சனி, 26 ஜூன், 2021

10 மாநில வனப் பகுதியில் தண்ணீர் மற்றும் கால்நடை தீவனம் அதிகரிப்பு திட்ட அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.


 அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் திரிபுரா ஆகிய 10 மாநிலங்களின் வனப் பகுதிகளில், தண்ணீர் மற்றும் கால்நடை தீவனத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.

வனப் பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனத்தை அதிகரிக்க லிடார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டம் ஜல்சக்தி அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான வாப்காஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மத்திய அரசு முதல் முறையாக மேற்கொள்ளும் இத்திட்டத்தில், வனப்பகுதிக்குள் தண்ணீர் மற்றும் தீவனங்கள் அதிகரிக்கப்படும்.

இதன் மூலம்  வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதும், அவைகளை மனிதர்கள் விரட்டும் சம்பவங்களும் குறையும்.  நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கும். இத்திட்டத்தை அமல்படுத்த காடு வளர்ப்பு நிதியை மாநில வனத்துறைகள் பயன்படுத்தும்படி மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்நிறுவனம் லிடார் தொழில்நுட்பத்தை (3டி டிஜிட்டல் மாதிரி) பயன்படுத்தி விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தது. பல வகையான மண் மற்றும் நீர் பாதுகாப்பு அமைப்புகளை அமைக்குப்படி இந்த திட்ட அறிக்கை பரிந்துரைத்துள்ளது.  இதில் பல வகையான நீர்த்தேக்கங்கள் அடங்கியுள்ளன. இவைகள் மழைநீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் உதவும்.

26 மாநிலங்களில், 261897 ஹெக்டேருக்கு மேற்பட்ட பகுதியில்  ரூ.18.38 கோடி செலவில் இத்திட்டம் வாப்காஸ் நிறுவனத்தால் அமல்படுத்தப்படவுள்ளது.  மீதமுள்ள 16 மாநிலங்களில் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் தீவனத்தை அதிகரிக்கும் கணக்கெடுப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக