தமிழக அரசு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும் மற்றும் பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்.
ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதே சமயம் பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டம், கூட்ட நெரிசல் காரணத்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்காக வகுப்பறையில் தனி மனித இடைவெளியில் இறைவணக்கம் நடைபெற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.









