வெள்ளி, 18 ஜனவரி, 2019

வரலாற்று சாதனை படைத்த கோலி அண்ட் கோ


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை டிரா செய்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக கைப்பற்றி கோலி அண்ட் கோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

முதல் இரண்டு போட்டிகளில், தலா ஒரு முறை இரு அணிகளும் வெற்றி பெற்று சமநிலை பெற்றன. இதனால் தொடரை நிர்ணயம் செய்யும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் கேதர் ஜாதவ் மற்றும் தமிழக வீரர் விஜய் சந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது அதிகபட்சமாக ஹேண்ட்ஸ் கோம்ப் 58  இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதைத் தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய தவானும் 23 ரன்னில் அவுட்டானார். டோனி 87 (அவுட்இல்லை), கேதர் ஜாதவ் (61 அவுட்இல்ல), விராட் கோலி (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய சாஹல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த தோனி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

டோனி கூறுகையில் ‘‘நம்பர் 4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4-வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது.

இன்று விளையாடிய மெல்போர்ன் பிட்ச் ‘ஸ்லோ’வானது. ஆகவே, விரும்பிய போதெல்லாம் ஹிட் ஷாட் அடிப்பது கடினம். இதை கடைசி வரை கடைபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக