அன்புமணி ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புமணி ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 டிசம்பர், 2025

தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

- DR. அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்தில் உள்ள 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக பணியும், ஊதியமும் வழங்கப்படாமல் வறுமையிலும், மன உளைச்சலிலும் வாடி வந்த தூய்மைப் பணியாளர் டி. இரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 14 நவம்பர், 2024

ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ்

 ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா?

 - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள  497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

செவ்வாய், 27 டிசம்பர், 2022

தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.- DR. அன்புமணி ராமதாஸ்


 மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! 

- DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற  நோக்குடன் முதலமைச்சர் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது. இதை சட்டப்பூர்வமாக்க தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.

நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! - DR .அன்புமணி ராமதாஸ்



 நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! 

- DR .அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய  ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

திங்கள், 12 செப்டம்பர், 2022

சென்னை மழைநீர் கால்வாய் பணிகள் மந்தம்: இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கண்காணிக்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 சென்னை மழைநீர் கால்வாய் பணிகள் மந்தம்:

வெள்ள ஆபத்தை தடுக்க விரைவுபடுத்துங்கள்! - DR.அன்புமணி ராமதாஸ்

சென்னையில் வெள்ள ஆபத்தை தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகள் திட்டமிடப்பட்டதை விட மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக இந்தப் பணிகள் பல நூறு கோடி  செலவில் தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடக்கூடிய ஆபத்து உள்ளது.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

டெல்டாவை சீரழிக்கும் தொழில்திட்டங்களை, குறிப்பாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 "காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட செய்ய வேண்டும்!" - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட எந்த ஹைட்ரோகார்பன் திட்டமும், உழவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து கைவிடப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அதில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது; ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வரக்கூடாது. - DR.அன்புமணி ராமதாஸ்

 ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு:

தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன்  ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு துணிச்சலாக செயல்படத் தயங்குவது ஏமாற்றமளிக்கிறது.

வியாழன், 21 ஜூலை, 2022

சென்னை புழுதிக்காடாக மாறுவதை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.- DR. அன்புமணி ராமதாஸ்


 மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள்: மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் புழுதியை 

கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது.

புதன், 6 ஜூலை, 2022

மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு: உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்


மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு: உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை  தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம்  ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

செவ்வாய், 5 ஜூலை, 2022

தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது:

நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை! - DR.அன்புமணி ராமதாஸ்

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது வாரத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஞாயிறு, 19 ஜூன், 2022

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்கும்படி வலியுறுத்த வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 மேகதாது சிக்கல்: காவிரி ஆணையக்

கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது குறித்து முறையிடுவதற்காக மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்றக் கட்சித் தலைவர்கள்  தில்லி சென்று சந்திக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதுமட்டுமே போதுமானதல்ல என்பதால், சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்த வேண்டும்.

வெள்ளி, 17 ஜூன், 2022

மேகதாது அணைக்கு அனுமதி தரப்பட்டால் தமிழக அரசின் மாற்றுத் திட்டம் என்ன? - DR.அன்புமணி ராமதாஸ்

 மேகதாது அணைக்கு அனுமதி தரப்பட்டால்

தமிழக அரசின் மாற்றுத் திட்டம் என்ன? - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், நாளை நடைபெற  உள்ள கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதிக்கும் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதியாக இருப்பது கவலையளிக்கிறது.  மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான சூழ்ச்சியாகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது.

புதன், 15 ஜூன், 2022

அதிகரிக்கும் காலியிடங்கள்: உடனடியாக 50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

 அதிகரிக்கும் காலியிடங்கள்: உடனடியாக

50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

வியாழன், 9 ஜூன், 2022

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் என்ற பெயர்ப்பலகைகளை வேண்டுமானால் மாட்டலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. - DR. அன்புமணி ராமதாஸ்

 

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளா?

கட்டமைப்பு இல்லை, யாருக்கும் பயன் தராது! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அவை அரசு பள்ளிகளில் இருந்து அங்கன்வாடிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்திருக்கிறார். அமைச்சரின் இந்த விளக்கம் உண்மை நிலையை மறைக்கும் செயல்; இது யாரையும் திருப்திப்படுத்தாது.

செவ்வாய், 7 ஜூன், 2022

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால் செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.- DR . அன்புமணி ராமதாஸ்

 ஆன்லைன் சூதாட்டத்தடை: அவசர சட்டம்

பிறப்பிக்கக் கோரி ஜூன் 10 போராட்டம்! - DR . அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில்,  அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால்  செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

சனி, 21 மே, 2022

என்.எல்.சி நிலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமே தவிர, நிலங்களை பறிக்க முயலும் என்.எல்.சி பக்கம் நிற்கக்கூடாது.- DR. அன்புமணி ராமதாஸ்

 வேலை வழங்காமல் என்.எல்.சிக்கு நிலம்

கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது! - DR. அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் நோக்குடன் கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த கரிவெட்டி என்ற இடத்தில் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களின் நிலங்களை பறிக்க என்.எல்.சி முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

திங்கள், 9 மே, 2022

பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நூல்களை வெளிக்கொண்டு வருவது ஆகியவற்றை சாதிக்க முடியும்.- DR.அன்புமணி ராமதாஸ்


பருத்தி நூல் விலை உயர்வு வேலைவாய்ப்பு, வளர்ச்சியை பாதிக்கும்: பருத்தி இழை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்! 

- DR.அன்புமணி ராமதாஸ்

கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட துணி சார்ந்த அனைத்து தொழில்களையும்  பாதிக்கும் பருத்தி நூல் விலை உயர்வு தொடர்கதையாகி வருவது கவலையளிக்கிறது. பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வரும் போதிலும், இப்போக்கு தொடர்வது ஐயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சனி, 7 மே, 2022

தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தலையாயப் பணியாகும். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ம.க. அறிவிக்க உள்ளது.- DR. அன்புமணி ராமதாஸ்


முழு மதுவிலக்கே பா.ம.க.வின் இலக்கு...

தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை! - DR.அன்புமணி ராமதாஸ்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். ஆயிஷா போன்றவர்களின் உணர்வு பாராட்டத்தக்கது; ஆனால், போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல.

செவ்வாய், 3 மே, 2022

ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின்

கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் உயர்கல்வி கிடைப்பதை தடுப்பதற்கான இந்த முயற்சியை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது.

திங்கள், 18 ஏப்ரல், 2022

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா? - DR. அன்புமணி ராமதாஸ்



 டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை

ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா? - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும்  குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியை புறக்கணித்து விட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது.