வெள்ளி, 25 ஜூன், 2021

தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.


 தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.

இந்த துரித பரிசோதனை உபகரணத்தை  தில்லி ஐஐடியின் உயிரிமருத்துவ பொறியியல் துறை போராசிரியர் டாக்டர் ஹர்பல் சிங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த பரிசோதனை உபகரண தொடக்க விழாவில் தில்லி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவர்களை பாராட்டிய மத்திய அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே கூறியதாவது:

நாட்டில் கிடைக்கும் கொவிட் பரிசோதனை உபகரணத்தில், இந்த தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும். ஐஐடி தில்லியின்  வளங்களை பயன்படுத்தி இந்த உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்து பெருமையடைகிறேன் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தில்லி ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி.ராம்கோபால் ராவ், ‘‘ ரூ.399-க்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை உபகரணத்தை தில்லி ஐஐடி கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இது இந்த பரிசோதனை செலவை  குறைத்தது. தில்லி ஐஐடியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 8 மில்லியின் பிபிஇ உடைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்படும் கொவிட் துரித பரிசோதனை  உபகரணம், பரிசோதனையை எளிதாக்கும், ஊரக பகுதிகளில் குறைவான செலவில் பரிசோதனை மேற்கொள்ள உதவும் என நம்புகிறோம்’’ என்றார்.

இந்த கொவிட் துரித பரிசோதனை உபகரணத்தின் சிறப்பம்சங்களை பேராசிரியர் ஹர்பல் சிங் விளக்கினார். இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சான்றளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக