செவ்வாய், 22 ஜூன், 2021

யோகாசனங்கள் சரியாகவும் முறையாகவும் செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக கணித அளவீடுகளைக் கொண்ட புதுமையான முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

 யோகாசனங்கள் சரியாகவும் முறையாகவும் செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக கணித அளவீடுகளைக் கொண்ட புதுமையான முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தசைகளின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான பரிசோதனை முறையான எலெக்ட்ரோமையோகிராபி (ஈஎம்ஜி) அடிப்படையிலான இந்த கணித அளவீட்டு முறையின் மூலம், யோகாசனங்கள் சரியாக செய்யப்படுகின்றனவா என்று கண்டறியலாம். இதன் மூலம் தேவையான மாற்றங்களை செய்து யோகா செய்பவர்கள் அதன் அதிகபட்ச பலனை பெறலாம்.

ராமையா மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் ரமேஷுடன் இணைந்து டாக்டர் எஸ் என் ஓம்கார் தலைமையேற்று நடத்திய இந்த ஆராய்ச்சி, தசை செயல்பாடுகளை யோகா மூலம் புரிந்துகொள்வதன் மீது கவனம் செலுத்தியது. உடல் மற்றும் மனம் சார்ந்த அளவீடுகளை ஆராய ஈஎம்ஜியை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக