புதன், 23 ஜூன், 2021

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிமலைகள் வேகமாக உருகுவதால், சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்வழிப் பாதைகள் மாறுகின்றன.


 பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிமலைகள் வேகமாக உருகுவதால், சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்வழிப் பாதைகள் மாறுகின்றன.

தெற்கு ஆசியாவில் ஹிமாலயா-கரகோரம் பகுதி, ஆசியாவின் தண்ணீர் கோபுரம் என அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் இங்கு அதிகமான பனி மலைகள் உள்ளன.  பருவநிலை மாற்றம் காரணமாக ஹிமாலயன்-கரகோரம் பகுதியில் உள்ள நதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்து கொள்வது முக்கியமானது. ஏனென்றால் இதன் தண்ணீர் வளத்தை நம்பி  கோடிக்கணக்கானோர் உள்ளனர்.

ஆறுகளில் வெள்ளம் ,  பனிமலை உருகுவது, பருவ காலத்தில்  வெள்ளப்பெருக்கு ஆகியவை 2050ம் ஆண்டு வரை அதிகரிக்கும்  என அறிவியல் இதழில் வெளியான ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு,  இந்தூர் ஐஐடி உதவி பேராசிரியர் டாக்டர் முகமது பரூக் அசாம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் 250 ஆய்வறிக்கையில் இருந்து முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இது பருவநிலை மாற்றம், மழைப் பொழிவு மாற்றம், பனிமலை உருகுதல் ஆகியவற்றுக்கு இடையோன தொடர்புகளை காட்டுகிறது. ஹிமாலயன் கரகோரம் ஆறுகளுக்கு பனிமலைகளும், பனி உருகுதலும் முக்கியமான கூறுகள் என இந்த ஆய்வுகள் காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக