ராம்நாத் கோவிந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராம்நாத் கோவிந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2022

கோவில்கள் என்பவை இந்து சமயத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நிலையில், இவை புனிதமான இடங்களாகும்.- ராம்நாத் கோவிந்த்


 கோவில்கள் என்பவை இந்து சமயத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நிலையில், இவை புனிதமான இடங்களாகும். இவற்றின் மெய்சிலிர்ப்பாக அல்லது சக்தியாக அல்லது ஆழமான பக்தி உணர்வாக தெய்வநிலை இருப்பதாக பக்தர்கள் உணர்கிறார்கள். இது போன்ற இடங்களுக்கு வரும்போது ஒருவர் இந்த உலகத்தையும், அதன் பின்னால் உள்ள சப்தத்தையும் விட்டுவிட்டு அமைதி உணர்வில் உறைகிறார்கள்.  மற்றொரு நிலையில், வழிபாட்டிடம் என்பதைவிட, உயர்ந்ததாக கோவில்கள் கருதப்படுகின்றன. இவை சங்கம இடம் போன்று இருக்கின்றன. அல்லது கலை, கட்டடக்கலை, மொழி, ஞான பாரம்பரியங்கள், ஆகியவற்றின் புனித சங்கமமாகவும்  இருக்கின்றன.

செவ்வாய், 14 ஜூன், 2022

பெங்களூரு தேசிய ராணுவப் பள்ளியின் பவள விழாக் கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை


 பெங்களூரு தேசிய ராணுவப்பள்ளியின் பவள விழாவை கொண்டாடுவதற்கான இந்த சிறப்புமிகு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இங்கு பயிற்சி பெறும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள்,  முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, தற்போது நாட்டில் உள்ள மிகச்சிறந்த உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.

திங்கள், 6 ஜூன், 2022

உத்தரப்பிரதேச சட்டமன்ற இருஅவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்


லக்னோவில் உத்தரப்பிரதேச சட்டமன்ற இருஅவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 6, 2022) உரையாற்றினார்.

 இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முக தன்மை அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகின்றன. இந்த மாநிலத்தின் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகவும் நல்ல உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

புதன், 16 பிப்ரவரி, 2022

மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய தர்பார் மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைத்தார் (பிப்ரவரி 11, 2022). 

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மகாராஷ்டிரா ஆன்மீக பூமி என்பது போலவே, அநீதிக்கு எதிராக போராடும் வீரம் செறிந்த பூமியும் ஆகும்.  மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும்.  இந்த மாநிலம் திறமை மற்றும் இயற்கை அழகை கொண்டுள்ளது.  இத்தகைய சிறப்புகள் காரணமாக நான் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும்,  வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் மகாராஷ்டிராவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருகின்றனர்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்தின் உரை


 கொரோனா வைரசால் ஏற்பட்ட பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த ஆண்டுகளில் இந்திய மக்கள் ஜனநாயக மாண்புகள், கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவற்றில் அளப்பரிய மதிப்பை வெளிப்படுத்தினார்கள். சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை குறிக்கும் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடும் நிலையில், ஒவ்வொரு இந்தியரின் மனஉறுதியும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்த நம்பிக்கையுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்திலிருந்து இந்தியர்கள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற இரு அவைகளில் உரையாற்ற இன்று கூடியிருக்கும் தருணத்தில் தங்களின் கடமைகளுக்கு மிக உயரிய முன்னுரிமை அளித்து, இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாத்த லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுக் கால நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பு செய்த மகத்தான அனைத்து ஆளுமைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

ராம்னா காளி கோயில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்களிடையே ஆன்மீக, கலாச்சார பிணைப்பின் அடையாளமாக இருக்கிறது : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


 பங்களாதேஷ் பயணத்தின் நிறைவு நாளில் (டிசம்பர் 17, 2021)  குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் டாக்காவில் இந்திய சமூகத்தினர் மற்றும் 

இந்தியாவின் நண்பர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பங்களாதேஷுக்கான ஹை கமிஷனர் திரு விக்ரம் கே துரைசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் டாக்காவில் புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ராம்னா காளி கோயில் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பெருமையைத் தாம்  கொண்டிருந்ததாக அங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர்  தெரிவித்தார். விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகளால் அழிக்கப்பட்ட இந்தக் கோயிலைப் புனரமைக்க பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் அரசுகளும், மக்களும் உதவி செய்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்களிடையே ஆன்மீகம் மற்றும் கலாச்சார பிணைப்பின் அடையாளமாக இந்தக் கோயில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

நாட்டில் இப்போதுள்ள சவால்களையும், நவீன கால அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இளம் வீரர்களின் உடல் நலமும், மன வளமும் உறுதியாக இருக்க வேண்டும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 ஜெனரல் பிபின் ராவத் ஒரு அசாதரணமான ராணுவ தலைவர்: அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப இயலாது என்று குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். டேராடூனில் நடைபெற்ற இந்திய ராணுவ அகாடமி யின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். 

முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மறைவால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து நாடு இன்னும் மீளாத நிலையில் நாம் இங்கு கூடியுள்ளோம் என்று குடியரசு தலைவர் கூறினார். உத்தரகாண்ட் அவரது சொந்த மாநிலம். இந்திய ராணுவ அகாடமியில் அவர் பயிற்சி பெற்றார். அவரது திறமைக்காக அவருக்கு இங்கு ஸ்வோர்ட் ஆப் ஆனர் எனப்படும் விருது வாள்  வழங்கப்பட்டது. இந்த சோகமான சம்பவம்  நடக்காமல் இருந்திருந்தால், இன்று நம்மிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார் என்று அவர் கூறினார்.

புதன், 8 டிசம்பர், 2021

இந்தியக் கடற்படையின் 22 ஆவது ஏவுகணை வாகன அணிக்குக் கொடி விருதினை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்


 மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (டிசம்பர் 8, 2021)  இந்தியக் கடற்படையின் 22-ஆவது ஏவுகணை வாகன அணிக்கு குடியரசுத் தலைவரின் கொடி விருதினைக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த சாதனையை அடைந்ததற்காக 22 ஆவது ஏவுகணை வாகன அணியோடு இணைந்துள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  இந்த அணி நமது நாட்டிற்குக் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் இதன் அதிகாரிகளாலும், மாலுமிகளாலும் செய்யப்பட்ட மிகச்சிறந்த சேவைக்கான சான்றாக இந்த விருதளிப்பு இருப்பதாக அவர் கூறினார்.

செவ்வாய், 7 டிசம்பர், 2021

மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட் கோட்டைக்கு சென்ற குடியரசு தலைவர், சிவாஜி சமாதியில் மரியாதை செலுத்தினார்


 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் கோட்டைக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று சென்றார்.  சத்ரபதி சிவாஜி மகராஜுக்கு அவரது சமாதியில் மரியாதை செலுத்தினார்.

சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பை பெற்றதை தாம் பாக்கியமாக கருதுவதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்தப் பயணம் தனக்கு ஒரு புனிதப் பயணம் என்றும் அவர் கூறினார்.

சிவாஜி தலைமையின் கீழ், இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்தின் பெருமை அதிகரித்ததாகவும், தேசபக்தி உணர்வு மீண்டும் ஏற்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பவர்கள் என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய நாடாளுமன்றக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் அன்று (நவம்பர் 26, 2021) அவர் உரையாற்றினார்.

வியாழன், 25 நவம்பர், 2021

கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்  கோவிந்த் தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எச்பிடியு) நூற்றாண்டு விழாவில் அன்று (நவம்பர் 25, 2021) அவர் உரையாற்றினார்.

சனி, 20 நவம்பர், 2021

தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்கினார்.


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில், புதுதில்லியில் அன்று (20.11.2021) நடைபெற்ற தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்குவது இந்தாண்டு முக்கியத்துவம் பெறுவதாக கூறினார். “கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மை” என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறி வந்ததை சுட்டிக்காட்டிய அவர், தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம், காந்தியின் இந்த முன்னுரிமைப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்வதாக கூறினார். நாட்டை முற்றிலும் தூய்மையான மற்றும் சுத்தமானதாக மாற்ற முயற்சி மேற்கொள்வதே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளி, 8 அக்டோபர், 2021

நமது தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் இரண்டிற்குமான அணுகல் ஒன்றிணைந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க முடியும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 நமது தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் இரண்டிற்குமான அணுகல் ஒன்றிணைந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க முடியும் என நாம் நம்பலாம் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார்.

கர்நாடகாவின் சாமராஜநகரில் சாமராஜநகர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட கற்பித்தல் மருத்துவமனை திறப்பு விழாவில் அன்று (அக்டோபர் 7, 2021) பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமது பார்வையில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை அடித்தளங்களை உருவாக்கும் இரண்டு துறைகள் சுகாதாரம் மற்றும் கல்வி என்று குடியரசுத் தலைவர் கூறினார். சாமராஜநகர் மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்த இரண்டையும் தனக்குள் இணைக்கிறது.

சனி, 18 செப்டம்பர், 2021

நமது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றும் போது இந்தப் பொதுவான பொறுப்புணர்ச்சியை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 அமைப்பு முறை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துவதற்கு தணிக்கை நடவடிக்கைகள் தனித்துவம் வாய்ந்த வாய்ப்பாக அமைவதுடன், நடைமுறைகளின் மேம்படுத்துதலை பரிந்துரைக்கும் உயரிய நிலையை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வகிப்பதாக குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். சிம்லாவின் தணிக்கை மற்றும் கணக்கியல் தேசிய அகாடமியில் நடைபெற்ற 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் அலுவலர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஹிமாச்சலப் பிரதேச மக்களால் கடந்த 50 வருடங்களாக எழுதப்பட்டு வரும் வளர்ச்சி சரித்திரம் குறித்து அனைத்து இந்தியர்களும் பெருமை அடைகிறார்கள்.- திரு ராம்நாத் கோவிந்த்


 ஹிமாச்சலப் பிரதேச மக்களால் கடந்த 50 வருடங்களாக எழுதப்பட்டு வரும் வளர்ச்சி சரித்திரம் குறித்து அனைத்து இந்தியர்களும் பெருமை அடைகிறார்கள் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ஹிமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி கூட்டப்பட்ட அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் இன்று பேசிய குடியரசுத் தலைவர், இந்த வளர்ச்சி பயணத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் அனைத்து முந்தைய அரசுகளும் முக்கிய பங்கை வகித்துள்ளதாக கூறினார்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

நீதித்துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 நமது அரசமைப்பின் அனைத்தையும் உள்ளடக்கிய லட்சியங்களை நாம் அடைய வேண்டுமென்றால், நீதித்துறையிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் அன்று (2021 செப்டம்பர் 11) நடைபெற்ற உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்ற கட்டிட வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

‘சமுத்திர சேது’ மற்றும் ‘மிஷன் சாகர்’ ஆகியவற்றின் கீழ் இந்தியாவின் கொவிட் சேவைகளில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.- குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 பிராந்திய உறுதிகளை பூர்த்தி செய்வதிலும், இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான நமது ராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை இந்திய கடற்படை எடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார்.

‘சமுத்திர சேது’ மற்றும் ‘மிஷன் சாகர்’ ஆகியவற்றின் கீழ் இந்தியாவின் கொவிட் சேவைகளில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்து இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நமது கடல்சார் அண்டை நாடுகள் மற்றும் பங்குதாரர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை அளித்தது. இந்திய கடற்படை பகுதியில் ‘விரும்பத்தக்க பாதுகாப்பு பங்குதாரர்’ மற்றும் ‘முதல் செயல்பாட்டாளர்’ எனும் இந்தியாவின் லட்சியத்தை நெருக்கடியின் போது இந்திய கடற்படையின் சிறப்பான செயல்பாடு வெளிப்படுத்தியது என்று கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சாவில் நடைபெற்ற இந்திய கடற்படை விமானப்பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் வண்ணம் (பிரெசிடெண்ட் கலர்) வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய திரு கோவிந்த் கூறினார்.

திங்கள், 6 செப்டம்பர், 2021

கடற்படையினர் தங்களின் தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை தொடர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.- திரு ராம்நாத் கோவிந்த்


 இந்திய கடற்படையின் விமானப் பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குவதற்காக உங்கள் முன் நிற்பது எனக்கு பெருமை. நாட்டுக்கான சேவையில் இப்பிரிவு 68 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளதால், கடற்படை விமானப்பிரிவு வரலாற்றில் இது உண்மையிலேயே முக்கியமான நிகழ்வு.

இந்த சாதனையை படைத்த கடற்படையின் முன்னாள், இன்னாள் வீரர்களுக்கு வாழ்த்துகள். போர் மற்றும் அமைதி காலத்தில் நாட்டுக்கு ஆற்றிய  தனித்துவமான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் கொடி இன்று அளிக்கப்படுகிறது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை ஒன்றிணைக்கும் முக்கிய பொறுப்பு ஆசிரியர்களின் வசம் உள்ளது. - குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை ஒன்றிணைக்கும் முக்கிய பொறுப்பு ஆசிரியர்களின் வசம் உள்ளது; ஆளுகை, சமூகம் மற்றும் தேசத்தை கட்டமைப்பவராக சிறந்த ஆசிரியர் செயல்படுகிறார் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார்.‌ ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 44 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளைக் காணொலி வாயிலாக வழங்கும் நிகழ்ச்சியில் இன்று அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசுத் தலைவர், எதிர்கால தலைமுறையினர் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் கைகளில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற தனது நம்பிக்கையை இதுபோன்ற ஆசிரியர்கள் வலுப்படுத்துவதாகக் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட திரு ராம் நாத் கோவிந்த், மக்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வார்கள் என்றும், அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்களை வளர்க்கும் ஆசிரியர்கள், அவர்களுக்கான உரிய மரியாதையை எப்போதும் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நாட்டின் பெருமைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் உணர்வுதான் அந்த லட்சியம்.- குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 லக்னோவில் உள்ள கேப்டன் மனோஜ் குமார் பாண்டே உ.பி.சைனிக் பள்ளியின் வைர விழா நிறைவு கொண்டாட்டத்தில், குடியரசுத் தலைவர்  திரு ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் சம்பூர்ணானந்த் சிலையை அவர் திறந்து வைத்தார். டாக்டர் சம்பூர்ணானந்த் பெயரில் கட்டப்பட்ட ஆடிட்டோரியத்தை அவர் திறந்து வைத்தார். பள்ளியின் திறனை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டங்கள், பள்ளியில் மாணவிகளுக்கு விடுதிகள் போன்றவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.