செவ்வாய், 29 ஜூன், 2021

உள் கட்டமைப்புக்கான செலவினங்கள் மத்திய அரசின் பட்ஜெட் செலவு மட்டுமே இல்லை என்றும் மாநில அரசுகளும் தனியார் துறையும் இதில் பங்கேற்க வேண்டும்.- திருமதி நிர்மலா சீதாராமன்


 உள்கட்டமைப்பு செயல்திட்டத்தை விவாதிப்பதற்காக மூத்த அதிகாரிகளுடன் காணொலி  கூட்டம் ஒன்றை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நடத்தினார். அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இது குறித்து நிதியமைச்சர் நடத்தும் ஆறாவது ஆய்வுக் கூட்டம் இதுவாகும்.

அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன செலவு திட்டங்கள், பட்ஜெட் அறிவிப்புகளின் செயல்படுத்துதல்கள் மற்றும் உள்கட்டமைப்பு மூலதனத்தை விரைவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டன.

நிதி செயலாளர், பொருளாதார விவகாரங்கள் செயலாளர், பொதுத்துறை நிறுவனங்கள் துறை செயலாளர், எஃகு துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை செயலாளர், விண்வெளித் துறை செயலாளர், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், தலைமை செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னேற்றத்தை ஆய்வுசெய்த நிதியமைச்சர், மூலதன செலவை விரைவுபடுத்தி அதிகப்படுத்துமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தை கேட்டுக்கொண்டார். மூலதன செலவை மேம்படுத்தி தனியார் முதலீட்டை ஊக்குவிக்குமாறு எஃகு அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டது. சொத்துக்களை பணமாக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டது. முடிந்தவரை உள்நாட்டிலேயே கொள்முதல் விலை செய்யுமாறு விண்வெளி துறை கேட்டுக்கொள்ளப்பட்டது.

உள் கட்டமைப்புக்கான செலவினங்கள் மத்திய அரசின் பட்ஜெட் செலவு மட்டுமே இல்லை என்றும் மாநில அரசுகளும் தனியார் துறையும் இதில் பங்கேற்க வேண்டுமென்றும் திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக