சனி, 26 ஜனவரி, 2019

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இளவரசன் நீக்கம்


ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன் அவரது விருப்பத்துக்கு இணங்க அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த வருடத் தொடக்கத்தில் வந்தவர் டாக்டர் இளவரசன். இவர் மன்றத்தின் அமைப்புச் செயலாளராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

அவர் அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ஆனதும்தான் பல மாவட்ட நிர்வாகிகள் அதிர்ந்தனர். ஏனெனில் ரஜினி மன்றத்துக்காக இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் உழைத்தவர்களை எல்லாம் அனாயாசமாக தூக்கி வெளியே போட்டார் இளவரசன். புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தேனி, திருவாரூர் என்று பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் இளவரசனால் நீக்கப்பட்டனர்.

 இப்படிப்பட்ட மிக மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை பல மாவட்டங்களிலும் இளவரசன் நீக்கியதை அடுத்துதான் இளவரசன் மீது பல பேர் ரஜினிக்கு புகார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்” என்ற நிர்வாகிகள் தொடர்ந்தனர்.
இதையடுத்து டிசம்பர் மாத கடைசியிலேயே இளவரசன் நீக்கம் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதிகாரபூர்வ நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் இன்று இளவரசன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

ரஜினி இளவரசனை பெரிதும் நம்பினார். அதனால்தான் அவரை அழைத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே விடுவிக்கப்படுகிறார் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக