செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

வங்கிகளை இணைத்தது மூலம் அரசு ஏதேனும் பயன் அடைந்து இருக்கிறதா?


வங்கிகளை இணைத்தது மூலம் அரசு ஏதேனும் பயனடைந்துள்ளதா?  நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி


அ). வங்கிகளை இணைத்தது மூலம் அரசு ஏதேனும் பயன் அடைந்து இருக்கிறதா? ஆம் என்றால் அதன் விவரம்.


ஆ). பொதுத்துறை வங்கிகளில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள சம்பள பாக்கியைதீர்ப்பதற்கு அரசு காலக்கெடு ஏதேனும் நிர்னயித்து இருக்கிறதா? ஆம் எனில் அதன் விவரம்.

இ). பொதுத்துறை வங்கி ஓய்வூதியதாரர்களின் பிரச்சனைகளை களைய அரசுஎடுத்துள்ள நடவடிக்கைகள என்ன?


திரு. அனுராக் சிங் தாகூர் (நிதித் துறை இணை அமைச்சர்)

அ).பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கபட்டதன்மூலம் இந்த வங்கிகளின் தனித்த திரன்கள் ஒன்றாக அணிதிரட்டப்பட்டுள்ளது, செலவினக்குறைவுடன் உற்பத்தியை பெருக்கி வங்கியை வலிமையாக்கியுள்ளது, வாடிக்கையளர் தொடர்பை மேம்படுத்தியுள்ளது, வங்கியியல் பொருள் மற்றும் சேவைவகைகளை விரிவாக்கியுள்ளது, வங்கியின் கடன் திறனை அதிகரித்துள்ளது. இணைப்பினால் இயங்கு இலாபத்தில் பெரும் பலன் கிடைத்துள்ளது, பிஓபி (BOB) நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுக்கான இயங்கு இலாபம் ரூ.14,571 கோடி என தெரிவித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதேகாலக்கட்டத்திற்கான இயங்கு இலாபத்தை விட 12.8% அதிகமாகும்.

ஆ மற்றும் இ). தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஓய்வூதியம், வங்கி நிர்வாகம் மற்றும்வங்கி ஊழியர் சங்கங்கள் என இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஒருமித்த கருத்தின்அடிப்படையில் அமைகிறது. அதன்படி ஊழியர்களுக்கான ஒய்வூதிய சட்டதிட்டங்களை வங்கி வாரியம் கட்டமைத்தது, இதனை “வங்கி நிறுவனங்கள்(நிறுவனங்கள் கையகப்படுத்தல் மற்றும் உரிமை மாற்றம்) சட்டம் 1970 மற்றும் 1980 பிரிவுகளின்படி அரசு அறிவித்துள்ளது. ஆகவே வங்கி ஊழியர் சங்கங்கள் மற்றும்வங்கிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது ஓய்வூதியம்வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள், ஊதிய திருத்தத்திற்கானநடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வங்கிநிர்வாகங்களின் உரிய உத்தரவு பெற்று அவர்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்திடும்“இந்திய வங்கிகளுக்கான சங்கம்” ஊதிய திருத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக