சஞ்சய் தோத்ரே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஞ்சய் தோத்ரே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஜூலை, 2021

பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்கிறது, மத்திய அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே தலைமை தாங்குகிறார்

 நாளை நடைபெறும், 8 வது பிரிக்ஸ் கல்வி அமைச்சர்கள் கூட்டத்துக்கு, மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, காணொலி வாயிலாக தலைமை தாங்குகிறார். இந்தியா நடத்தும் 13வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின், ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடக்கிறது.  இதில் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ள 5 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளுடன் கலந்து கொள்கின்றனர்.

வெள்ளி, 25 ஜூன், 2021

தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.

 தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.

இந்த துரித பரிசோதனை உபகரணத்தை  தில்லி ஐஐடியின் உயிரிமருத்துவ பொறியியல் துறை போராசிரியர் டாக்டர் ஹர்பல் சிங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.