புதன், 19 பிப்ரவரி, 2020

செல்வி. ஜெயாலலிதா அவர்கள் நினைவை சிறப்பிக்கும் வகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் நல்வாழ்விற்கு 5 புதிய திட்டங்கள்


பெண் குழந்தைகளுக்காக மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி. ஜெயாலலிதா அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில்,

"மாண்புமிகு செல்வி. ஜெயாலலிதா அவர்களது பிறந்தநாளை "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் - பிப்ரவரி 24" ஆக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


செல்வி. ஜெயாலலிதா அவர்கள் நினைவை சிறப்பிக்கும் வகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் நல்வாழ்விற்கு 5 புதிய திட்டங்கள்

1)  அரசு இல்லங்களில் வாழும் பெற்றோர், பாதுகாவலர் இல்லாத குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்கையில் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அவர்கள் பெயரில் வங்கியில் செலுத்தப்படும்.

2) ஆதரவற்ற பெண் குழந்தைகள் 18 வயது முடிந்து அரசு குழந்தைகள் இல்லத்தை விட்டு வெளியே சென்ற பின் அவர்கள் பாதுகாப்பு, பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், அரசு அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய "சிறப்பு உதவி தொகுப்பை" அவர்களின் 50வது வயது வரை வழங்கும்.

இந்த சிறப்பு உதவி தொகுப்பில்,


  • மேற்கல்வி பயில்தல்,
  • திறன் மேம்பாட்டு பயிற்சி,
  • வேலைவாய்ப்பு,
  • சுயதொழில் செய்தல். ஆகியவை அடங்கும்.


3) ஆதரவற்ற குழந்தைகள் குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கும், தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் தொகை ரூ.2000 லிருந்து 4000ஆக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

4) குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறந்த முதல் 3 மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

5) ஆதரவற்ற குழந்தைகள் சமூக நலன், சத்துணவு திட்ட துறையில் TNPSC-ன் எல்லைக்கு உட்படாத C,D பிரிவில் தகுதிக்கேற்ப பணியமர்த்தப்படுவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக