செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தமிழக விவசாயிகளுக்கான அரசின் நற்பணிகள் தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.


தமிழக அரசு – பெட்ரோலிய ரசாயண முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது

தமிழக அரசு நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலியம், ரசாயணம் மற்றும் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.


தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற அறிவிப்பு வெளியிட்டு, சட்டமன்றத்தில் சட்டமாக்கி, அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்புக்காக அதிகார அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் தொடர்பா வெளியிடப்பட்ட அரசாணை நீடித்தால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகள் பயன் பெறாது என்று அப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் பெட்ரோலிய – ரசாயண மாண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தால் தான் அப்பகுதிகளில் வேளாண் தொழிலுக்கு பாதிப்புகள் ஏற்படாது. எனவே கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய மண்டலமாக்க ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொது மக்களும் பெரும் பயன் அடைவார்கள்.

குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கும், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரும் பலன் தரும்.

எனவே கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயண முதலீட்டு மண்டலம் அமைய தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்திருப்பதை த.மா.கா சார்பில் வேரவேற்று, தமிழக விவசாயிகளுக்கான அரசின் நற்பணிகள் தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக