செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பிப்.19ல் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்! லட்சக்கணக்கில் அணி திரள்வோம்! - SDPI கட்சி அழைப்பு


சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.19ல் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்! லட்சக்கணக்கில் அணி திரள்வோம்! - SDPI கட்சி
 M.நிஜாம் முகைதீன்  அழைப்பு

அரசமைப்பு சட்ட விரோத சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகவும், அந்த கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 2 மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பெரும்பான்மை மமதையில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்த சட்டங்களை திரும்பப்பெற மாட்டோம், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என ஆணவப்போக்கில் தெரிவித்து, மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றது. எனினும் நாடு முழுவதும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றன.

தமிழகத்திலும் அரசமைப்பு சட்ட விரோத சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தமிழக அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழக அரசு மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்து வருகின்றது. மக்களின் உணர்வுகளை கிஞ்சிற்றும் மதிக்கவில்லை. ஆகவே, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக, நாளை (பிப்.19) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டங்களை நடத்தவும், சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது.

உரிமையை காக்க, அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்க லட்சக்கணக்கானோர் அணி திரளும் இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக