இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மார்ச், 2020

21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே! - சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍


21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே! - சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே, 

கோவிட்19 என்கிற மிக பயங்கரமான தொற்றுநோய் பரவியுள்ள சூழ்நிலையில்,  தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். கொ‌ரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப்படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

ஏழையிலும் ஏழையான பலவீனத்திலும் பலவீனமான மனிதர்களின் முகத்தை ஒரு கணம் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல்,  அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல்,  அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவிதமான அவசர உதவியையும் அறிவிக்காமல் உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.

சனி, 8 பிப்ரவரி, 2020

பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே ரஜினிகாந்த் தமிழக எதிர்க்கட்சிகளை குறைகூறி பேசி வருகிறார்.


இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் 
இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

நடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகர். தற்போதைய ரசிகர்களிடம் அவரது நடிப்பு எடுபடவில்லை. எனவே தனது புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அரசியல் கருத்துகளை கூறி படத்தை வெற்றி பெறவைக்க முயற்சிக்கிறார். அவர் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை.

புதன், 6 நவம்பர், 2019

தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

“தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு
தென் மாநிலங்களின் மாநாடு”

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்டது. இதை அரசியல் சட்டமும் அங்கீகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே அரசியல் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுத்திருக்கிறது. இந்த வரையறுப்பு இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கிறது. எனவேதான், வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமைமிகு அடையாளமாக போற்றப்படுகிறது.