வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

அதிமுக அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு இந்த பட்ஜெட் ஒரு எடுத்துக்‍காட்டு - டிடிவி.தினகரன்


அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திறமையற்ற நிர்வாகத்திற்கு இந்த பட்ஜெட் ஒரு எடுத்துக்‍காட்டு என குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலை மீதும் 57 ஆயிரம் ரூபாய் கடனை தமிழக அரசு சுமத்தி உள்ளது.


தற்போது சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை உள்ளது. 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும். தமிழக அரசு நிதி பற்றாக்குறை கடந்த 2018-2019ல் 47,134 கோடி ரூபாய் இருந்தது. தற்போது 2019 -2020 ஆம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 55,058 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அடையாறு, கூவம் ஆறுகளை மேம்படுத்த கடந்த பட்ஜெட்டில் ஆயிரத்து 160 கோடி ரூபாய் ஒதுக்‍கப்பட்டதாகவும், ஆனால் என்னென்ன பணிகள் நடைபெற்றன? என்பது தெரியாத நிலையில், தற்போது மேலும் 5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்‍கப்பட்டிருப்பதை சுட்டிக்‍காட்டிய கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், செயல்திட்டங்கள் எதுவும் இல்லாத, காற்றில் வரைந்த ஓவியம் போல தமிழக பட்ஜெட் உள்ளதாக விமர்சித்தார்.

நீட் தேர்வு ரத்து குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், மதத்தின் அடிப்படையில் அமையக் கூடாது எனவும், எல்லா மதங்களையும் மத்திய அரசு சமமாக பாவிக்‍க வேண்டும் எனவும் திரு. டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை ஆதரிப்போம் என்றும். குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக