ஞாயிறு, 27 ஜூன், 2021

அதிக திறனுடன் கூடிய விதை பதப்படுத்தும் ஆலையை ஜம்மு காஷ்மீரில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்


 நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தில் தனது கத்துவா மாவட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் இணைந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று, என அதிக குவின்டால் திறனுடன் கூடிய விதை பதப்படுத்தும் ஆலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 

16 லட்சம் விதை உற்பத்தி மற்றும் 24 லட்சம் விதை பதப்படுத்தல் திறன் கொண்ட ஆலை அப்பகுதியிலேயே முதல் முறையாக நிறுவப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டின் கவனத்தை கடந்த சில வருடங்களாக கத்துவா பெற்று வருவதாகவும், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இரு முறை இம்மாவட்டம் குறிப்பிடப்பட்டதாகவும் பெருமையுடன் கூறினார்.

இன்று திறக்கப்பட்டுள்ள ஆலையானது கத்துவா மாவட்டதிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களான பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கும் சேவையாற்றும்.

இதர இடங்களில் இருந்து விதைகளை பெறுவதற்கு இத்தனை ஆண்டுகளாக சிரமங்களை அனுபவித்த விவசாயிகளின் வீடுகளுக்கே தரமான விதைகள் இனி சென்றடையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம் அவர்களது பயிர்களின் தரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களால் தரமான விதைகளை குறைந்த விலையில் பெற முடியும். விவசாயிகளின் லாபம் இதன் காரணமாக அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக