ஞாயிறு, 27 ஜூன், 2021

போதை மருந்தில்லா பாரதம் திட்டத்தின் இணையதளத்தை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் தொடங்கி வைத்தார்


 சர்வதேச போதைப்பொருள் பாதிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை ஒட்டி, போதை மருந்தில்லா பாரதம் திட்டத்தின் இணையதளத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் திரு கிரிஷன் பால் குர்ஜார், திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு ரத்தன்லால் கட்டாரியா ஆகியோரின் முன்னிலையில்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் இன்று தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச போதைப்பொருள் பாதிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை ஒட்டி, போதைப்பொருள் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்த்து போராட நாம் உறுதியாக இருக்கிறோம் என்றும் இந்த கொடுமையை எதிர்த்து போரிட அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுக்கும் என்ற செய்தியை உலகத்திற்கு இந்நிகழ்ச்சி தெரிவிக்கும் என்றும் கூறினார்.

தமது அமைச்சகம் மேற்கொண்ட விரிவான தேசிய ஆய்வின் படி, 60 மில்லியனுக்கும் அதிகமானோர் நமது நாட்டில் போதை மருந்து பயன்படுத்துவதாகவும் இவற்றில் பெரும்பாலானோர் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் திரு தாவர்சந்த் கெலோட் கூறினார்.

போதை மருந்தில்லா பாரதம் திட்டம் குறித்த விரிவான தகவல்களை இன்று தொடங்கப்பட்ட இணையதளம் வழங்குகிறது. போதை மருந்தில்லா பாரதம் திட்ட செய்தி கடிதத்தின் சிறப்பு பதிப்பையும் அமைச்சர் வெளியிட்டார். ஒரு வாரம் நடைபெற்ற போதை மருந்தில்லா பாரதம் மாநாடு குறித்த தகவல்களும், இத்திட்டத்திற்காக நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்று உள்ளன. திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரையிலான அதன் செயல்பாடுகள் மற்றும் தாக்கம் குறித்த குறும்படம் ஒன்றும் அமைச்சரால் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக