புதன், 23 ஜூன், 2021

ஓஎஸ்பி (இதர சேவை அளிப்பவர்களுக்கான) வழிகாட்டுதல்கள் மேலும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு


 ஓஎஸ்பி-க்கான (இதர சேவை அளிக்கும் நிறுவனங்கள்) வழிகாட்டுதல்களை, தொலை தொடர்புத்துறை  மேலும் தாராளமயமாக்கியுள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். இந்த வெளியிடப் பணி நிறுவனங்கள்(பிபிஒ), இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஒலி அடிப்படையிலான சேவைகளை வழங்குகின்றன.  இன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள், ஓஎஸ்பி நிறுவனங்களுக்கு கடந்த 2020 நவம்பரில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்கியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் சிறப்பம்சங்கள்: 

அ. உள்நாட்டு மற்றும் சர்வதேச ஓஎஸ்பி நிறுவனங்களுக்கான வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு வசதிகளுடன் செயல்படும் ஒரு பிபிஓ மையம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கலாம்.

ஆ. ஓஎஸ்பி நிறுவனத்தின் எலக்ட்ரானிக் பிரைவேட், தானியங்கி கிளை அலுவலகம்(EPABX) உலகின் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். 

இ. உள்நாட்டு மற்றும் சர்வதேச ஓஎஸ்பி மையங்களின் வேறுபாட்டை நீக்கியதன் மூலம், அனைத்து வகை ஓஎஸ்பி நிறுவனங்களுக்கு இடையேயான உள் இணைப்புக்கு அனுமதிக்கப்படுகிறது. 

ஈ. ஓஎஸ்பி நிறுவனங்களின் தொலைதூர ஏஜெண்டுகள், தற்போது, ஓஎஸ்பியின் எந்த பிரவிலும் நேரடியாக இணைந்திருக்க முடியும். பிராட்பேண்ட், வயர்லெஸ் என எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம்.

உ. நிறுவனங்களின் ஓஎஸ்பி மையங்களுக்கு இடையோன தரவு உள்இணைப்புக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஊ. ஓஎஸ்பி ஒழுங்குமுறைகளில் இருந்து தரவு அடிப்படையிலான சேவைகளுக்கு தொலை தொடர்புத்துறை ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுதல் மற்றும் எங்கிருந்தும் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.  

எ. விதிமுறை மீறலுக்கான அபராதங்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன. இது தொழில்கள் மீது அரசு வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்கிறது.

ஏ. மேலும் தாராளமயமாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், இந்தியாவில் ஓஎஸ்பி தொழில் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும். இது இந்தியாவில் வருவாய்க்கும், வேலைவாய்ப்புக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.

தொலை தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு கடந்த 2007ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை  11.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2014-21-ல் 23.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது 102 சதவீத வளர்ச்சி. தகவல் தொழில்நுட்ப துறையில் கடந்த 2007-14-ல் நேரடி அன்னிய முதலீடு 7.19 பில்லியன் டாலராக இருந்தது. இது 2014-21-ல் 58.23 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது 710 சதவீத வளர்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக