ஆர்.எஸ்.பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.எஸ்.பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஏப்ரல், 2022

மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்! - ஆர்.எஸ்.பாரதி எம்.பி


 "மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்!"

- திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்கள் எச்சரிக்கை.

பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த  80 ஆண்டுகாலத்திற்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

திங்கள், 19 ஜூலை, 2021

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.- திமுக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி MP



“பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்;

மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும்"

- திமுக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி MP அவர்கள் அறிக்கை.

“பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் - கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் - “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள்.

சனி, 18 ஜூலை, 2020

மக்களுக்காக - மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டை நடத்துவது எப்படி நீதிமன்ற அவதிப்பு ஆகும். - ஆர்.எஸ்.பாரதி MP


"பொதுமக்களின் நலனுக்காக திமுக நடத்தும் போராட்டம் எவ்விதத்திலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது" -  திரு. ஆர்.எஸ்.பாரதி MP அவர்கள் அறிக்கை.

‘மின்கட்டணத்தை குறைக்க கோரி கருப்புக் கொடி போராட்டம் என்றால் நீதிமன்ற அவமதிப்பாக இருக்கலாம்’ என அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தையும்,  நீதிமன்றத்தையும் எந்நேரத்திலும் - எக்காலத்திலும் மதித்து நடக்கும் இயக்கம் தி.மு.க. என்பதையும்;  தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும் அறியாத அமைச்சர் பாண்டியராஜன் ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.

திங்கள், 13 ஜூலை, 2020

வன்முறை வரலாறு கொண்ட அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு - திமுகவை விமர்சிக்கும் அடிப்படைத் தகுதியே இல்லை - திரு. ஆர்.எஸ்.பாரதி


"மூன்று இளம் மாணவிகள் எரித்துக்கொலை - பெண் IAS அதிகாரி மீது ஆசிட் வீச்சு என வன்முறை வரலாறு கொண்ட அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு - திமுகவை விமர்சிக்கும் அடிப்படைத் தகுதியே இல்லை” -  திரு. ஆர்.எஸ்.பாரதி MP 

'ஊழல், ரவுடித்தனம், கொடநாடு, பையனூர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை - கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களைக் காப்பாற்றுவது' - போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ள அமைச்சர் திரு. ஜெயக்குமார் தி.மு.க.,வைப் பார்த்து 'வன்முறைக் கட்சி' என்று கூறுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

திமுக மீது வீண்பழி சுமத்த வெட்கமாக இல்லையா?” - திரு. ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,


“ மு.க.ஸ்டாலின் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் துப்பின்றி – திமுக மீது வீண்பழி சுமத்த வெட்கமாக இல்லையா?” 
- திரு. ஆர்.எஸ்.பாரதி எம்.பி., 

“பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக எங்கள் கழகத் தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்”என்று அமைச்சர் திரு ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

சனி, 1 பிப்ரவரி, 2020

அதிமுக ஆட்சியின் அனைத்து மெகா ஊழல்கள் குழிதோண்டி புதைக்கப்படும் அபாயம் உள்ளது - ஆர்.எஸ்.பாரதி


'முழு விசாரணைகள் உடனே நடக்காவிட்டால், அதிமுக ஆட்சியின் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் மெகா ஊழல்கள் குழிதோண்டி புதைக்கப்படும் அபாயம் உள்ளது" - ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, .

தமிழகத்தின் ‘வியாபம்’ எனப் பெயர் பெற்றிருக்கும் டி.என்.பி.எஸ்.சி.யின் முறைகேடுகள் இன்று-நேற்று என்றில்லாமல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திதிலிருந்தே தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆனால் இது திடீரென நடந்த முறைகேடு அல்ல என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடி என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தே, அதாவது கடந்த 9 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி

"எங்கள் தலைவர் மீது முதலமைச்சர் வீண்பழி சுமத்துவது 'கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்' கூச்சலாக மட்டுமே இருக்க முடியும்"
- ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
(அமைப்புச் செயலாளர், திமுக.)

“தி.மு.க. தேர்தலைக் கண்டு பயப்படுகிறது” என்றும், “மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் எங்கள் கழகத் தலைவர்” என்றும் நா கூசாமல் பேட்டி ஒன்றே அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.