ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வனிதாவின் வஞ்சகத்தில் மதுமிதா பலியானது எப்படி ?

வனிதாவின் வஞ்சகத்தில்  மதுமிதா பலியானது எப்படி ?



வனிதாவின் காழ்ப்புணர்ச்சிக்கு காரணம்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் வனிதா சின்ன பிரச்சனை கூட பெரித்தாக்குவார், முதல் வாரமே தலைவர் ஆனார், அப்போது முதல் பிக்பாஸ் வீட்டில் கத்தி கொண்டிருக்கும் வனிதா, மற்ற போட்டியாளர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்வார். மற்றவர் போட்டியாளர்களும் ஒரு கட்டத்தில் விலகி செல்வர், இதனை சாதமாக பயன்படுத்தி வந்தார். கேப்டன் தேர்ந்து எடுக்கப்படும் போட்டியில் எற்பட்ட பிரச்சனையில் வனிதாவிடம் தர்ஷன் முதல் முறையாக கேள்வி கேட்டு பிக்பாஸ் வீட்டிலும் மற்றும் வெளியிலும் பிரபலமானார். வனிதா அப்போதும் கூட மைக்கை கழட்டி வைத்து பிக்பாஸ் தன்னிடம் பேச வேண்டும் என்று முறையிட்டார், ஆனால் பிகபாஸ் கண்டுக்கவே இல்லை. மாறாக சாக்க்ஷி தலைவராக அறிவித்தார். பிறகு வனிதாவும் தர்ஷனுடன் சமரசம் செய்தார். பின்னர் வரும் வாரத்தில் ஏலிமினேட் ஆனார். இவருடைய எலிமினேஷனுக்கு பிறகு நிகழ்ச்சியின் டி.ஆர்.பி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா தன்னை எதிர்த்தால் தான் மக்களிடம் தர்ஷன் பெரும் வரவேற்பு பெற்றார், என்பதை அறிந்து கொண்டார். லாஸ்லியா மற்றும் முகின்ராவ் மக்களிடம் வரவேற்பு இருப்பதை அறிந்து மேலும் காழ்ப்புணர்ச்சி ஆகி இருகிறார். 

வனிதாவின் மறுபிரவேசம்

இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் அதிரடியாக மறுபிரவேசம் செய்தார் வனிதா. ஹவுஸ்மேட்ஸுகளின் வெறுப்புக்கும், விமர்சனங்களுக்கு ஆளான வனிதா மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தது ஹவுஸ்மேட்ஸுக்கு பேரதிர்ச்சி தான். ஆனால் அதை யாரும் காட்டி கொள்ளவில்லை நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்ததை விட மிகவும் மோசமாக வனிதா மாறியிருந்தார். நேற்று அனைவரிடமும் மிகவும் நல்லவர் போல பேசினார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்பட்டார். மூவர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். லோஸ்லியாவை கஸ்தூரியிடம் கோர்த்து விட்டார். அபிராமிக்கும் முகினுக்கும் சண்டை மூட்டி விட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வந்தார். அதை தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தார்.

ஆணதிக்கம்

ஆண்களுக்கு எதிராக மதுவை நன்றாக தூண்டிவிட்டார் வனிதா. பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணதிக்கம் தழைத்தோங்குவதாக அவருடைய கருத்தை மதுமிதாவுக்குள் திணித்தார். பிறகு தர்ஷன் மேல் விமர்சனங்களை உருவாக்க வைத்தார். தர்ஷனை ஆதரித்த  சாண்டி, கவின், லோஸ்லியாவை குறிவைத்து மதுமிதா எப்போதும் சண்டையை உருவாக்க இதை வனிதா  நன்றாக தூண்டி கொண்டே இருந்தார். ஆனால் ஆண்களிடம் அவர் மட்டும் சகஜமாக பேசி வந்தார். 

உணராத மதுமிதா

இதனை உணராத மதுமிதா மனதிற்கு தோன்றியதை படபடவென பேசிய வண்ணம் இருந்தார். இந்த நிலையில் வனிதாவின் வரவிற்கு பின் மதுமிதாவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வனிதாவின் தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர் குழுவினர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த மதுமிதா, நான்கு பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மதுமிதா மீண்டும் கவினுடன் விவாதம் செய்தார். இதனால் சேரன், கஸ்தூரி தவிர மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் வெறுப்பையும் மதுமிதா சம்பாதித்தார்.

தற்கொலைக்கு முயன்ற மதுமிதா

இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து மதுமிதா தான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி இந்நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக