புதன், 23 ஜூன், 2021

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய திரு சஞ்சய் தோத்ரே, கல்வி, ஏழ்மை, சமமின்மை மற்றும் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை போக்குவதற்கு நாடு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.


 ஜி20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே 2021 ஜூன் 22 அன்று பங்கேற்றார். கலப்பு முறையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இத்தாலி ஏற்பாடு செய்திருந்தது.

கல்வி, ஏழ்மை மற்றும் சமமின்மையை, குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பது குறித்த தங்களது கருத்துகளை அமைச்சர்கள் பகிர்ந்து கொண்டனர். பெருந்தொற்றின் போது தரமான கல்வியை தொடர்ந்து கிடைக்க செய்ய மேற்கொள்ளப்பட்ட புதுமையான நடவடிக்கைகளை பகிரவும் அமைச்சர்கள் முடிவெடுத்தனர்.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய திரு சஞ்சய் தோத்ரே, கல்வி, ஏழ்மை, சமமின்மை மற்றும் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை போக்குவதற்கு நாடு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

பெருந்தொற்றின் போது கல்வி தடங்கல் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வது குறித்து பேசிய அவர், கலப்பு கல்வியை இந்தியா மும்முரமாக ஊக்குவித்ததாக கூறினார். திக்‌ஷா, ஸ்வயம் போன்ற மின்னணு-கற்றல் தளங்களில் பாடங்கள் பதிவேற்றப்பட்டதாகவும், இவற்றை யாரும், எங்கிருந்தும், எப்போதும் இலவசமாக பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மனோதர்பன் போன்ற ஆலோசனை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ள அரசு சிறப்பு கவனம் செலுத்தியதாக அவர் விளக்கினார். கூட்டத்தின் இறுதியில் பிரகடனம் ஒன்றை அமைச்சர்கள் நிறைவேற்றினர்.

கல்வி அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டு கூட்டமும் பின்னர் நடைபெற்றது. கல்வி அமைச்சகம் சார்பில் திரு சஞ்சய் தோத்ரேவும், தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ் கங்க்வாரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் பிரகடனம் ஒன்றை அமைச்சர்கள் நிறைவேற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக