சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 செப்டம்பர், 2021

நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் லே நகரில் தொடங்கி வைத்தார்


 நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அமைந்திருக்கும் சிந்து சன்ஸ்கிருதி கேந்திராவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 6 ஜூலை, 2021

ராஜ்குமார் ஹிரானியின் பிகே(2014) PK திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவ், தங்களின் சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (NFAI) அறிவித்துள்ளது.


 ராஜ்குமார் ஹிரானியின் பிகே(2014) திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவ், தங்களின் சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய திரைப்பட  காப்பகம் அறிவித்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜ்குமர் ஹிரானி, 2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தனது பிகே திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவை, மும்பையில்  இந்திய தேசிய திரைப்பட காப்பக இயக்குனர் பிரகாஷ் மேக்டமிடம் ஒப்படைத்தார்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் திரு.விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் வெளியேறுவது சுயமரியாதைக்குரியதென மே17 இயக்கம் கருதுகிறது.


 இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. பண்பாட்டு துறை முதல் அரசியல் துறை வரை இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழீழப் போரின் போது மேற்குலகின் அரசியலை நியாயப்படுத்தியவரும், தமிழீழ இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் பொறுப்பு என முழங்கியவருமான நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படும் எரிக் சோல்ஹேம் களம் இறக்கப்படுகிறார், மறுபுறத்தில் பண்பாட்டு தளத்தில் இலங்கையின் ஆளுமைகளான முத்தையா முரளிதரன் போன்ற சிங்களக் கைக்கூலிகள் பற்றிய திரைப்படங்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் அரசியல் களம் தமிழீழ அரசியலை விட்டு விலகி இருப்பதாக இந்த அரசுகள், ஆற்றல்கள் தவறாக எடை போட்டிருக்கின்றன.

பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.- E.R.ஈஸ்வரன்


 பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களும், டீஸரும் ஆபாசம் நிறைந்ததாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதுப்போன்ற படங்கள் வெளிவந்தால் இளைய சமுதாயம் முற்றிலும் சீர்கெடும். தமிழகம் கலாச்சாரமும், பண்பாடும் நிறைந்த மண். இம்மண்ணில் கலாச்சார சீரழிவை உருவாக்குவதற்காக ஒரு சிலர் ஆபாசமான படங்கள் எடுத்து அண்மைக்காலமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

திரைப்பட தணிக்கை குழுவும் இதுப்போன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதால் தொடர்ந்து எந்தவொரு தடையுமின்றி திரைக்கு வருகிறது. இது மாதிரியான படங்கள் வெளிவருவதை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரட்டை வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்த இரண்டாம் குத்து படம் திரைக்கு வந்தால் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க கூடியதாக அமையும். பள்ளி பருவ மாணவர்கள் மனதில் தவறான தாக்கத்தை உருவாக்கும். 

தமிழக முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களால் பெற்றோர்கள் அனைவரும் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக திரையுலகம் படைப்பு என்ற பெயரில் மிக மோசமான போக்கை கடைப்பிடிப்பது ஏற்புடையதல்ல. தமிழ் சமூகத்திற்கு ஏற்றவாறு நல்ல படங்களை எடுக்க வேண்டும். பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தமிழகம் முழுவதும் எந்தவொரு தியேட்டரிலும் திரையிட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து தவறான காட்சிகளை நீக்க வேண்டும்.

திங்கள், 27 ஜனவரி, 2020

பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது வருத்தம் அளிக்கிறது - நடிகர் சூர்யா


நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனின் கடந்த வந்த பாதை குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சிவகுமார் மற்றும் அகரம் நிறுவன நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதன், 22 ஜனவரி, 2020

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேகில் பிரசாந்த்



அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியதாக நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அறிவித்தார். மேலும், லண்டன் ட்ரினிடி கல்லூரியில் தனது மகனும் நடிகருமான பிரசாந்த் பியானோ பயின்றிருப்பதால் அவரே ஆயுஷ்மான் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்றும் தியாகராஜன் கூறியிருந்தார்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தர்பார் திரைபடத்திற்குத் தொடரும் சிக்கல்


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தர்பார்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நடிகை இலியானாவிடம் பலான கேள்வி கேட்ட ரசிகர்

நடிகை இலியானாவிடம் பலான கேள்வி கேட்ட ரசிகர் 


பிரபல நடிகையாக வலம் வந்த இலியானா. நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் . தெலுங்கு மற்றும் தமிழில்  இந்தியில் என பல வெற்றிப் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இலியானாவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூகவலைதளத்தில் தங்கள் தங்களை ஒருவருக்கு ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தினர். ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை நீக்கி உள்ளனர்.

சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருப்பர்  இலியானா தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, ரசிகர் ஒருவர் மாமேன் நான் இருக்கும்போது நீ ஏன் புள்ள அதுக்குள்ள உன்னுடைய கன்னித்தன்மையை இழந்துட்டே?. அதற்கு பதிலளித்த நடிகை இலியானா, “ஏன் இதில் எல்லாம் மூக்கை நுழைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் கேட்ட கேள்வியை உங்களின் அம்மாவிடம்  கேளு ” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். தன்னிடம் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர் நடிகை இலியானா பதிலடி கொடுத்துள்ளார்.



ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வனிதாவின் வஞ்சகத்தில் மதுமிதா பலியானது எப்படி ?

வனிதாவின் வஞ்சகத்தில்  மதுமிதா பலியானது எப்படி ?



வனிதாவின் காழ்ப்புணர்ச்சிக்கு காரணம்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் வனிதா சின்ன பிரச்சனை கூட பெரித்தாக்குவார், முதல் வாரமே தலைவர் ஆனார், அப்போது முதல் பிக்பாஸ் வீட்டில் கத்தி கொண்டிருக்கும் வனிதா, மற்ற போட்டியாளர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்வார். மற்றவர் போட்டியாளர்களும் ஒரு கட்டத்தில் விலகி செல்வர், இதனை சாதமாக பயன்படுத்தி வந்தார். கேப்டன் தேர்ந்து எடுக்கப்படும் போட்டியில் எற்பட்ட பிரச்சனையில் வனிதாவிடம் தர்ஷன் முதல் முறையாக கேள்வி கேட்டு பிக்பாஸ் வீட்டிலும் மற்றும் வெளியிலும் பிரபலமானார். வனிதா அப்போதும் கூட மைக்கை கழட்டி வைத்து பிக்பாஸ் தன்னிடம் பேச வேண்டும் என்று முறையிட்டார், ஆனால் பிகபாஸ் கண்டுக்கவே இல்லை. மாறாக சாக்க்ஷி தலைவராக அறிவித்தார். பிறகு வனிதாவும் தர்ஷனுடன் சமரசம் செய்தார். பின்னர் வரும் வாரத்தில் ஏலிமினேட் ஆனார். இவருடைய எலிமினேஷனுக்கு பிறகு நிகழ்ச்சியின் டி.ஆர்.பி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா தன்னை எதிர்த்தால் தான் மக்களிடம் தர்ஷன் பெரும் வரவேற்பு பெற்றார், என்பதை அறிந்து கொண்டார். லாஸ்லியா மற்றும் முகின்ராவ் மக்களிடம் வரவேற்பு இருப்பதை அறிந்து மேலும் காழ்ப்புணர்ச்சி ஆகி இருகிறார். 

வனிதாவின் மறுபிரவேசம்

இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் அதிரடியாக மறுபிரவேசம் செய்தார் வனிதா. ஹவுஸ்மேட்ஸுகளின் வெறுப்புக்கும், விமர்சனங்களுக்கு ஆளான வனிதா மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தது ஹவுஸ்மேட்ஸுக்கு பேரதிர்ச்சி தான். ஆனால் அதை யாரும் காட்டி கொள்ளவில்லை நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்ததை விட மிகவும் மோசமாக வனிதா மாறியிருந்தார். நேற்று அனைவரிடமும் மிகவும் நல்லவர் போல பேசினார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்பட்டார். மூவர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். லோஸ்லியாவை கஸ்தூரியிடம் கோர்த்து விட்டார். அபிராமிக்கும் முகினுக்கும் சண்டை மூட்டி விட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வந்தார். அதை தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தார்.

ஆணதிக்கம்

ஆண்களுக்கு எதிராக மதுவை நன்றாக தூண்டிவிட்டார் வனிதா. பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணதிக்கம் தழைத்தோங்குவதாக அவருடைய கருத்தை மதுமிதாவுக்குள் திணித்தார். பிறகு தர்ஷன் மேல் விமர்சனங்களை உருவாக்க வைத்தார். தர்ஷனை ஆதரித்த  சாண்டி, கவின், லோஸ்லியாவை குறிவைத்து மதுமிதா எப்போதும் சண்டையை உருவாக்க இதை வனிதா  நன்றாக தூண்டி கொண்டே இருந்தார். ஆனால் ஆண்களிடம் அவர் மட்டும் சகஜமாக பேசி வந்தார். 

உணராத மதுமிதா

இதனை உணராத மதுமிதா மனதிற்கு தோன்றியதை படபடவென பேசிய வண்ணம் இருந்தார். இந்த நிலையில் வனிதாவின் வரவிற்கு பின் மதுமிதாவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வனிதாவின் தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர் குழுவினர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த மதுமிதா, நான்கு பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மதுமிதா மீண்டும் கவினுடன் விவாதம் செய்தார். இதனால் சேரன், கஸ்தூரி தவிர மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் வெறுப்பையும் மதுமிதா சம்பாதித்தார்.

தற்கொலைக்கு முயன்ற மதுமிதா

இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து மதுமிதா தான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி இந்நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்


பிக்பாஸ் வீட்டில் வனிதா வழக்கம் போல காலை முதலே ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வருகிறார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்படுவதாக தோன்றுகிறது. அதை தொடர்ந்தே காய்களை நகர்த்துகிறார் வனிதா.

ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் அபிராமி உடல் நலிவடைந்து காணப்பட்டார். இதை கண்ட லோஸ்லியா வீட்டின் தலைவரான சாண்டி மாஸ்டரிடம் முறையிட்டார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் அறிவிப்பதற்குள் சாவியை எடுத்து வந்து அபிராமியை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அபிராமி வர மறுத்தார். அப்போது சாண்டிக்கும், கஸ்தூரிக்கும் சின்ன வாக்குவாதம் நடந்தது. சேரனும் அனைவரும் சேர்ந்து பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கலாம் சாண்டி ஆலோசனை கூறினார். அதை தொடர்ந்து அபிராமியை விடுக்குவிக்குமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். 

சேரன் இதற்கிடையில் தர்ஷன், கவின், சாண்டி, முகின் ஆகியோரை வாங்க, போங்க, சார் என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார். இதை கவனித்த நான்கு பேரும் தங்களுக்குள் பேசி கொண்டனர். உடனே கவின் சேரனை குறை கூற ஆரம்பித்தார். ஆனால் ஆண்கள் யாரும் சேரனிடம் சென்று பேசவில்லை. 

ஆண்கள் பெண்களும் பிரிந்திருப்பதை உணர்ந்த பிக்பாஸ் அதற்கு ஏற்றார் போல ’சபாஷ் சரியான போட்டி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிந்தனர். இது மேலும் பிரச்னையை கூட்டியது.

வனிதாவும் முகின், தர்ஷனை குறிவைத்து காத்து கொண்டு இருந்தார்.  ஆண்கள், பெண்களில் சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் என்ற விவாதத்தில் பேசும் போது அபிராமி, முகின் வாதத்தில்  தர்ஷன் முகின் ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்க்காக காத்திருந்த வனிதா தர்ஷனை சீண்டினார். உனக்கு ஏன் கோபம் வரவேண்டும், வாதத்தில் ஈடுபட்டார், இது மேலும் பிரச்னையை கூட்டியது.

ஒருவழியாக விவாதம் டாஸ்க் முடிவடைந்தது.  சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார் ? சமைக்க தெரிந்தவர்கள் யார் ? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் ?  ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

பிறகு வனிதா, கஸ்தூரிக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டது.  உடனே வனிதா ஆண்களிடம் வந்து  கஸ்தூரியை கேலி செய்தார். அப்போது அங்கே வந்த கஸ்தூரியை நையாண்டி செய்து பாடல் பாடினார்கள். இதனால் கஸ்தூரி எரிச்சலுடன் காணப்பட்டார். கவின் மற்றும் சாண்டி கஸ்தூரிக்கு காக்கா என்று பட்ட பெயர் வைத்து அவ்வப்போது காகம் போல் கரைந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் வனிதாவின் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த முகின், அவரை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும்,  முகின் தன்னை கன்னத்தில் அறைந்ததால் உடனே பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் முகின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

தமிழ் ராக்கர்ஸ் தடை ; டில்லி ஐகோர்ட் உத்தரவு

தமிழ் ராக்கர்ஸ் தடை ;  டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகவும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். இந்த தளம்  புத்தம் புதிய படங்களை மறுநாளே பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இதனை லட்சக் கணக்கான இளைஞர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால்  சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என பலரும் 50 சதவிகித வருமானத்தை இழந்து வருகிறது. 

இந்த நிலையில் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் தங்களின் படங்களை அனுமதி இன்றி தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் வெளியிடுவதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. அதனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்ட விரோதமாக புதிய திரைபடங்களை வெளியிட்டு வரும் இணையதளங்களை அனைத்தையும் நீக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட்  தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணைய தளங்களை நீக்க உத்தரவிட்டதுடன், அத்துடன் காப்புரிமையை மீறும் வலைதளம் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்



37வது நாள் துள்ளுவதோ இளமை என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் இன்றைய நாள் துவங்கியது. இதை தொடர்ந்து  முகின் தான் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். சாண்டி நச்சுனு ஒரு பாடலை பாடினார். பின்னர் அபிராமி காதலா நட்பா என்று  ரேப் சாங் பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடினார்.

இன்றைய நாளில் போட்டியாளர்களுக்கு ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இதன் விதிமுறைகளை மதுமிதா அனைவருக்கும் படித்து காட்டினார். 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உடைகளை அணிந்து கொண்டு, அவர்களுக்கு என்று போடப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். பாடல் ஒலித்த 15 வினாடிக்குள் மேடை ஏறி ஆட வேண்டும்.  இல்லையேன்றால் ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான பாய்ண்ட் குறைக்கப்படும்.

சேரன் – ரஜினிகாந்த் (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்)
அபிராமி – பத்மினி (மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன)
சாண்டி – சிம்பு (தத்தை தத்தை தத்தை இவன் மன்மதன்)
சரவணன் – விஜயகாந்த் (கடைவீதி கலகலக்கும்)
கவின் – அஜித் (ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா),
முகென் – விஜய் (போக்கிரி பொங்கல்)
தர்ஷன் – கமல் (சகலகலா வல்லவன்)
லோஸ்லியா – திரிஷா (கட்டு கட்டு கீரை கட்டு)
ரேஷ்மா - ரம்யா கிருஷ்ணன் (வை ராஜா வை)
மதுமிதா - சரோஜா தேவி (ஒரு பெண்ணை பார்த்து நிலவை),
ஷெரின் - குஷ்பு (போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி)
சாக்‌ஷி - தமன்னா (தஞ்சாவூர் ஜில்லாக்காரி)

குரூப் டான்ஸ் (அனைவரும் மேடையின் பக்கத்தில் ஆட வேண்டும்) - ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவாஎன்று பாடல் கொடுக்கப்பட்டது. 

முதலில் குரூப் டான்ஸ்க்கான (ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவா) பாடல் ஒலித்தது. ஆனால், அபிராமியால்  வந்து ஆட முடியாததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. 




  • இதனை தொடர்ந்து வேட்டி தூக்கி கட்டி கொண்டு கழிவறை சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான (கடைவீதி கலகலக்கும் )என்ற பாடல் ஓலித்தது . இந்தப் பாடலுக்கு  சரவணன் விஜயகாந்த் போல ஆடினார்.





  • அடுத்தாக ரஜினியின் ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் கொடுத்ததோடு, அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 






  • 3வது தாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார்.







 இதற்கிடையே விஜய் வேஷத்தில் இருந்த முகின் அவர்கள் அஜித்தாக இருக்கும் கவினுக்கு கையில் வாட்ச் ஒன்றை பரிசாக கட்டிவிட்டார்.





  • 4வது ஆக விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த கில்லி படத்தின் கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடல் ஒலித்தது . இந்த பாடலுக்கு த்ரிஷாவாக இருந்த லாஸ்லியா சூப்பராக ஆடினார்.


  • 5வது தத்தை தத்தை தத்தை என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு சிம்புவாக இருந்த சாண்டி மாஸ்டர் மற்ற போட்டியாளர்களும் சூப்பராக ஆடினார்.


  • 6வது ஒரு பெண்ணை பார்த்து நிலவை என்ற பாடல் ஒலித்தது. சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரோஜா தேவி போல டான்ஸ் ஆடினார். ஆனால் தாமதமாக வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியில் இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம், மக்கள், உணவு, திருவிழா, சினிமா பற்றி லோஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். 

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

மீரா மிதுன் வெளியே போயிட்டார், இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா ? என்ற பலரது கேள்விக்கு பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் பிராசஸ் மூலமாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.



இதுவரை கன்பெக்‌ஷன் ரும்க்குள் நடந்து வந்த இந்த நாமினேஷன் பிராசஸ் முதல் முறையாக அனைவரது முன்னிலையிலும் நடந்து இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு மது (6) , கவின் (6)  ரேஷ்மா (4) சாக்க்ஷி (3)  மற்றும் அபிராமி (2) என ஐந்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன் கடந்த வாரம் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவரை இந்த வாரம் ரேஷ்மாவை தவிர யாரும் நாமினேட் செய்யவில்லை. ரேஷ்மா  நாட்டாமை டாஸ்க்கில் யார் மீதோ காட்ட வேண்டிய கோபத்தை என் மீது காட்டியதால் சேரனை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார். குறிப்பாக கடந்த நாட்களில் சேரன் மீது அதிருப்தியில் இருந்த கவின், சரவணன், சாத்தான் என்று கூறிய சாண்டி மாஸ்டர் ஆகியோர் யாரும் நாமினேட் செய்யவில்லை.

கவினை இந்த வாரம் பெண்களில் லாஸ்லியாவை தவிர ரேஷ்மா, அபிராமி, ஷெரின், மதுமிதா மற்றும் சாக்‌ஷி முதல் முறையாக கவினை நாமினேட் செய்தனர். அதுபோல ஆண்களில் சேரன் மட்டுமே நாமினேட் செய்தார். மேலும் சாக்‌ஷி தன்னை நாமினேட் செய்த காரணத்தால் அதிருப்தியில் இருத்தார். கவின் சென்ற வாரம் சாக்‌ஷியை நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

மதுமிதாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். ஆண்களில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் பெண்களில் அபிராமி, லாஸ்லியாவும் நாமினேட் செய்தனர்.



ரேஷ்மா முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை முகின், தர்ஷன், சேரன், கவின் ஆகியோர் நாமினேட் செய்தனர். முகின் ரேஷ்மாவை ஒருவரிடம் ஒரு விஷயத்தை கேட்டு அதனை மற்றொருவரிடம் சொல்லும் போது தவறாகவே சொல்கிறார் என்று கூறி நாமினேட்  செய்தார். ரேஷ்மாவும் முகின், தர்ஷன் ஆகியோர் தன்னை நாமினேட் செய்த காரணத்தால் கண்ணீர் சிந்தி அழுதார்.

சாக்‌ஷியை மதுமிதா, லாஸ்லியா, மற்றும் சரவணன் ஆகியோர் நாமினேட் செய்தனர். மேலும் கவினுக்கும் – சாக்‌ஷிக்கும் இடையிலான காதலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாக்‌ஷி மன அழுத்தம் காரணமாக ஷெரினிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அபிராமியை சாண்டி மற்றும் சரவணன் நாமினேட் செய்தனர். அபிராமி தன்னை இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது. 



பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

வசந்த பாலன் தனது பெஸ்புக் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன். சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.

இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,
அவர் சொல் தட்ட முடியுமா. உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார்.நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது  எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.

வாழ்த்துகள் சாண்டி.
வென்று வாருங்கள்.
ஜெயில் காத்திருக்கிறது.


நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள் - மீரா மிதுன்

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

திங்கள், 29 ஜூலை, 2019

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள் - மீரா மிதுன்

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்


மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்களை கமல்ஹாசன் பேசும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அதனால் சாண்டிக்கும் மீராவுக்கு  ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் சேரன் மீதான தன்னுடைய கருத்தை மீரா மிதுன் மாற்றிக்கொள்ளவே இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். 

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றி எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை ஒவ்வொரையும் காப்பாற்றி, கடைசியில் மீராவை வாங்க பேசலாம் என அழைத்த உடன் பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.  பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதை கேட்டு அதிர்ந்து போன சேரன், நான் எப்ப சொன்னேன் என்று கூறி திகைத்து நின்றார். 

ஹவுஸ்மேட்களிடம் இருந்து விடைப் பெற்று பிக்பாஸ் மெடலை உடைத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கமல்ஹாசனை சந்தித்தார் மீரா. அவரிடம் உரையாடிய கமல், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதன். அது போல உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர் தான். என்று அறிவுரை கூறி வெளியேற்றினார்.







கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?

கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?



கவின் பிக்பாஸ் 3 சீசன் ஆரம்பம் முதலே நான்கு பேரை காதலிப்பதாக கூறி வந்தார். இதற்கு காரணமாக அவர் சொன்னது ஜாலியாக மற்றும் மக்கள் பொழுதுப்போக்கு அம்சமாக அமையும் என்று கூறினார். ஆனால் அதற்கான எல்லையை கவின் வகுக்க வில்லை,அனைவரிடம் நெருக்கம் காட்டி வந்தார். இதை தவறாக உணர்ந்த சாக்க்ஷி தன்னை காதலிப்பதாக உணர்ந்தார். இதனை தன் நெருங்கிய நண்பர்கள் ஆன ஷெரின் மற்றும் அபிராமியுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு கவின் காதல் ரசம் பேச்சை ரசிக்கவில்லை, அதனால் விலகி நட்புடன் மட்டும் பழகி வந்தனர். ஆனால் இதனை லாஸ்லியா அறியாமல் கவின் தன்னிடம் மட்டும் தான் அதிகம் நெருக்கம் காட்டுகிறார், என நம்பி பழகி வந்தார்.

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கமல் வரும் நாளான எலிமினேஷன் நாட்களில் லாஸ்லியா பேசும் பொது மக்கள் செய்யும் ஆரவாரத்தை கவனித்த கவின் லாஸ்லியாவிடம் அதிகம்  நெருக்கம் காட்டினார். இதனை அறியாத லாஸ்லியாவும் கவினுடன் நெருக்கமாக நட்புக்கு மேல் புனித தன்மை பழகி வந்தார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்களும் கவினையும் லாஸ்லியாவையும் இணைத்து காலாய்த்து கொண்டு இருந்தனர். இதனை கவினும், லாஸ்லியாவும் உள்ளுர மகிழ்ந்தனர். லாஸ்லியா கவினை அண்ணா என்று அழைப்பதும், கவின் வருந்துவது போல நடித்து பின்பு காதலில் உருகுவது போன்று பேசுவதும், வாடிக்கையாக இருந்து வந்தது இதன் பொருட்டு லாஸ்லியா மனதளவில் கவினுடன் நெருங்கி நட்புக்கு மேல்புனித தன்மையுடன் பழகி வந்தனர்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

கவின் லாஸ்லியாவின் ஜோடியை கண்டு சாக்க்ஷி பொசசிவ் ஆனார், சாக்க்ஷியும் கவின் தன்னிடம் காட்டிய நட்புக்கு மேல் புனித தன்மையுடன் லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு சில நேரங்களில் கோபம் அடைந்தும் மற்றும் மனம் உடைந்தும் காணப்பட்டார். இதனை பார்த்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்களும் கவின் மீது அதிருப்தி அடைந்தனர்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்

இதனை உணர்ந்த கவினும் சாக்க்ஷியை சமாதானம் செய்ய முயற்சித்தார், இதனை லாஸ்லியாவும் தவறாக உணர்ந்தார். அதனால் லாஸ்லியா கவினுடன் சென்று “ நாம் பழக்கத்தால் சாக்க்ஷி மனம் வருந்துவதால் நீ என்னிடம் பேசமால் இரு”  என கூறி வந்தார். இதனால் இரண்டு லட்டு சாப்பிட நினைத்த கவினுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இது லாஸ்லியாவிற்கும் மனதளவில் பாதிப்பாக அமைந்தது. பின்பு லாஸ்லியாவிற்கு கவினுக்கும் சாக்க்ஷிக்கும் இருக்கும்  நட்புக்கு மேல் புனித தன்மையுடன் இருந்த உறவு அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கவினுடன் பேசமால் தவிர்த்தார்.


பின்னர் கவின் அழுது புலம்பி இரண்டு நாள் சோகமாக சுற்றி  லாஸ்லியா, சாக்க்ஷி இருவரையும் சமாதானம் செய்தார். மேலும் இருவரிடமும் நட்பாக பழகி வருவதாக கூறினார். லாஸ்லியாவும் கவினிடம் மன்னிப்பு கூறினார். ஆனால் லாஸ்லியா நட்புக்கு மெல் புனித உறவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மிகவும் சோகமாக காணப்பட்டார், டாஸ்கில் கவனமின்றி மனம் போன போக்கில் செயல் பட்டார். இதனை கமலும் நேற்று சுட்டி காட்டினார். இன்று அபிராமியுடன் பேசுகையில் கூறியதாவது தான் மனதளவில் பாதிக்க ப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து மீண்டுவர தான் முயற்சித்து வருகிறேன். என்று கூறினார். பழைய லாஸ்லியாவை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா


ஞாயிறு, 28 ஜூலை, 2019

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

மதுவுக்கும் , சேரனுக்கும்  அநீதி இழைத்த கமல்ஹாசன்
"உண்மை ஒரு நாள் வெளிவரும் "; கமலுக்கு தண்ணி காட்டிய மீரா 




கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் தந்தாக கமல் கூறி நிகழ்ச்சி ஆரம்பித்தார்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை கூட கமலஹாசனால் தீர்க்க முடியவில்லை, முதலில் பிக்பாஸ் வீட்டில் கோபம் அடைந்தவர்களை நடித்து காட்டினார். பின்பு மிகுந்த கோபம் தனக்கு சிரிப்பை வர வைத்து என்று கூறினார். ஆனால் மதுவை கழிவறை செல்லும் முன் (heavy)யாக டான்ஸ் செய்ய சொல்லியாதால் வந்த கோபத்தை கமலஹாசன் புரிந்து கொள்ளவில்லை, என் நாம் அவசரமாக மலம் அல்லது சிறுநிர் கழிக்கும் முன் இடையூர் செய்து குதிக்க அல்லது ஆட சொன்னால் நாம் எப்படி உணர்வோம், அதை பார்த்து சிரித்தால் நமக்கு கோபம் வாராத ஒரு வேளை மது அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால் கூட(heavy)யாக டான்ஸ் செய்ய சொன்னால் கூட கோபம் வாராத இதை உணராத கமல் நகைச்சுவை இருந்தது கூறினார். மேலும் தன்னை குள்ளம் என்று கூறி கிண்டல் செய்தால் சில முறை ஜாலியாக எடுத்து கொள்ளலாம் தொடர்ந்து கிண்டல் செய்தால் யாராக இருந்தாலும் கோபம் வரும். இதை சாண்டி மாஸ்டரிடம் கமலஹாசன் உணர்த்த தவறினார்.
கடைசியாக மீரா மிதுன் மற்றும் சேரன் ஆகியோரது பஞ்சாயத்தில் வந்து நின்றது. சேரனுக்காக வக்காளத்து வாங்கி பேசிய கமல்ஹாசன். பின்னர் மீராவை நடித்து காட்ட சொன்னார், அவரும் நடித்து காட்டினார், பின்பு மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் குறும்படத்தை பொட்டு காட்டினார், இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பார்த்தனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடம் கருத்தையும் கமல்ஹாசன் கேட்டு அறிந்தார், வீட்டில் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை கூறினர் ஆனால் மீரா மிதுன் இதனை எற்கவில்லை.
தான் தவறாக தான் உணர்ந்தேன் என்று தன் நிலையில் இருந்தார்.

குறும்படத்தின் பயன் என்ன ? மீரா மிதுன் குற்றம் சாட்டிய அன்றே ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை என்று தான் கூறினர். மக்கள் அனைவரும் சேரன் மீது எந்த தவறும் இல்லை டிவியில் பார்த்தனர். அது தவிர மீரா மிதுன் குறும்படத்தை சமுக வலைத்தளங்களில் மற்றும் (hotstar) இல் பல முறை மக்கள் பார்த்தனர். குறும்படத்தை பொட்டது மீரா தன் தவறை உணர்வதற்கு தான். ஆனால் அவரோ “உண்மை ஒரு நாள் வெளிவரும்” என்று கூலாக கூறி கமல்ஹாசனுக்கு தண்ணி காட்டினார். சேரனிடம் கடைசி வரை சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. சேரன் தன் மனைவி பிறந்த நாளில் கூட தன் மீது சுமத்திய அபாண்ட குற்றசாட்டிற்கு மீராவை சிறு வருத்தம் கூட தெரிவிக்க செய்ய முடியவில்லை. 
மீரா அவர்கள் சேரன் தன்னிடம் தவறாக நடந்தாக உணர்தேன் இறுதிவரை கூறி உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று தெரிவித்து குறும்படத்திற்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தினார். மேலும் அவர் இந்த வாரம் அவரை வெளியேற்றினாலும். வேளியே வந்து ( youtube channel ) மற்றும் சமுக வலைதளங்களில், சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் பல பேட்டிகளில் கூறுவார். என்பது குறிப்பிட்தக்கது.

கமல்ஹாசன் நாளை மீராவிடம் தன் தவறை உணர்த்த தாமல் வெளியேற்றினால் சேரனுக்கு பிக்பாஸ் ஹவுஸ் அநீதி இழைத்தாக கருதப்படும்.

சனி, 27 ஜூலை, 2019

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்



பொதுவாக கமல் நன்றாக மக்களிடம் பில்டப் செய்வார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் நீர்த்து பொவார். ஏற்கனவே கடந்த வாரங்களில் வனிதா விஜய்குமார், கவின் நடவடிக்கைகளை அவர் வன்மையாக கண்டிக்கவில்லை , கவின் இரண்டு பெண்களிடம் செய்த லிலைகளை அவர் காலாய்த்து மட்டும் விட்டார், அதுவும் சாக்ல்ட் விளம்பரம் மட்டும் செய்தார் என்று சொல்லாம்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

சாண்டி மாஸ்டர் செய்யும் கிண்டல்கள் பல ஹவுஸ்மேட் மணம் புண் பட்டது , அதை கமல் சாண்டி மாஸ்டரிடம் நசுக்காக சொல்ல தவறினார்.
மாறாக அதை வரவேற்று பேசினார்.

சரவணன் அவர்கள் மோகன் வைத்தியாவை திருநங்கை போன்று கிண்டல் செய்ததை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வனிதா விஜயகுமார் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி பெருமளவில் குறைந்தது. எனினும், மீரா மிதூன் செய்து வரும் அட்டகாசங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

மீரா மிதுனை கடந்த வாரங்களில் விஜய் டிவி காப்பாற்றி வந்தது, சென்ற வாரத்தில் கவின், சாக்‌ஷி, லோஸ்லியா என பல பிரச்சனைகள் இருந்த போதும் கூட சாக்‌ஷி, மீரா மிதுன் குறும்படத்தை காட்டி மீரா மிதுனை காப்பாற்றி நல்லவராக காட்ட முயன்றனர். மீரா மிதுன் சாண்டி தன்னை டாஸ்கில் சரியாக விளையாட விடாமல் செய்தார் குற்றம் சாட்டினார். அதற்குகாக சாக்‌ஷி அனைத்து ஹவுஸ்மேட் அழைத்து உன் விளக்கத்தை கொடு என்று கூறினார். ஆனால் மீரா மிதுனை நல்லவராக காட்டவே குறும்படத்தை போட்டனர்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

பல முறை எலிமினேஷனுக்கு வந்தும் மீரா மிதுன் காப்பாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்துள்ளதாக அவரே எண்ணிக்கொள்கிறார். தன்னை ஒவியா ஒப்பிட்டு கொண்டுள்ளார். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் வகையில் மீரா செயல்பட்டு வருகிறார். 

அதனால் இந்த வாரம் மீரா மிதுன் தனக்காக ஒரு அணியை உருவாக்கி ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டும், ஏதாவது போட்டியாளரை வம்பிழுத்துக் கொண்டும் இருந்து வருகிறார் மீரா மிதுன். இதனால் சண்டை நடந்ததும், அப்போது அழுது பிரச்னையை முடிப்பது தான் மீராவின் யுக்தி. 

இந்த வாரம் நிகழ்ச்சியில் சேரன் மீது பரபரப்பு புகார் கூறிய மீரா, தொடர்ந்து போட்டியாளர்கள் அடுக்கிக் கொண்டே போன கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார். 

அதுபோல இன்றும் கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன்னை சூழலுக்கு ஏற்றார் போல பேசி, சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறி கமலின் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வைப்பார்.


கமலும் நழுவி சென்று அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பட்டதை பேசியபடி கடைசியில் சாக்‌ஷியை வெளியேற்றுவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட முக்கிய காரணங்கள்,
சேரனுக்கு எதிராக ஆள் சேர்க்கும் முயற்சி ஈடுபட்டு வருகிறார்,






  1. லோஸ்லியாவிற்கும் தனக்கும் இடைவேளி எற்பட காரணம் சேரன் தான் என்று நம்புகிறார்.
  2. லோஸ்லியாவை சேரன் வெயிலில் கட்டி பொட்டு தண்டனை கொடுத்தால்.
  3. லோஸ்லியா சிறைக்கு சென்றது கவினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதற்கு சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
  4. முன்பு ஒரு கொலைகாரன்  டாஸ்க்கில் தான் சிறைக்கு செல்ல சேரன் பரித்துரை செய்தார்
  5. சாக்‌ஷி மற்றும் ஷெரீன் தன்னை தவறாக நினைக்க சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
  6. கவினுக்கு இயல்பாக வயதில் முதியவர்களை பிடிபதில்லை இதனை எலிமினேஷன் ஆன பாத்திமா பாபு கூறி இருந்தார்.
  7. சேரனை நேரடியாக எதிர்த்தால் போட்டியில் தொடர்வது பிரச்னையாக அமையலாம். அதனால் சாண்டி, கவின் ஆகியோரை தூண்டிவிட்டு வருகிறர் சரவணன்.  மேலும் சேரன், சரவணன் இருவரும் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிபிட்தக்கது.
  8. கவின் லோஸ்லியா, சாக்‌ஷி பிரச்சனையில் சேரன் தன்னை  ஹவுஸ்மேட்ஸுடம் மன்னிப்பு கேட்கும் படி பரித்துரை செய்தார்.



அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.


அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி டாஸ்கில்  சிறப்பாக விளையாடியவர்களாக  மிரா மிதுனை பரிந்துரை செய்தனர். மேலும் தங்களை டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என்று சிறை செல்ல தயரானார்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பப் பட்டனர். ஆனால் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டி கொண்டனர், சிறைக் கைதிகளுக்கான உடை மாட்ர்ன் முறையில் அணிந்து கொண்டு இருந்தனர், அப்போது ஒலித்த பிக்பாஸ் சிறைக் கைதிகளுக்கு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. பிக்பாஸிடம் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது போன்று கஞ்சி மற்றும் ஊறுகாய் வழங்க பட்டது. ஆனால் அதனை மகிழ்ச்சியுடன் எற்று கொண்டு நடித்து வருகிறார்கள்.இதனை பார்த்து கொண்டு இருந்த முகின், கவின் , சாண்டி விரும்பவில்லை. 

மேலும் லோஸ்லியா செய்த குற்றம் திருடியது டாஸ்கில் இல்லாதது இதனால் சேரன் தேவையற்ற அவமானத்தை சந்தித்தார். தனக்கு தானே தண்டனை யை கேட்டு வாங்கிய மாதிரி தான்  இந்த ஜெயில் தண்டனை. மற்றும் அபிராமி இது தன்னை எலிமினேஷன் காப்பாற்ற கூடும் என்றும் நம்புகிறார். இதனால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவியும் எண்ணிக்கொள்கிறார்கள். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அவருடைய கருத்து மீது நம்பிக்கையில்லாத ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர்.