திங்கள், 28 ஜூன், 2021

இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


 இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது என்றும் இது இரு பிரிவினருக்கும் நன்மை பயக்கும் என்றும் வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இரண்டாம் பொது சுகாதார உச்சி மாநாடு 2021-ல் பேசிய அவர், சுகாதார சேவைகள், பரிசோதனை வழங்கல், தடுப்பு மருந்து உருவாக்கம், ஆராய்ச்சி & மேம்பாடு, ஊரக பகுதிகளுக்கான தொலைமருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகளின் டிஜிட்டல் விநியோகம் உள்ளிட்ட பலவற்றில் தொழில் துறை மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடனான இந்த கூட்டு மூலம் பணியாற்றலாம் என்றார்.

சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டு திருப்புமுனையாக அமையும் என்றும், இந்திய சுகாதார துறையை உண்மையாகவே மாற்றியமைக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை குறித்து பேசிய அவர், 32 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி உலகிலேயே வேகமாக தடுப்பு மருந்துகளை வழங்கிய நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக