செவ்வாய், 29 ஜூன், 2021

இந்திய கடற்படையின் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் தபார் (INS TABAR) இரண்டு நாள் நல்லெண்ண பயணமாக எகிப்து அலெக்சாண்ட்ரியாவுக்கு சென்றடைந்தது.


 இந்திய கடற்படையின் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் தபார் இரண்டு நாள் நல்லெண்ண பயணமாக 2021 ஜூன் 27 அன்று அலெக்சாண்ட்ரியாவுக்கு சென்றடைந்தது. இந்தியாவும் எகிப்தும் சிறப்பான இருதரப்பு உறவை பகிர்ந்து வரும் நிலையில், இந்திய கடற்படை கப்பல்கள் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திற்கு அடிக்கடி சென்று வருகின்றன.

அலெக்சாண்ட்ரியா கடற்படை வீரர்கள் நினைவிடத்தில் ஐஎன்எஸ் தபார் தலைமை அதிகாரி கேப்டன் எம் மகேஷ் மற்றும் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர். அலெக்சாண்ட்ரியா கடற்படை தளத்தின் தளபதி, ரியர் அட்மிரல் அய்மன் அல்-டாலியை கேப்டன் எம் மகேஷ் சந்தித்தார்.

துறைமுகத்தில் இருந்து கிளம்பும் போது எகிப்து கடற்படை கப்பல் டவுஷ்காவுடன் கடல்சார் கூட்டு பயிற்சியில் ஐஎன்எஸ் தபார் ஈடுபட்டது. இந்திய மற்றும் எகிப்து கடற்படைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி அமைந்தது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிவதையும் நோக்கமாக கொண்டு ஐஎன்எஸ் தபாரின் பயணம் அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக