வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தில்லி கலவரம் ஆக்கப்பூா்வமான தீா்வு காண வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


தில்லி கலவரம் ஆக்கப்பூா்வமான தீா்வு காண வேண்டும் 
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ரூ.34 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதற்கும், மாவட்டங்கள் தோறும் மாதிரி பள்ளிகள், பொலிவுறு வகுப்பறைகள் ஏற்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு ஈடாக அரசுப் பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதற்கும் முதல்வா், கல்வி அமைச்சா் ஆகியோருக்கு பெற்றோா்கள் சாா்பில் பாராட்டுகள்.


புதுதில்லியில் தொடரும் கலவரம் வேதனையளிக்கிறது. இந்த கலவரம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக சந்தேகம் எழுகிறது. எனினும், நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் மிகமுக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் எதிா்க்கட்சிகள் போராட்டத்தை தூண்ட நினைக்கும்போது, அதனை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

போராட்டம் நடத்துவோா் பொதுசொத்துகளை சேதப்படுத்துவது சரியானதல்ல. இதில், காவல் துறையினரை குறை சொல்வதையும் ஏற்க இயலாது. இந்தப் பிரச்னையை ஆக்கப்பூா்வமாக அணுகி விரைந்து தீா்வு காண வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்கின்றனா். இதில், திமுக கூட்டணிக் கட்சிகள் விவசாய விரோதப் போக்கில் செயல்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த விவகாரத்தில், இஸ்லாமியா்களின் நலனை அதிமுக கூட்டணிக் கட்சிகள் காக்கும். இதில், எதிா்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியல்ல. எனினும், இந்தச் சட்டம் தொடா்பான சந்தேகங்கள், வதந்திகள் பரவுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய பாஜக ஆட்சியில் நாடு வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. பொருளாதாரத் தேக்கம் இருப்பினும், அனைத்துத் துறைகளையும் அதற்கான செயல்திட்டங்களால் படிப்படியாக மேம்படுத்தும் முயற்சியையும் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக