செவ்வாய், 29 ஜூன், 2021

அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது.- குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறி இருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றார்.

லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின் பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரது பங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார்.

அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும் நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும் மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார்.

நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மை ஆகியவை பாபாசாகேப்பின் நான்கு முக்கிய லட்சியங்களாக திகழ்ந்ததாக குடியரசுத் தலைவர் கூறினார். அவரது சிந்தனைகள் மற்றும் செயல்களில் இவை வெளிப்பட்டன. புத்தரின் செய்திகளை டாக்டர் அம்பேத்கர் பரப்பினார்.

கருணை, தோழமை, அகிம்சை, சமதர்மம் மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற இந்திய விழுமியங்களை மக்களிடையே எடுத்து சென்று, சமூக நீதியின் லட்சியத்தை அடைய அவர் முயற்சித்தார்.

பெண்களுக்கு சம உரிமை வழங்க பாகாசாகேப் என்றும் வாதிட்டார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவர் இயற்றிய அரசமைப்பில் ஆண்களுக்கு சமமான அடிப்படை உரிமைகள் பெண்களுக்கும் இருந்தன. சொத்து, திருமணம் மற்றும் வாழ்க்கையின் இதர விஷயங்களில் சம உரிமைகளை வழங்க தனி சட்டம் மூலம் தெளிவான சட்ட அடித்தளம் வழங்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக