சனி, 8 பிப்ரவரி, 2020

பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே ரஜினிகாந்த் தமிழக எதிர்க்கட்சிகளை குறைகூறி பேசி வருகிறார்.


இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் 
இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

நடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகர். தற்போதைய ரசிகர்களிடம் அவரது நடிப்பு எடுபடவில்லை. எனவே தனது புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அரசியல் கருத்துகளை கூறி படத்தை வெற்றி பெறவைக்க முயற்சிக்கிறார். அவர் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை.


இன்றைய ரசிகர்கள் அவரது நடிப்பை ஏற்கவில்லை என்பதால் தான் தர்பார் போன்ற படங்கள் தோல்வியடைந்து விட்டன. மத்திய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே ரஜினிகாந்த் தமிழக எதிர்க்கட்சிகளை குறைகூறி பேசி வருகிறார்.

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி கடந்த ஆண்டை விட கணிசமாகக் குறைக்கப்பட் டுள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பும் வகையிலே மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர் மற்றும் இலங்கைத் தமிழர்களுக் கான குடியுரிமை மட்டுமே மறுக்கப்படுகிறது.

அதற்காகவே திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறை கேடு தொடர்பாக சிபிஅய் விசா ரணை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு புகாரில் கீழ்நிலையில் உள்ளவர்களே கைதாகியுள்ளனர். அரசியல் செல்வாக்கும், அதிகார மும் மிகுந்தவர்களின் துணை யோடுதான் முறைகேடு நடந்திருக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக