சீத்தாராம் யெச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீத்தாராம் யெச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மார்ச், 2020

21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே! - சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍


21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே! - சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே, 

கோவிட்19 என்கிற மிக பயங்கரமான தொற்றுநோய் பரவியுள்ள சூழ்நிலையில்,  தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். கொ‌ரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப்படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

ஏழையிலும் ஏழையான பலவீனத்திலும் பலவீனமான மனிதர்களின் முகத்தை ஒரு கணம் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல்,  அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல்,  அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவிதமான அவசர உதவியையும் அறிவிக்காமல் உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.