செவ்வாய், 22 ஜூன், 2021

இந்திய பெருங்கடல் பகுதியில் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படை ஈடுபடும்.


 இந்திய பெருங்கடல் பகுதியில் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படை ஈடுபடும். ரொனால்ட் ரீகன் கெரியர் ஸ்டிரைக் குரூப் எனும் குழுவுடனான பயிற்சி 2021 ஜூன் 23 மற்றும் 24 அன்று நடைபெறும். இந்திய பெருங்கடல் பகுதியில் இக்குழு தற்போது உள்ளது.

இப்பயிற்சியில் நான்கு விமானப்படை தளங்களில் இருந்து இந்திய விமானப்படை வீரர்கள் பங்கேற்பார்கள். ஜாகுவார்கள் மற்றும் சு-39 எம்கேஐ போர் விமானங்கள், ஏ டபுள்யூ ஏ சி எஸ், ஏ ஈ டபுள்யூ & சி மற்றும் வானிலியே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானங்கள் இதில் ஈடுபடும்.

அமெரிக்க தரப்பில் இருந்து எஃப்-18 போர் விமானங்கள் மற்றும் ஈ-2சி ஹாக் ஐ ஏ ஈ டபுள்யூ & சி விமானங்கள் பங்கேற்கும் என தெரிகிறது. திருவனந்தபுரத்திற்கு தெற்கே மேற்கு கடல்பரப்பில் இரண்டு நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெறும்.

இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் செயல்பாடுகளில் விரிவான அனுபவம் இந்திய விமானப்படைக்கு உண்டு. அமெரிக்க கடலோர காவல் படையுடனான இந்த பயிற்சி நட்பு நாட்டுடன் இணைந்து கூட்டு செயல்பாடுகளை மேற்கொள்ள மற்றுமொரு வாய்ப்பை இந்திய விமானப்படைக்கு வழங்குகிறது.

ஒருங்கிணைந்த கடல்சார் செயல்பாடுகள், சிறந்த செயல்முறைகளை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட பலவற்றின் மீது இந்த கூட்டு பயிற்சி கவனம் செலுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக