வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல் - அரசியல் தலைவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு: கண்டிக்கத்தக்கது - நெல்லை முபாரக்


காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல் - அரசியல் தலைவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு  கண்டிக்கத்தக்கது - நெல்லை முபாரக்


காஷ்மீரில் மாநில சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 நீக்கத்துக்கு பின்னர், மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னமும் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை என்பது அறவே கிடையாது. பொது போக்குவரத்தும் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக காஷ்மீர் அடைக்கப்பட்ட கொடுஞ்சிறையாக இருந்து வருகிறது. மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளது காஷ்மீர் மாநிலம்.

இந்நிலையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, பாராளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 6 மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சிறைக் காவலை 2 ஆண்டுகாலம் நீட்டித்துள்ளது பாஜக அரசு.

மாநில முதல்வர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து, மக்கள் பணியாற்றிய தலைவர்களை எவ்வித நீதிமன்ற விசாரணையுமின்றி சிறைவைக்கும் இத்தகைய மனித உரிமைக்கு எதிரான, கொடூர எண்ணம் கொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக