பிரகாஷ் ஜவடேகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரகாஷ் ஜவடேகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூலை, 2021

74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக்கூடத்தை தொடங்கி வைத்தார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்


 பெருந்தொற்றிலிருந்து உலகம் விரைவில் மீண்டு மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று 74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவைத் தொடங்கி வைத்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக் கூடத்தின் காணொலி வாயிலான திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரண்டாவது ஆண்டாக காட்சிக்கூடங்கள் காணொலி வாயிலாக நடத்தப்பட்டாலும், இதில் இடம்பெற்றுள்ள படைப்புத்திறன், திறமை, தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் உண்மையானது என்றும், இவற்றில் மிக சிறந்தவற்றையே இந்தியா வழங்குவதாகவும் கூறினார். “வருங்கால உலக திரைப்படம் குறித்து விவாதிக்கும் தளமாக இந்த மெய்நிகர் இந்திய காட்சிக்கூடம் செயல்படலாம்”, என்று அவர் குறிப்பிட்டார்.

திங்கள், 5 ஜூலை, 2021

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.


 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.

ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பு, 51-வது பதிப்பின் வெற்றியை தொடர்ந்து கலப்பு முறையில் நடைபெறும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் இது நடத்தப்படுகிறது.

செவ்வாய், 29 ஜூன், 2021

NATRAX- the High Speed Track(HST) நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்


 கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை இன்று திறந்து வைத்தார். 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட நாட்ராக்ஸ், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக டிராக்டர் டிரெய்லர்கள் வரையிலான பல்வேறு வகை வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்கான ஒரே தளமாக விளங்கும்.

சனி, 26 ஜூன், 2021

10 மாநில வனப் பகுதியில் தண்ணீர் மற்றும் கால்நடை தீவனம் அதிகரிப்பு திட்ட அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.


 அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் திரிபுரா ஆகிய 10 மாநிலங்களின் வனப் பகுதிகளில், தண்ணீர் மற்றும் கால்நடை தீவனத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.

வனப் பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனத்தை அதிகரிக்க லிடார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டம் ஜல்சக்தி அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான வாப்காஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

புதன், 2 டிசம்பர், 2020

கார்பன் வெளியேற்றத்தை குறைக்க, தொழிற்சாலைகளின் தன்னார்வ பங்கேற்பு முக்கியம்’’ என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.


காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை குறைப்பதற்கான அரசாங்க முயற்சிகளில் பொது மக்களுக்கும் தொழில்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று மத்திய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கார்பன் உமிழ்வைக் குறைக்க தொழில்களை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட "தொழிற்துறை பரிமாற்றக் குழு" உச்சி மாநாட்டில் உரையாற்றிய திரு. ஜவடேகர், உலக கார்பன் உமிழ்வில் 30 சதவீதம் தொழில்கள் பங்களிப்பு செய்கிறார் என்றார். இத்தகைய சூழ்நிலையில், காலநிலை மாற்றத்தை சமாளிக்க குறைந்த கார்பன் உமிழ்வுகளுக்கு தொழில்களைத் தயாரிப்பது மிகவும் முக்கியம்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

திரைப்படத் தயாரிப்புக்கான தர நிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்

 

திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்படத் தயாரிப்புகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் உள்ள சூழ்நிலையில், தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி, தொடரும் போது, திரைப்படத் தயாரிப்பில் தொடர்புடைய பல்வேறு துறையினரும், நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

“நகர வனங்கள்” நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மீட்டுருவாக்கம் செய்யும்: திரு பிரகாஷ் ஜவடேகர்.


அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 “நகர வனங்கள்” நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நகரங்களில் பழங்கால பாரம்பரியமிக்க கிராமக் காடுகளை நகர்ப்புறக் காடுவளர்ப்புத் திட்டம் மீட்டுருவாக்கம் செய்யும்: திரு பிரகாஷ் ஜவடேகர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 நகர்ப்புறக் காடுகளை உருவாக்குவதற்கான நகர வனத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.  வனத்துறை, நகராட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் ஆகியோரின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பை புதுப்பித்து இந்தத் திட்டமானது செயல்படுத்தப்படும்.  உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.   சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை அமைச்சகமானது ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் (UNEP) அறிவிக்கும் மையக்கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும்.  இந்த ஆண்டின் மையக்கருத்து ”பல்லுயிர்ப்பெருக்கம்” என்பதாகும்.  தற்போது நிலவி வரும் கோவிட்-19 பெருந்தொற்று காலச்சூழலைக் கருத்தில் கொண்டு அமைச்சகம் இந்த ஆண்டின் மையக்கருத்தோடு கூடுதலாக நகர வனங்கள் என்பதையும் வலியுறுத்தி சுற்றுச்சூழல் தினத்தை மெய்நிகர் முறையில் கொண்டாடுகிறது.

நகரக்காடுகள் குறித்த சிறந்த நடைமுறைகள் என்ற விளக்கப்பிரசுரத்தை வெளியிட்டும் நகர வனங்கள் திட்டத்தை அறிவித்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் உரையாற்றினார்.  இந்த நகர வனங்கள் நகரங்களின் நுரையீரல் போன்று செயல்படும்.  நகரத்தில் உள்ள வனப்பகுதிகள் அல்லது உள்ளூர் நகராட்சி அமைப்புகள் ஒப்படைக்கும் காலி நிலத்தில் இந்த நகர வனங்கள் முதன்மையாக அமைக்கப்படும்.  பல்லுயிர்ப் பெருக்கம் என்பதை சிறப்பு கவனத்தில் கொண்ட இந்த ஆண்டின் மையக்கருத்தான இயற்கைக்கான நேரம் என்பதை வலியுறுத்திப் பேசிய திரு ஜவடேகர் “நாம் இயற்கையைப் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்” என்பதே அடிப்படைக் கொள்கை ஆகும் என்று குறிப்பிட்டார்.