ஆ.இராசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆ.இராசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 நவம்பர், 2020

கல்வித்துறையை காவித்துறையாக்கும் RSS & பாஜகவின் அடாவடிப்போக்கு டெல்லியில் ஆரம்பித்து நெல்லை வரை வால் நீட்டியிருக்கிறது.- திரு. ஆ.ராசா MP

 “கல்வித்துறையை காவித்துறையாக்கும் RSS & பாஜகவின் அடாவடிப்போக்கு டெல்லியில் ஆரம்பித்து நெல்லை வரை வால் நீட்டியிருக்கிறது;

பல்கலைகளை மொத்தமாக பாஜக அரசிடம் அடமானம் வைத்துவிட்டதா அடிமை அதிமுக அரசு?” - திரு. ஆ.ராசா MP அறிக்கை.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. கே.பிச்சுமணி அவர்கள் தலைமையில் நடந்த ஆலோசனையின்படி, 2017-ஆம் ஆண்டு முதல் முதுகலைப் படிப்புக்கான சமூகவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் ‘Walking With The Comrades’ என்ற ஆங்கிலப் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் எது இடம்பெறவேண்டும் என்பது அதன் துணைவேந்தர் - பேராசிரியர்கள் - கல்விப்புலம் சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரின் முடிவுக்குட்பட்டதே!

திங்கள், 6 ஜூலை, 2020

பொதுவாழ்வில் ஈனப்பிழைப்பு நடத்தும் 'உலுத்தர் உதயகுமார்' தன் தற்குறித்தனத்தை தானே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.- ஆ.ராசா MP

"பொதுவாழ்வில் ஈனப்பிழைப்பு நடத்தும் 'உலுத்தர் உதயகுமார்' தன் தற்குறித்தனத்தை தானே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்;
சாத்தான்குளம் இரட்டை கொலையில் பச்சைப்பொய் சொன்ன முதல்வர் பதவி விலகவேண்டும்" -  ஆ.ராசா MP 

சாத்தான்குளத்தில் தமிழக காவல்துறை நிகழ்த்திய இரட்டை கொலையை மூச்சுத்திணறலால் ஒருவரும், உடல்நலக்குறைவால் ஒருவரும் இறந்தார்கள் என காவல்துறையை கையில் வைத்துள்ள பொறுப்புள்ள முதலமைச்சரே அறிவித்தது கொலையை மறைக்க சொல்லப்பட்ட பச்சைப் பொய் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்டு, அதனால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று நான் கொடுத்த வலைதள பேட்டிக்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு தன் தற்குறித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.

சனி, 23 மே, 2020

சமூக அமைதியை கெடுக்கும் கோணல்புத்தியை கைவிட்டுவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்துங்கள் - ஆ.இராசா

“சமூக அமைதியை கெடுக்கும் கோணல்புத்தியை கைவிட்டுவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்துங்கள்!”
- முதலமைச்சர் எடிப்பாடி பழனிச்சாமிக்கு,
 திமுக கொள்கைபரப்பு செயலாளர் ஆ.இராசா, எம்.பி. கண்டனம்.

ஊழலும் மதவாதமும் கைகோர்த்து நடத்தும், மலிவும் இழிவும் கலந்த தமிழக அரசியலில் சமீபகாலமாக ஜனநாயக மாண்புகளை புதைத்து நகாகரீகமற்ற நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன.  குறிப்பாக, பிரதமர் மோடி அரசின் ஏவலாளாக மாறிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போவதையும், கரோனா தொற்றில் அரசு ஆற்றவேண்டிய கடமைகளை எதிர்க்கட்சியான தி.மு.கழகம் ஆற்றுவதை மக்கள் போற்றுவதையும், மறைக்கவும் திசைதிருப்பவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர் - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களை இன்று அதிகாலை 5 மணிக்கு வன்கொடுமை சட்டத்தில் தமிழக அரசு கைது செய்துள்ளது.

அரங்க கூட்டமொன்றில் பேசியதற்காக ஆர்.எஸ்.பாரதி மீதும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கருத்து கூறியதற்காக தயாநிதி மாறன் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் தலித்துகளுக்கு எதிரானது என்று நிறுவிட மத்திய மாநில அரசுகள் முனைந்துள்ளன.  இருவரின் வார்த்தை பிரயோகங்களும் உள்நோக்கமற்றவை என்றும், அவை தவறான பொருளில் அர்த்தம் கொள்ளப்பட வேண்டியவையல்ல என்றும், உறுதிபட மறுப்பு தெரிவித்ததோடு, தவறியும் எவருடைய மனமும் புண்பட்டுவிடக்கூடாதெனும் உயர்ந்த மாண்போடும் பொறுப்புணர்ச்சியோடும் தங்கள் வருத்தத்தை பதிவுசெய்த பின்பும், வக்கிர அரசியலுக்கு தங்களை வரித்துக் கொண்டவர்கள் அரசு இயந்திரத்தின் மூலம் குற்றவியல் வழக்கென்று குறுக்கு சால் ஓட்டி தி.மு.கழகத்தை வீழ்த்திவிட முடியாதா என்று கனவு காண்கிறார்கள்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

“மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது'' -ஆ. இராசா ஆவேசம்


“மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது'' 
- நாடாளுமன்றதில் ஆ. இராசா ஆவேசம்

நாடாளுமன்ற மக்களவையில் திமுக கொறடா ஆ. இராசா ஆவேசத்துடன் ஆற்றிய உரை வருமாறு :

வியாழன், 18 ஜூலை, 2019

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தில் திமுக-வின் நிலைப்பாடு - ஆ.இராசா விளக்கம்

"தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தில் திமுக-வின் நிலைப்பாடு!"

-  ஆ.இராசா எம்.பி., விளக்கம்.
( நாடாளுமன்ற திமுக கொறடா )


15.7.2019 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தை தி.மு.க ஆதரித்தது குறித்து சிலர் சமூக வலைதளங்களிலும் வெளியிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசியலுக்காக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

தி.மு.கழகம் சிறுபான்மை மக்களின் நலனிலும் உரிமைகளை பாதுகாப்பதிலும்