அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்திய குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது: ரவிசங்கர் பிரசாத்
அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்தியக் குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் சட்டம், நீதித் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், இப்போதைய நோய்த் தாக்குதல் சூழ்நிலையில், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற மூன்று வசதிகள் காரணமாக, மக்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற முடிகிறது, மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது, தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினிகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க முடிகிறது, நோயாளிகள் தொலைவில் இருந்தே ஆலோசனை பெற முடிகிறது, இந்தியாவில் எளிதில் அணுக முடியாத தொலை தூரங்களில் இருக்கும் விவசாயிகளும் பிரதமரின்-கிசான் திட்டப் பயன்களை தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெற முடிகிறது என்று கூறினார்.