தமிழக வாழ்வுரிமைக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.- தி.வேல்முருகன்


 கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக,  இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்து கடந்த 2020-ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும், இனிமேல் பயிலும் மாணவர்களுக்கும்,  மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.   

புதன், 20 அக்டோபர், 2021

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.- தி.வேல்முருகன்


 தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.  

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்தது. மேலும், 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது. 

வியாழன், 7 அக்டோபர், 2021

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் தொடங்கியிருப்பதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.வேல்முருகன்

 


தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் தொடங்கியிருப்பதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெற் பயிர்கள் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை! - தி.வேல்முருகன்


 
சட்டமன்ற தேர்தல் செலவுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்!

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை! - தி.வேல்முருகன்

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 கோடி புதிதாகக் கடன் வாங்குவதற்கு, இந்த 2021-22 வரவு- செலவுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.-தி.வேல்முருகன்


 தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. 

கொரானா காலங்களில் பல்லாயிரம் பேர் வேலையிழப்பு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக தொடரும் வன்முறைகள், நாட்டின் உற்பத்தி குறைவு என நாடு அபாயத்தின் விளிம்பில் நின்று மூச்சிதிணறிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு, வெங்காயம் விலை உயர்வு, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.- தி.வேல்முருகன்


 தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன், கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள  ஊபா (UAPA) பொய் வழக்கைத் திரும்பப் பெறுமாறு  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சேலத்தில் தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஊபா(UAPA) கருப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

திங்கள், 25 ஜனவரி, 2021

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது.- தி.வேல்முருகன்


 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மாநில அரசு நடத்தும் 'செட் தேர்வு, தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நெட் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 

சனி, 23 ஜனவரி, 2021

இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தலைக் கருதியேனும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை விரைந்து பரிந்துரை வழங்கிட வேண்டும்.- தி.வேல்முருகன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்  வலியுறுத்துகிறேன். விடுதலை செய்யும் அதிகாரம்  குடியரசுத்தலைவருக்கே இருப்பதாகக் கூறி காலம் கடத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

செவ்வாய், 19 ஜனவரி, 2021

புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.வேல்முருகன்


 வரலாறு காணாத வகையில்  விண்ணை நோக்கி உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை வலியுறுத்த தமிழக அரசு நெஞ்சுரத்தோடு முன்வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 6 ஜனவரி, 2021

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்பிருக்கலாம் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எனவே, இந்த விசாரணையை சிபிஐ மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.-தி.வேல்முருகன்


பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். 

திங்கள், 4 ஜனவரி, 2021

உடும்பஞ்சோலை மலைப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. - தி.வேல்முருகன்


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா அமைந்துள்ள உடும்பஞ்சோலை மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனக் கடந்த 1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்குத் தடை உள்ளது. 

இந்நிலையில், தமிழக எல்லையிலிருக்கும் இந்த வனப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று மத்திய வனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் புதிய அரசாணையை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! - தி.வேல்முருகன்



 பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! - தி.வேல்முருகன்

உலகம் முழுவதும் 2020-ல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் , ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக Reporters Without Borders என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த துணியும் ஊடகவியலாளர்கள் காட்டுமிராண்டித்தனமான கொலைகளின் இலக்குகளாகத் தொடர்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

வியாழன், 31 டிசம்பர், 2020

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! - தி.வேல்முருகன்


 

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! - தி.வேல்முருகன்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நேர்மையான இந்தப் போராட்டத்தில், மக்களும் உடனடியாக ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்!

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டம்,  உலகின் கவனத்தையே ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. 

புதன், 16 டிசம்பர், 2020

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! - தி.வேல்முருகன்



 மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே எரிவாயு,  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! - தி.வேல்முருகன்

தங்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களின் அடுத்த கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணி பார்க்க முடியாத நிலைக்கு உயர்த்தியுள்ளது மோடி அரசு. 

திங்கள், 7 டிசம்பர், 2020

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஐ.சி.எப் - யை தனியார் மயமாக்குவது, அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கே எதிரானது! - தி.வேல்முருகன்


ஐ.சி.எப் உள்ளிட்ட ரயில்வை பணிமனைகளை தனியார் மயமாக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வேதனை முழக்கம் தமிழகத்தில் எழுந்த போது, மண்ணின் மக்களுக்காக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது தான் ஐ.சி.எப் தொழிற்சாலை . 

வெள்ளி, 6 நவம்பர், 2020

காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை! - தி.வேல்முருகன்


சாத்தான்குளம் பாணியில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை!

இந்தப் படுகொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவும், வியாபாரி செல்வமுருகன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் வகை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது                            தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

வியாழன், 15 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது! - தி.வேல்முருகன்


விஜய்சேதுபதி          அவர்களுக்கு ஒரு               வேண்டுகோள் ! - தி.வேல்முருகன்

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்தியப் பல்கலையாக்கிடும் கெட்ட எண்ணத்தில்தான், உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! - தி.வேல்முருகன்


 உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்தியப் பல்கலையாக்கிடும் கெட்ட எண்ணத்தில்தான், உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! 

அந்த வலையில் அதிமுக அரசு விழ வேண்டாம்; அது அண்ணா பல்கலைக்கழகமாகவே இருக்கட்டும்; சூரப்பா சும்மாவே இருந்துவிட்டுப் போகட்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

ஹிந்தி நாட்டவர் ராஜேஷ் கோட்சேவே! இந்தியாவை விட்டு வெளியேறுகிறீரா அல்லது இந்தியராகிய நாங்களே உம்மை வெளியேற்றவா? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!


உலக நாடுகள் சங்கத்தின் (Leauge of Nations) ‘ஒரு மொழி ஒரு நாடு’ என்ற நியதிப்படி, ஆயுஷ் செயலர் ராஜேஷ் கோட்சே, ஹிந்தி பேசும் ஒரு தனி  நாட்டைச் சேர்ந்தவரே! 

அவர் நாடு மாறி, பல்வேறு மொழி இனத் தேசிய ஒன்றியமான இந்தியாவிற்குள் வந்து, இந்தியர்களைப் பார்த்தே, ஹிந்தி தெரியாதவர் வெளியேறுங்கள் என அதட்டுவதா? 

ஹிந்தி நாட்டவர் ராஜேஷ் கோட்சேவே! இந்தியாவை விட்டு வெளியேறுகிறீரா அல்லது இந்தியராகிய நாங்களே உம்மை வெளியேற்றவா?  - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி! 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! - தி.வேல்முருகன்

 

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் இனி ஒன்றிய அரசின் பொது நுழைத் தேர்வாம்! 

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! 

இதற்கு நிலையான தீர்வாக, மாநிலங்கள் தன்னாட்சி பெற வேண்டும் அல்லது ஒரே நாடு என்பதிலிருந்து விடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

பிரிட்டிஷார் அன்று, பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் கொண்ட நாடுகள் - சமஸ்தானங்கள் - இனக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து வணிகச் சந்தைக்காக உருவாக்கியதுதான் இந்தியா என்ற நாடு. ஆனால் சுதந்திரம் பெற்றபின் தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அதில் மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) எனக் குறிப்பிடப்பட்டு, கூட்டாட்சி முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகாறும் வந்த அரசுகள் இதைச் சிதைக்க பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு வந்ததிலிருந்து கூட்டாட்சி முறை என்ன, அரசமைப்புச் சட்டத்துக்கே வேட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதைத் தெளிவாக்குகிறது.