வு தகுதியை அதிகரிக்கும் எனும் மாயை:

'டெக்கான் கிரானிக்கல்', துஷார் கவுசிக்

Neet-PG cut-off lowered

மருத்துவப் படிப்பில் முது நிலைப் படிப்பில் இரண்டாவது சுற்றின் முடிவில் 8000 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், கட்-ஆப் மதிப்பெண்ணை 50 என்பதில் இருந்து 35 ஆக குறைப்பு. அதாவது பொதுப் போட்டியில் 302 மதிப்பெண்ணுக்குப் பதிலாக 247 மதிப்பெண் இருந்தாலே போதும் என்கிறது தேசிய மருத்துவ போர்டு.

பேராசிரியர் திலீப் மண்டல்:

This year 158 aspirants, with ranks below 8 lakh, overnight became NRI and grabbed MBBS seats. They will be paying more than 1 crore to become a doc. NEET has in fact served it’s purpose of making medical education costly and exclusionary.

இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் குறைவான ரேங்க் கொண்ட 158 பேர் ஒரே இரவில் என்ஆர்அய் ஆகி எம்பிபிஎஸ் இடங்களைப் பிடித்தனர். டாக்டராக ஆவதற்கு ஒரு கோடிக்கு மேல் கட்டணம் செலுத்துவார்கள். உண்மையில் மருத்துவக் கல்வியை விலை உயர்ந்த படிப்பாகவும், ஏழை மக்களை வெளியேற்றும் நோக்கத்தையும் நிறைவேற்றியுள்ளது.

Punjab should also scrap NEET exam, it violates federal structure: Mahila Kisan Union

In a statement issued here on Friday, State President of Mahila Kisan Union, Bibi Rajwinder Kaur Raju, appealed to all the regional parties to abolish this pro-rich central entrance exam NEET on the lines of Tamil Nadu state and adopt old practice to admit students in MBBS course on the basis of class XII marks only in the medical colleges of their states.

Modern Dental College case:

Five Judge SC Judgement dated 2nd May, 2016:

எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடம் இருந்து நீர்த்துப் போகவில்லை.

மாநிலத்தின் சமமற்ற சூழலை மாநில அரசே நன்கு விளங்கிக் கொள்ள இயலும். மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசின் சட்டங்கள் தீர்மானிக்கும் போது மாணவர் நலன் பேணப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Para:98: “In view of the above, While the expert committee report mentioned above is yet to be acted upon by the Government, we do not express any view on its contents. We direct the Central Government to consider and take further appropriate action in the matter at the earliest”

Once the notifications under the Central statutes for conducting the CET called ‘NEET’ become operative, it will be a matter between the States and the Union, which will have to be sorted out on the touchstone of Article 254 of the Constitution. We need not dilate on this aspect any further”

Para 29: “The scope of entry 66 must be construed limited to its actual sense of ‘determining the standards of higher education’ and not of laying down admission process. In no case is the State denuded of its power to legislate under Entry 25 of List III. More so, pertaining to the admission process in universities imparting higher education”.

Para 30:“Infact, the State Government should be the sole entity to lay down the procedure for admission and fee etc. governing the institutions running in that particular state except the centrally funded Institutions like IIT, NIT etc. because no one can be a better Judge of the requirements and inequalites-in-opportunity of the people of a particular state than that state itself. Only the State legislation can create equal level playing field for the students who are coming out from the State Board and other streams.”

- Five Judge SC Judgement (dated 2nd May, 2016)

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளது எதிர்காலத்தைக் கருதி, ‘நீட்’  தேர்வை ஒழிக்கக் களம் காண வாருங்கள்; களத்திற்கு வர முடியாதவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுங்கள்!

மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்!

நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல - உங்களுக்காக; உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக! மறவாதீர்!

மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்; இது வரலாறு சொல்லும் பாடம் - அது உறுதி! உறுதி!!


செவ்வாய், 15 மார்ச், 2022

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பட்டியல் வகுப்பினரா, பிற்படுத்தப்பட்டவரா, சிறுபான்மையினரா, முன்னேறிய வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. ஜாதியைக் கேட்கவில்லை.- கி.வீரமணி



பள்ளிகளில் ‘ஜாதி’ கேட்கப்படுகிறது என்ற தவறானப் பிரச்சாரம் வேண்டாம்!

எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., எனும் பிரிவுதான் கேட்கப்படுகிறது

இட ஒதுக்கீடுக்கு இந்தத் தகவல் அவசிய தேவையே! - கி.வீரமணி

தயக்கமில்லாமல் ஜாதிப் பிரிவைக் கூறுக!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜாதி விவரக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து (13.3.2022) வெளியான செய்திக்குப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.நந்தகுமார் அவர்கள் நேற்றிரவு அளித்த ஒரு சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.- கி.வீரமணி


ஆறே நாள்களில் புயல் வேக நடவடிக்கையின் மூலம் சட்டப்பேரவையில் 'நீட்' விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது மற்ற மாநிலங்களுக்குப் புதிய வெளிச்சம்!

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதற்குப் பாராட்டுகள்- வாழ்த்துகள்!

எல்லையற்ற மகிழ்ச்சி!

திங்கள், 7 பிப்ரவரி, 2022

‘மயிலே, மயிலே' என்றால் இறகு போடாது! பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வரவேண்டிய அவசரமும், காலமும் வந்துவிட்டது! - கி.வீரமணி


 ‘நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை காரணமாக, தமிழ்நாட்டில் முதல் தலைமுறைப் படிப்பாளர்கள்,  கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள், ஏழை, எளிய குடும்பத்து மாணவர்களின் வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கும், தமிழ் வழிக் கல்வி படித்தோருக்கும் வாய்ப்பு குறைகிறது என திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கூறிக்கொண்டு வந்திருக்கின்றன.

இதன் தீர்வாக, முந்தைய அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய ‘நீட்' தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரால் ஏற்கப்படாதது குறித்துக்கூட அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. தெரிந்த பிறகும் அ.தி.மு.க. அரசால் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

சனி, 29 ஜனவரி, 2022

‘‘எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக! - கி.வீரமணி

 ‘‘எஸ்.சி., எஸ்.டி.,  சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக! - கி.வீரமணி

வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத்தின் இன்றைய சமூகநீதித் தீர்ப்பு!

ஒடுக்கப்பட்ட சமூக மக்களான எஸ்.சி., எஸ்.டி., போன்ற ஆதிதிராவிடர், பழங்குடி சமூக மக்கள் உத்தியோக மண்டலத்தில் பெரிய பதவிகளில் பெரிதும் இல்லாத நிலையில், பதவி உயர்வு அவர்களுக்குத் தருவதுபற்றி எழுந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அன்று (28.1.2022) அளித்துள்ள தீர்ப்பின்படி, மாநில அரசுகளே இதுபற்றி முடிவு எடுக்க முழு உரிமை பெற்றவை; அந்தந்த மாநில அரசுகள், அச்சமூக மக்கள், அப்பதவிக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கிறார்களா என்ற தகவல்களைத் திரட்டி, அதனடிப்படையில் முடிவு எடுக்க அம்மாநில அரசுகள் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம் என்று வழங்கியுள்ள தீர்ப்பு, வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கோவைக் கல்விக் கூடங்கள் ஆர்.எஸ்.எஸின் ஷாகா வன்முறை பயிற்சிக் கூடமா - மைதானமா? - கி.வீரமணி



காக்கிச் சட்டைக் காவல்துறை -காவிகளுக்கு வெண்சாமரமா?

கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். என்னும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சி நடந்து கொண்டுள்ளது.
கே.எம்.சி.எச். என்னும் செவிலியர் பள்ளியில்கூட பெண்களுக்கு வன்முறைப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்ட நிலையில், எதிர்ப்பின் காரணமாக பள்ளி நிர்வாகம் அங்கு ஷாகா பயிற்சி அளிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது - சில வாரங்களுக்கு முன்பு.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவு! வரவேற்கிறோம் ! - விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்!.- கி.வீரமணி

 தெற்கே தந்தை பெரியார் - வடக்கே டாக்டர் அம்பேத்கர் செய்த பிரச்சாரம் காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறது!

பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவு!

பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம் - விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்!.- கி.வீரமணி

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அமைச்சரவை நேற்று (16.12.2021) முடிவு எடுத்துள்ளது. விரைவில் அதற்கேற்ப திருமண வயதை பெண்ணுக்கு 21 ஆக (தற்போது 18 வயது) உயர்த்தும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றமாகும்!

வியாழன், 16 டிசம்பர், 2021

திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்! காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். - கி.வீரமணி



திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்!
காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். - கி.வீரமணி

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் - கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்கு திராவிடர் கழகம் பற்றி பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் ‘விடுதலை’ நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்ற தந்தை பெரியார் எங்கே? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத சங்கராச்சாரியார் எங்கே?. - கி.வீரமணி

 கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்ற தந்தை பெரியார் எங்கே?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத சங்கராச்சாரியார் எங்கே?. -  கி.வீரமணி

இந்தப் பொது ஒழுக்கத்துக்கு ஊறுவிளைவித்த சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து வாங்கி நீதிபதி தீர்ப்பு சொல்லலாமா?

சென்னை மியூசிக் அகாடமியில் 24.1.2018 இல் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் - சமஸ்கிருத அகராதியை அன்றைய ஆளுநர் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது.

அதுபோது, அந்த நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திரர் கலந்துகொண்டார். தமிழ்த் தாய் வாழ்த்தின்போது, ஆளுநர் உள்பட அவையினர் அனைவரும் எழுந்து நின்றனர்.

விஜயேந்திரர் மட்டும் எழாமலே கண்ணை மூடிக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார். நாட்டுப்பண் பாடும்போது மட்டும் எழுந்து நின்றார்!

செவ்வாய், 7 டிசம்பர், 2021

‘‘இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்குமீறிய அதிகாரச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!’’ உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தேவை! - கி.வீரமணி

 நாகாலாந்தில் இராணுவத்தால் அப்பாவி தொழிலாளர்கள் - பொதுமக்கள் 21 பேர் சுடப்பட்ட கொடுமை!

‘‘இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்குமீறிய 

அதிகாரச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!’’

உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தேவை! - கி.வீரமணி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் மான் மாவட்டத்தில் உள்ளது ‘ஓட்டிங்’ என்ற கிராமம்.

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கோர மரணம்

இந்தக் கிராமம் கோன்யாக் நாகர் சமூகத்தினர் பெரிதும் வாழும் கிராமம் ஆகும். சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் பணி முடித்து ஒரு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த வேனை நோக்கி இராணுவத்தினர் தொடர்ந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த ஊர் கிராமத் தொழிலாளிகள் - அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும், அதைத் தொடர்ந்து  அவர்களது ஆத்திரத்தின் வடிகாலாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மேலும் ஏழு பேர் உயிரிழந்து, பலியானோர் எண்ணிக்கையை 21 ஆக உயர்த்திவிட்டது நெஞ்சங்களில் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது!

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று

அப்பாவிகளான சுரங்கத் தொழிலாளர்களும், ஊர்ப் பொதுமக்களும் இப்படி சொந்த மண்ணிலேயே, இராணுவத்தின் அலட்சியப் போக்காலோ - கவனக் குறைவான அவசரப்பட்ட நடவடிக்கைகளாலோ உயிரிழந்துள்ள கொடூரம் நாகாலாந்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிரான ஒரு மனப்போக்கை அந்த மக்களிடையே உருவாக்கியிருப்பது - அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல; பெரிதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றும் ஆகும்.

திருப்தி அளிக்காத உள்துறை அமைச்சரின் விளக்கம்

நாடாளுமன்றத்தில் தி.மு.க. மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் அவையில் இதுபற்றி முழுமையாக விவாதிக்கவேண்டும் என்று குரல் எழுப்பினார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபற்றி விளக்கம்கூறி, நடந்த சோக சம்பவத்திற்காக அவையில் வருத்தம் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வுக்கு இராணுவம் மன்னிப்புக் கோரியிருக்கிறது என்றெல்லாம் கூறினாலும்கூட, அவரது விளக்கம், வருத்தத்தைவிட, நடந்துள்ள கொடூரத்தை நியாயப்படுத்துவதே பிரதானமாக உள்ளது என்ற எண்ணத்தை கேட்போருக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது. SIT என்ற அமைப்பின்மூலம் பொது விசாரணைக்கும் ஏற்பாடாகியுள்ளது.

அதிகாரமும், இராணுவமும் மக்களின் மனப்புண்ணை ஆற்றாது

இராணுவத்தின் மன்னிப்போ, அதன்மீது அத்துமீறியதற்கான வழக்கோ வடகிழக்கில் உள்ள மாநில மக்களின் இது மாதிரியான பிரச்சினைக்குச் சரியான நிரந்தரத் தீர்வாகாது; அமைதியை ஏற்படுத்தி, மக்களின் அன்பையும், நல்லெண்ணத்தையும் பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, இராணுவ நடவடிக்கைகளால் - வெறும் அதிகாரம், சட்டங்களைக் காட்டினாலும் அம்மக்களின் மனப்புண்களை ஆற்ற அவை ஒருபோதும் பெரிதும் உதவாது.

இந்த நிகழ்வு வெந்த புண்ணில் வேலைச் சொருகும் வேதனையான துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதைவிட, அதைக் கிளறிவிடக் கூடிய விளைவையே ஏற்படுத்தக் கூடும்.

நாகாலாந்தின் முதலமைச்சர் நெப்போரியோ அவர்களும், மேகாலாயாவின் முதலமைச்சர் கான்ராட் சங்கமா அவர்களும் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளை ஏற்பதே நிரந்தர பரிகாரத்திற்கும், அமைதி திரும்பி மக்களாட்சியின் மாண்புகளை அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அதிக அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டும்

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது அமலில் உள்ள இராணுவத்தின் எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்ட சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற அவ்விருவரது கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் ஏற்பதே சிறப்பான முழு அமைதி திரும்பி, வடகிழக்கின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவிடக் கூடும்.

‘’Armed Forces (Special Powers) Act - AFSA’’ - இராணுவத்திற்கு அதிகாரம் தந்துள்ள இந்த சட்டம், தொடர்ந்து அங்கே அமலில் இருப்பது. ஏற்கெனவே அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசத்தின் மூன்று மாவட்டங்கள் அசாம் மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் - ஆகியவைகளில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது என்ற பெயரில் பாதுகாப்பைத் தர, இராணுவம், துப்பாக்கிச் சூடு உள்பட நடத்திக் கொள்ளும் அதிகாரத்தை தருகின்ற சட்டமாக உலவுவதுபற்றி இணக்கமாகச் சிந்தித்து, சரியான முடிவை எடுத்தால், அது அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பெரிதும் துணை புரிவதாக அமையக்கூடும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடுகளை வழங்குவது அவசர அவசியமாகும்.


தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்கவேண்டும்! - கி.வீரமணி



எதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!

அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்கவேண்டும்!

தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான, பா.ஜ.க. ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கேற்றவாறு இந்தியாவின் கூட்டாட்சி (Federal) யை படிப்படியாக மாற்றி, ஒற்றை ஆட்சி(Unitary)யாக ஆக்கி, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள மாநிலங்களின் அத்துணை அதிகாரங்களையும் நாளும் பறிக்கும் ஆக்கிரமிப்பினைச் செய்து வருகிறது!

மாநிலங்களின் அதிகாரங்களை விழுங்கி ஏப்பம் விடும் பணி.

புதன், 24 நவம்பர், 2021

சமூகநீதி, ஜாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்ட இந்த திராவிடர் ஆட்சி அதைச் செய்யாவிட்டால், வேறு எந்த ஆட்சியில் செய்ய முடியும்?. - கி.வீரமணி


 ஜாதி பேதம் காட்டாது முறையாக அடக்கம் செய்யும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகை அளிக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பாராட்டுக்குரியது!

இதற்கென  ஒரு தனிச்சட்டமே இயற்றப்பட்டு எல்லா ஊர்களிலும் சமத்துவ நிலையை உருவாக்க வழி செய்யவேண்டும்! - கி.வீரமணி

நம் நாடு ‘‘சுதந்திரம்‘’ பெற்று 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இன்னமும் நம் மக்களிடையே சுடுகாடு, இடுகாட்டில்கூட ஜாதிவெறி தலைதூக்கி ஆடுவதோடு, மனிதர்கள் இறந்த பிறகு, ஜாதியும், வெறியும் சாகாமல் இருப்பது மட்டுமல்ல; மனிதத்தன்மை  சிறிதுமற்ற முறையில், மயானங்களில் பேதம்; சுடுகாட்டிற்குச் செல்வதற்கு ஒழுங்கான பாதை வசதிகள் கிடையாது; கிராமப்புறங்களில் ஜாதிவெறி தெருக்களில் படமெடுத்தாடி, சவ ஊர்வலத்திலும்கூட ஜாதிச் சண்டைகள் நடைபெறும் அவலம் ஒரு தேசிய அவமானம் அல்லவா?

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்! ‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பாஜக தலைவர்? - கி.வீரமணி



ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்!

‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்? - கி.வீரமணி

தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜ.க.தானாம் - ஆசைப்படலாம் அண்ணாமலை!
ஆனால், யதார்த்தம் கைகொடுக்காது!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க அதன் புதிய தலைவர் அண்ணாமலை (அய்.பி.எஸ். - ஓய்வு) திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறார்; தெளிவற்ற அவரது பேச்சுகளுக்கு சில ஏடுகள் விளம்பரம் கொடுத்தாலும், அவை விழலுக்கிறைத்த நீராகவே ஆவது உறுதி!

திங்கள், 22 நவம்பர், 2021

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா? - கி.வீரமணி


சட்டப்பேரவை குறித்து தந்தை பெரியார் கூறியது என்ன?

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா?

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரையறை தேவை!

சட்டப்பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் அரிய கருத்துரை

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் கடந்த 17 ஆம் தேதி அனைத்திந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது கருத் துரையை முன்வைத்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்பமை அப்பாவு அவர்கள் மிக அருமையான, அரசியல் சட்ட ரீதியான கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார்.

அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி



அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி

சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர்.
வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது.