செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

தமிழ் ராக்கர்ஸ் தடை ; டில்லி ஐகோர்ட் உத்தரவு

தமிழ் ராக்கர்ஸ் தடை ;  டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகவும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். இந்த தளம்  புத்தம் புதிய படங்களை மறுநாளே பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இதனை லட்சக் கணக்கான இளைஞர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால்  சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என பலரும் 50 சதவிகித வருமானத்தை இழந்து வருகிறது. 

இந்த நிலையில் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் தங்களின் படங்களை அனுமதி இன்றி தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் வெளியிடுவதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. அதனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்ட விரோதமாக புதிய திரைபடங்களை வெளியிட்டு வரும் இணையதளங்களை அனைத்தையும் நீக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட்  தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணைய தளங்களை நீக்க உத்தரவிட்டதுடன், அத்துடன் காப்புரிமையை மீறும் வலைதளம் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக