வெள்ளி, 25 ஜூன், 2021

காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு .முருகேசன் என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதர்ச்சியயையும் , வருத்தத்தை ஏற்படுத்துகிறது . 

அன்னாரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் அதிகாரியே இப்படி அத்துமீறுவது வேதனைக்குரியது. ஒரு சில காவலர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீது பழி ஏற்படுகிறது. இதனால் நேர்மையான , கடமை தவறாத காவல்துறையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது .ஆகவே தவறு செய்த காவல் அதிகாரியின் மீது உடனடியாக , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதுபோல் இனிமேல் தவறு நடைபெறதவாறு பாத்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும் . 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது . 

ஆனால் அந்த தொகை போதுமானது இல்லை . உயிரிழந்த முருகேசன் அவர்களின் குடும்பம் அவரின் வருமானத்தை நம்பியே இருக்கிறது . அவரை நம்பி மனைவி , இரண்டு மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர் . அவர் சாதாரண மளிகை கடை நடத்தி தன் வாழ்வாதாரத்தை கவனித்து வந்துள்ளார் . 

ஆகவே அவரின் குடும்பத்தினரின் எதிர்கால நலனை முன்னிட்டு ரூ .50 | லட்சம் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும் . 

அதோடு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக