வெள்ளி, 25 ஜூன், 2021

சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC) ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார்.


 சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC)  ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார். ராணுவ உத்தி அம்சங்கள், கோட்பாடு திருத்தங்கள், செயல்பாட்டு சவால்கள், தயார்நிலை, தொழில்நுட்பத்தை புகுத்துதல் ஆகியவை குறித்து ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயாவையும், ராணுவ தளபதி ஜெனரல் நரவானே சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


அதன்பின் ராணுவத்தினரின் மனைவிகள் நலச்சங்க தலைவியையும் ராணுவ தளபதி சந்தித்து பேசினார். கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் தியாகம் செய்த வீரர் அங்குஸ் குடும்ப உறுப்பினரிடம் சேனா பதக்கத்தை வழங்கி ராணுவ தளபதி கவுரவித்தார். ராணுவத் தளபதி நாளை தில்லி திரும்புகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக