விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு எஃகு அமைச்சகத்தின் ஆர்ஐஎன்எல்(RINL) நிறுவனம் பாராட்டு விழா


 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் எஃகு அமைச்சகத்தின் ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தூதருமான பி வி சிந்துவுக்கு விசாகப்பட்டினத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் திரு டி கே மொஹந்தி, நாட்டுக்கும் விசாகப்பட்டினம் எஃகு நிறுவனத்திற்கும் சிந்துவின் வெற்றி ஊக்கம் அளிப்பதாக கூறினார். விளையாட்டில் பி வி சிந்து செய்துள்ள சாதனைகளையும், ஆர்ஐஎன்எல் விசாகப்பட்டினம் எஃகு நிறுவனத்திற்கு அதன் தூதராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர் ஆற்றியுள்ள பங்கையும் திரு மொஹந்தி குறிப்பிட்டார்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தேசிய விளையாட்டு தினம், ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


 மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பாக செயல்படும் நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மேஜர் தியான் சந்த், விளையாட்டு உலகிற்கு அளித்த பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரைப் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சனி, 14 ஆகஸ்ட், 2021

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.


 குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இன்று (2021 ஆகஸ்ட் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார். குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

டோக்கியோ 2020-ல் வெண்கலம் வென்று தாயகம் திரும்பிய ஒலிம்பிக் வெற்றி வீராங்கனை பி வி சிந்துவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது


 டோக்கியோ 2020-ல் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணியாக உருவெடுத்த பின்னர் முதல் முறையாகத் தாயகம் திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்துவுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்  நடத்தினார்.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணையமைச்சர் திரு நிஷித் பிரமானிக், விளையாட்டுத் துறைச் செயலாளர் திரு ரவி மிட்டல் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 23 ஜூலை, 2021

இந்திய விமானப்படை வீரர்கள் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்

 விமானப்படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் (நான்கு போட்டியாளர்கள் மற்றும் ஒரு நடுவர்) 25 வருடங்களுக்கு பிறகு 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்திய விமானப்படை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், நாட்டின் சார்பாக ஒலிம்பிக்கில் அதன் வீரர்கள் பங்கேற்பது பெருமையாக உள்ளது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.


வியாழன், 24 ஜூன், 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரவளித்து, ஊக்கமளிக்கவேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும்.- விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு


 டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் அறிமுகப்படுத்தினார். விளையாட்டு அமைச்சக செயலாளர் திரு ரவி மிட்டல், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் திரு நரிந்தர் பாத்ரா, அதன் பொதுச் செயலாளர் திரு ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையகத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் மற்றும் இதர உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தீம் பாடலை பிரபல பின்னணி பாடகர் திரு மோகித் சவுகான் இசையமைத்துப் பாடியுள்ளார். அவரது மனைவி திருமதி பிராத்தனா கஹிலோட் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

திங்கள், 24 மே, 2021

டாப்ஸ் (TOPS) என்று அழைக்கப்படும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் எனும் திட்டத்தில் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா இன்று இணைத்துக் கொள்ளப்பட்டார்.


 டாப்ஸ் (TOPS) என்று அழைக்கப்படும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் எனும் திட்டத்தில் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா இன்று இணைத்துக் கொள்ளப்பட்டார்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்த அங்கிதா ரெய்னா, பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் 100 இடங்களில் ஒன்றை சமீபத்தில் பிடித்ததோடு, ஆஸ்திரேலியாவில் உள்ள பிலிப் தீவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் டபிள்யு டி ஏ 250 பட்டத்தையும் முதல் முறையாக வென்றார். பில்லி ஜீன் கிங் கோப்பைக்காக இந்தியாவின் சார்பில் அவர் சானியா மிர்சாவுடன் கைகோர்த்துள்ளார்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இந்தியா-இலங்கை முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு தொடக்கம்


இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.

வெள்ளி, 28 ஜூன், 2019

வெஸ்ட் இண்டீஸ் அணியை பாந்தாடிய இந்தியா



இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். விராட் கோஹ்லி இருவரும் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் 48 ரன்னுக்கு அவுட்டானார். விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அரைசதம் அடித்த கேப்டன் விராட் கோஹ்லி (72) ரன்னுக்கு அவுட்டானார். இதன் முலம் சர்வதேச போட்டிகளில் தனது 20,000 ரன்னை கடந்தார், மற்றும் சச்சின், லாரா வின் சாதனை முறியடித்தார்.

கடைசி நேரத்தில் தோனி, பாண்ட்யா இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். 6வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 70 ரன்கள் எடுத்தனர். பாண்ட்யா (46) ரன்களுக்கு அவுட்டானார். கடைசி ஓவரில் 2 சிக்சர் உட்பட 16 ரன்கள் விளாசிய தோனி, அரைசதம் எட்டினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. தோனி (56) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும் காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும் நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விரைவில் வெளியேறினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து புள்ளி பட்டியல் இரண்டவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

வியாழன், 27 ஜூன், 2019

இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற ஜெர்சி

இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற ஜெர்சி

உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற சீருடையை அணிந்து விளையாடி வருகின்றனர். இதில் இரு

புதன், 26 ஜூன், 2019

ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி

ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி 


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து இந்தியா. ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது. முலம் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்த இங்கிலாந்து அணி 2019 உலகக்கோப்பை தொடரில் 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் தொடருமா ? என்பது வரும் போட்டிகளில் தெரியும் இந்நிலையில் . நாளை (ஜுன் 27) நடக்கும் இந்திய அணி,  மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது.

செவ்வாய், 25 ஜூன், 2019

மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி சாம்பியன்

மகளிர் உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.



ஜப்பானின் ஹிரோசிமா நகரில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி! இந்தியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை ராணி ரம்பால் ஒரு கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 11-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் போட்டது. இதன்பின் ஆட்டம் மிகவும் சுவரஸ்யமாகச் சென்றது. இரு அணிகளும் கோல் போடும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 45-வது நிமிடத்தில் அசத்தான ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பின் 60-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.


முடிவில் இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக ராணி தேர்வு செய்யப்பட்டார். அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் குர்ஜித் கவுர் (11 கோல்) முதலிடம் பிடித்தார்.வாகை சூடிய இந்திய அணி 2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரில் பிப்ரவரி 24 ம் தேதி முதல் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பேட் கமின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் மூத்த வீரர் பீட்டர் சிடில், வேகமாக பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் மற்றும் அனைத்து ரவுண்டர் மார்ஷும் கைவிடப்பட்டனர்,
கேன் ரிச்சர்ட்சன் மற்றும் நாதன் கொல்டர் நைல் ஆகியோர் பேட்மேன் மற்றும் ஆஷ்டன் டர்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:
ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரே, பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், ஜேய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பேரெண்ட்ராப், நாதன் லயன், ஆடம் சாம்பா, டார்சி  ஷார்ட்

வெள்ளி, 18 ஜனவரி, 2019

வரலாற்று சாதனை படைத்த கோலி அண்ட் கோ


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை டிரா செய்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக கைப்பற்றி கோலி அண்ட் கோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

முதல் இரண்டு போட்டிகளில், தலா ஒரு முறை இரு அணிகளும் வெற்றி பெற்று சமநிலை பெற்றன. இதனால் தொடரை நிர்ணயம் செய்யும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் கேதர் ஜாதவ் மற்றும் தமிழக வீரர் விஜய் சந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது அதிகபட்சமாக ஹேண்ட்ஸ் கோம்ப் 58  இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதைத் தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய தவானும் 23 ரன்னில் அவுட்டானார். டோனி 87 (அவுட்இல்லை), கேதர் ஜாதவ் (61 அவுட்இல்ல), விராட் கோலி (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய சாஹல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த தோனி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

டோனி கூறுகையில் ‘‘நம்பர் 4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4-வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது.

இன்று விளையாடிய மெல்போர்ன் பிட்ச் ‘ஸ்லோ’வானது. ஆகவே, விரும்பிய போதெல்லாம் ஹிட் ஷாட் அடிப்பது கடினம். இதை கடைசி வரை கடைபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.