புதன், 30 ஜனவரி, 2019

IAS மாணவிக்கு பரிந்துரை செய்த மு.க.ஸ்டாலின்



பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை -க்கூட்டத்திலும், தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளின் அராஜக நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.


குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின், 'ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்' அளிக்கும் திட்டம் வறுமை ஒழிப்பின் மைல்கல் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதேபோல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதன்முதலில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த தலைவர் நம் தலைவர் கலைஞர்; பெற்றுத் தந்த கட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாடு மறவாது என்று குறிப்பிட்டுப் பேசினார்

தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளில் தி.மு.கழகம் இதுபோன்ற ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதில் மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களை சம்பந்தபட்ட அதிகாரிகளிடத்தில் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கழக நிர்வாகிகளிடத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

அதன் ஒருபகுதியாக, தருமபுரி திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா லட்சுமி திமுக ஊராட்சிசபை -க்கூட்டத்தில், தன்னுடைய குடும்பச் சூழலை எடுத்துரைத்து தான் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

அதனையேற்று, சங்கர் IAS அகாடமியில் IAS தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலை இன்று மாணவி அனிதா லட்சுமியிடம் வழங்கினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக