செவ்வாய், 1 ஜூன், 2021

பூஞ்சை நோய்களை அறிய கண்காணிப்பு குழுவை அமைத்து , பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


பூஞ்சை நோய்களை அறிய கண்காணிப்பு குழுவை அமைத்து , பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் கொரோனா தொற்று மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இரண்டாம் அலையில் நோய்தொற்று அதிக அளவில் இருப்பதைப் போல , இறப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கிறது . 

இந்தியாவும் பல்வேறு அயல்நாடுகளும் , தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது . 

இருந்த போதிலும் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை . கொரோனா இரண்டாம் அலையில் நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவனையிலும் , வீட்டிலும் சிகிச்சை பெற்று குணமான ஒருசில நோயாளிகளுக்கு , கருப்பு பூஞ்சை , வெள்ளை பூஞ்சை , மஞ்சள் பூஞ்சை என்று சிலவகை நோய்தொற்று ஏற்பட்டு பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர் . 

இதனால் ஒருசிலருக்கு கண் பார்வை பறிபோவதும் , சிலருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது . 

இந்த நோய் தொற்று எல்லாமே கொரோனா வந்து குணமானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்கி குறைவானவர்களுக்கு மட்டுமே வருகிறது என்று ஆய்வில் தெரிகிறது . 

ஆகவே கொரோனாவில் இருந்து குணமானவர்கள் வீட்டுக்கு சென்றாலும் தொடர் கண்காணிப்பிலோ , தொடர்பிலோ இருந்தால் ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . 

அதனால் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இவர்களுக்கு என்று ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டு . 

பூஞ்சை நோய் தொற்றிற்கு ஆளானவர்களுக்கு தேவையான மருந்துகளை முன்னரே இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் . அதோடு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தமிழக முதல்வர் காப்பீடு திட்டத்தில் சில நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது . 

அந்த அட்டவணையில் இந்த பூஞ்சை வகை நோய்களையும் சேர்த்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக