வியாழன், 15 ஜனவரி, 2026

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன - திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

 பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன - திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மருத்துவப் படிப்புகளின் இடங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், 2029-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 75,000 இடங்களை சேர்க்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் நாடு தழுவிய அளவில் 300-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதன் மூலம் மருத்துவக் கல்வி, முக்கிய பெருநகரங்களுக்கு அப்பால் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. "ஆரோக்கியமான இந்தியாதான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளம்". சுகாதார செலவினங்களை ஒரு செலவாகக் கருதாமல், நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகக் கருத வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக